1. ஒரு ஜாதகத்தில் சனி 10ல் இருந்தால் 40 வயதிற்கு மேல் தான் யோகம் என்கிறார்கள், உண்மையா? எண் ஜாதகத்தையும் ஆராய்ந்து கூறுங்களேன்? - தண்டபானி, வேலூர்...
உண்மைதான், ஆனால் ஒரு ஜாதகத்தில் 1, 4, 7 ,10 போன்ற வீடுகளில் சனி இருப்பவர்கள் அடிக்கடி மொட்டை போட்டுக் கொண்டால் யோகத்தை இளமையான வயதிலே அனுபவிப்பீர்கள். பெண்களாக இருந்தால் பூ முடி தரவேண்டும். உங்கள் ஜாதகத்தில் சனி 1ல் இருப்பதால் மேற்கூறிய பரிகாரத்தை பின்பற்றுங்கள்.
2. இரண்டு வருடத்திற்கு முன்பு ஜாதகம் ஒருவரிடம் பார்த்தேன் 22 வயதில் உங்களுக்கு சுக்கிரதசை ஆரம்பம். அது முதல் யோகம்தான் என்று கூறினார். இப்போது எனக்கு 24 வயது நடக்கிறது யோகமே இல்லை எப்போது தான் நல்ல காலம் பிறக்கும்? - பாண்டியன், சேவூர்.
சிம்ம லக்னம், சூரியன் புதன் இருவரும் 12ல் உள்ளனர் சுக்ரன் 2ல் நீசம், சந்திரன் 4ல் நீசம், உங்களுக்கு லக்னாதிபதி சூரியன் வலிமை இழந்தார். குடும்பாதிபதி 2க்குரிய புதனும் வலிமை இழந்தார். களஸ்த்திரகாரன் சுக்ரனும் வலிமை இழந்து நீசமானார். மனக்காரகன் சந்திரனும் வலிமை இழந்து நீசமானார். உங்களுக்கு நான் என்ன கூறுவது என்றே தெரியவில்லை.
கடவுள் வழிபாடு தவறாமால் செய்யுங்கள்... நல்ல கர்மா... ஒன்றே உங்களுக்கு வழிகாட்டும்... பிறப்பு கர்மா தான் ஜாதகம்... நீங்கள் செய்யும் நல்ல கர்மாக்கள் ஒன்றே பரிகாரம்...
3. என் ஜாதகப்படி வட்டி வணிகம் செய்யலாமா? - ராம்குமார், திருவலம்.
தனத்திற்கதிபதி குரு, வட்டியை வளர்ப்பவர் சுக்கிரன், கடன் காரர்களை குறிப்பவர் சனி. எனவே குரு, சுக்கிரன், சனி ஆகிய மூவரும் தொழில் ஸ்தானமெனும் 10ம் இடத்தோடு தொடர்பு இல்லை. வட்டி வணிகம் வேண்டாம். சீட்டுக் கம்பெனியும் உங்களுக்கு வேண்டாம்.
4. எனக்கு அரசியல் வாய்ப்பு எப்படி? - ஜோதிபிரகாசம், ஓட்டேரி.
உங்களுக்கு கன்னி லக்னம் 8ல் சூரியன் பொதுவாக 8ல் சூரியன் மறைந்தால் அரசியலில் வெற்றிபெற முடியாது. இது எல்லா லக்னத்திற்கும் பொருந்தும். மற்ற கிரகநிலையும் உங்களுக்கு ஒ.கே சொல்லவில்லை. அரசியல் உங்களுக்க வேண்டாம்.
5. எனக்கு 7ல் செவ்வாய் உள்ளது தீய பலன்களை தருமா? - கோபால், ஆம்பூர்.
சில நற்பலன்களும், தீய பலன்களும் உண்டு, அன்பு உள்ளவராகவும், துணிவு உள்ளவராகவும், சிற்றின்ப நாட்டமுள்ளவராகவும் திகழகூடும். ஆனால் இந்த செவ்வாய் திருமண காலத்தை தாமத படுத்துவார்.
6. லக்னத்திற்கு 12ல் பாபகிரகம் இருந்தால் என்ன செய்யும்? - பாபு, வளத்தி..
12ல் உள்ள பாபகிரகம் பயனில்லாத காரியங்களிலும், வழக்குகளிலும், வெற்றியை தராத தொழில் துறைகளிலும் பொருள் இழக்கலாம்.
உங்கள் ஜோதிட கேள்விகள் அனுப்பவேண்டிய முகவரி
மின்னஞ்சல் முகவரி ksm.news2015@gmail.com
“ஜோதிட சாம்ராட்” எம்.எஸ்.மகேந்திரன் ✍