ஒரு மனிதனுக்கு துணிவைக் கொடுக்கக்கூடிய கிரகம் செவ்வாய் . ஜாதகத்தில் செவ்வாய் நன்றாக இருப்பவர்கள் அபாயச்சூழல் நிறைந்த வேலைகள், சவாலான வேலைகள் என்று எதையும் பிரித்துப் பார்க்காமல் துணிந்து செய்யக் கூடியவர்கள். அவர்களுக்கு மனபயம் இருக்காது. துக்கம், கஷ்டங்கள், மரணபயம் போன்றவைகளை அவர்கள் சீரியஸாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள் சிலர் ஊழல் செய்வதற்கோ, அவமானத்திற்கோ, அல்லது தண்டனைக்கோ பயப்படாமல் இருப்பார்கள். அதே செவ்வாய் வேறு ஒரு கிரகக் கூட்டணியால் அல்லது பார்வையால் அவர்களுக்கு அந்த வித்தியாசமான துணிவைக் கொடுக்கும்.
குணங்களில், துணிவு, பொறுமை, தன்னம்பிக்கை, தலைமை தாங்கிச் செல்லும் தன்மை ஆகியவற்றை ஒரு ஜாதகனுக்குக் கொடுப்பவர் அவர்தான். சட்டென்ற கோபம் (short-tempered) அதிரடி, அடிதடி, வாக்குவாதம், விதண்டாவாதம் ஆகிய குணங்களுக்கும் அதிபதி அவர்தான்.
செவ்வாய்தான் கிரகங்களில் ராணுவ அதிகாரியைப் போன்றவர். வீரர்களின் நாயகன் அவர்தான். யுத்தத்தின் நாயகனும் அவர்தான். ராணுவத் தளபதிகள், ராணுவ அதிகாரிகள், ராணுவ வீரர்கள் மற்றும் காவல்துறையில் பணியாற்றுபவர்களுக்கு செவ்வாய்தான் நாயகன்!
தொழில்நுட்ப அறிவிற்கும், இயந்திரங்கங்களை வடிவமைத்தல் மற்றும் இயந்திரங்களை லாவகமாகக் கையாளும் அறிவிற்கும், திறனுக்கும் ஆற்றலிற்கும் அவரே அதிபதி. நாட்டில் சட்டம், ஒழுங்கு, எரிபொருள் போன்றவற்றிற்குக்கான காரகன் அவர்தான். மனஉறுதி, தன்முனைப்பு, ஆற்றல், நிவாகத்திறன், சுதந்திர மனப்பான்மை ஆகிய அற்புத மனித குணங்களுக்கும் அவர்தான் அதிபதி.
ஜாதகனின் உடன்பிறப்புக்களுக்கும் அவர்தான் காரகன். உடன் பிறப்புக்களுடான நல்ல உறவுகளுக்கும், அல்லது அவர்களோடு ஏற்படும் மனக் கசப்புக்களுக்கும் அவரே காரகர் (Authority) நெருப்பு, மற்றும் இரத்தத்திற்கும் அவரே காரகன் செவ்வாயைக் குறிக்கும் மற்ற பெயர்கள்.
- அங்காரகன், குஜன் ஆங்கிலத்தில் Mars.
- செவ்வாய் கிரகத்தின் நிறம் சிவப்பு!
- கடகம் மற்றும் சிம்ம லக்கினங்களுக்கு செவ்வாய் யோககாரகன்
- நவரத்தினங்களில் செவ்வாய்க்கு உரியது பவளம்.
- இந்திய எண் கணிதத்தில் செவ்வாய்க்கு உரிய எண் 9
- செவ்வாய்க்கு உரிய தெய்வங்கள் சுப்பிரமணியர், பத்ரகாளி
1. ஜாதகத்தில் செவ்வாய் உச்சமாகவோ அல்லது 1,4,9,10ஆம் வீடுகளில் அமர்ந்திருந்து தனது சுய வர்க்கத்திலும் 8 பரல்களைப் பெற்றிருந்தால் ஜாதகன் கோடீஸ்வரனாக உயர்வான். தன் திறமை மற்றும் செயல் ஆற்றும் தன்மையால் பெரும் செல்வம் ஈட்டுவான்.
2. தனுசு, சிம்மம், மேஷம், கடகம், மகரம் ஆகிய ஏதாவது ஒன்று லக்கினமாக இருந்து, அதில் செவ்வாயும் இருந்து, சுய வர்க்கப்பரல் களும் 4-க்கு மேல் இருந்தால், ஜாதகன் ஆட்சியாளனாக இருப்பான் அல்லது அதிகாரம் மிக்கவனாக இருப்பான். ஆட்சியாளன் என்றவுடன் இந்தியாவின் பிரதமர் பதவி வரும் என்று நினைக்க வேண்டம். கிராம முன்சீப் பதவி அல்லது நகர சேர்மன் பதவிகூட ஆட்சிப் பதவிதான்..
3. சுய வர்க்கத்தில் 8 பரல்களை உடையவர்கள், தாங்கள் பங்கு பெற்றுள்ள துறையில் உச்சமான பதவியை அடைவார்கள். வங்கியில் குமாஸ்தாவாகச் சேருகிறவன், படிப்படியாக முன்னேறி அதே வங்கியின் தலைமை அதிகாரியாக ஒருநாள் உயர்வான். துவக்கத்தில் ஒரு இசைக்குழுவில் ஆர்மோனியம் அல்லது கீ போர்டு வாசித்துக் கொண்டிருப்பவன் திடீரென ஒரு நாள் நாடறிந்த இசை அமைப்பாளனாக உயர்ந்து விடுவான், அதெல்லாம் செவ்வாயின் உற்சாகமான சேட்டைகள்.
4, இரண்டாம் வீட்டிலோ அல்லது ஆறாம் வீட்டிலே செவ்வாய் அமர்ந்திருந்து சுய வர்க்கத்திலும் ஆறு பரல்களைக் கொண்டிருந்தால் ஜாதகனுக்கு வாழ்க்கையின் எல்லா செளகரியங்களும், சுகங்களும் கிடைக்கும். அதே நேரத்தில் ஏராளமான விரோதிகளும் இருப்பார்கள்.
5. செவ்வாய் ஜாதகத்தில் நீசம் அடைந்ததுடன், 6ஆம் வீட்டிலோ அல்லது 8ஆம் வீட்டிலோ அல்லது 12ஆம் வீட்டிலோ அமர்ந்திருந்து உடன் வலுவில்லாத சந்திரனும் (waxing Moon) கூட்டணி போட்டிருந்தால் ஜாதகனுக்கு உடன் பிறப்புக்கள் இருக்காது. அப்படியே ஒரிருவர் இருந்தாலும் ஜாதகனுக்கு அவர்களுடன் நல்ல உறவு இருக்காது. (அதற்கு இல்லாமலேயே இருக்கலாம்)
6. மூன்றாம் இடத்தில் செவ்வாயும், சனியும் கூட்டாக இருந்து, செவ்வாய் சுயவர்க்கத்தில் முன்று பரல்களுடன் அல்லது அதற்குக் கீழான பரல்களுடன் இருந்தால், ஜாதகன் தன் உடன் பிறப்பைப் பறிகொடுக்க நேரிடும்.
7. பத்தில் செவ்வாய் இருந்து, அதன் சுயவர்க்கத்தில் 4 அல்லது அதற்கு மேற்பட்ட பரல்களைக் கொண்டிருந்தால், அதோடு அந்த அமைப்பில் செவ்வாய் சனியின் பார்வையைப் பெற்றால் ஜாதகன் ராணுவத்தில் பணி புரிவான்.
8. செவ்வாய் பதினொன்றாம் அதிபதியாக இருந்தால், அவருடைய திசையில் ஜாதகனுக்கு ராஜ யோகங்கள் கிடைக்கும்.
9. லக்கினம் செவ்வாயின் வீடுகளில் ஒன்றாக இருந்து அதாவது மேஷம் அல்லது விருச்சிகமாக இருந்து, லக்கினம் அதன் சுய வர்க்கத்தில் 7 பரல்களைப் பெற்றிருப்பதோடு, 7ஆம் வீட்டில் செவ்வாய் இருந்து அதன் பார்வை தன் சொந்த வீட்டில் விழுந்தால் ஜாதகன் சர்வ அதிகாரியாக இருப்பான். உலகில் சில சர்வாதிகாரி களின் ஜாதகம் இத்தகைய அமைப்பைக் கொண்டது.
10. பெண்களின் ஜாதகத்தில் மாதவிடாய்க்குக் காரகன் செவ்வாய். மாதவிடாய் சமயத்தில் இரத்தப் பெருக்கு, irregular periods, அடி வயிற்றில் வலி, மற்றும் அந்த மூன்று நாட்கள் உபாதைகளுக்கு செவ்வாய்தான் காரணகர்த்தா. இருபத்தியேழு நாட்களுக்கு ஒருமுறை சந்திரன் வட்டமடிக்கும்போது ஜாதகி புஷ்பவதியான அன்று செவ்வாய் இருந்த இடத்தைச் சந்திரன் கடக்கும் நேரத்தில்தான் ஜாதகிக்கு மாதவிடாய் ஏற்படும். செவ்வாய் வலிமை இல்லாத ஜாதகிகளுக்குதான் irregular periods மற்றும் மாதவிடாய் சமயத்தில் அடிவயிற்றில் அதீத வலி போன்ற உபாதைகள் (pains)ஏற்படும்.
அவர்கள் செவ்வாய்க்கிழமைகளில் விரதம் இருந்து முறைப்படி இறைவனை வணங்கினால் அந்தக் குறைகள் நிவர்த்தியாகும் இயற்கையாகவே பல பெண்கள் பவள மோதிரம் அணிந்திருப்பார்கள் எதற்காக அதை அணிகிறோம் என்று தெரியாமலேயே அணிந்திருப் பார்கள். வழி வழியாக அணியப் பட்டு வருவதால் (mere copying) அணிந்திருப்பார்கள். அப்படி அணிந்திருப்பவர்களுக்கு இந்த மாதவிடாய் உபத்திரவங்கள் குறைந்திருக்கும்.
ஜாதகத்தில் செவ்வாயின் பங்கு..!
கடவுளின் சந்நிதானத்தில் கிரகங்கள் வடிவில் ஒன்பது அமைச்சர்கள் ஊழல் இல்லாத அமைச்சர்கள். அவர்களில் செவ்வாய்தான் ராணுவ அமைச்சர். நிர்வாகத் திறமைகளைக் கொடுக்கின்ற கிரகமும் செவ்வாய்தான் ஒரு ஜாதகத்தில் செவ்வாய் வலிமையாக இல்லாவிட்டால், ஜாதகனுக்கு வெற்றிகளைப் பெறக்கூடிய செயல் திறன் (ability) இருக்காது. ஜாதகன் பல வெற்றிகளைப் பகல் கனவுகளில் காண்பவனாக இருப்பான். martial என்கின்ற ஆங்கிலச் சொல் Mars என்ற சொல்லில் இருந்து வந்தது. martial arts என்கின்ற சொல்லிற்கும் அதுதான் அடிப்படை
Good temperament and skill in war are the tasks of Mars. If he is exalted in one's horoscope, the native will become cruel in his tendencies. Some people will be brutal rulers or cruel administrators
ஜாதகத்தில் செவ்வாய் அமர்ந்திருக்கும் நிலைகளுக்கான பலன்கள்!
1 லக்கினத்தில் செவ்வாய் இருந்தால்: ஜாதகன் கோபக்காரன். எடுத்தற்கெல்லாம் சட்டென்று கோபம் வரும்! உக்கிரமானவன். சிலருக்கு அடிக்கடி உடற் காயங்கள் ஏற்படும். சிலருக்கு (ஜாதகத்தில் மற்ற அமைப்புக்கள் சரியாக இல்லாவிட்டால்) குறைந்த ஆயுளிலேயே போர்டிங் பாஸ் கொடுக்கப்பட்டுவிடும். ஒரு வியாதி போனால் இன்னொரு வியாதி கதைவைத் திறந்து கொண்டு உடனே வரும்! ஜாதகன் சலனபுத்திக் காரணாக இருப்பான். தீரனாகவுன் இருப்பான் சிலர் வன்கன்மையாளராகவும் (cruel) இருப்பார்கள்.
2 இரண்டாம் வீட்டில் செவ்வாய் இருந்தால்: குறைந்த அளவு செல்வம் இருக்கும். கல்வியும் குறைந்த அளவே இருக்கும். சிலர் தீயவர்களுக்கு சேவை செய்வார்கள். வாக்குவாதம் செய்பவர்கள் (argumentative) செவ்வாயின் இந்த அமைப்பு, கல்விக்கும், செல்வத்திற்கும் ஏற்றதல்ல! இரண்டாம் வீட்டில் தீய கிரகங்கள் இருந்தால் அது செல்வத்திற்குக் கேடானது. செல்வம் இருக்காது. அப்படியே தேடிப் பிடித்தாலும் தங்காது அல்லது நிலைக்காது!
3. மூன்றாம் வீட்டில் செவ்வாய் இருந்தால்: ஜாதகன் பிடிவாதக்காரன். சாதனையாளன்.செல்வச்சூழல்களை அனுபவிக்கக்கூடியவன். புகழ் பெறுவான். எல்லா வசதிகளும் வந்து சேரும். தனித்தன்மை வாய்ந்தவன்.நீண்ட ஆயுளை உடையவன். தர்ம, நியாயங்கள், நன் நடத்தைகள் ஆகியவற்றை உதறி விட்டுச் சிலர் வாழ்வார்கள்.
4 நான்காம் வீட்டில் செவ்வாய் இருந்தால்: உறவுகள், வீடு வாசல், சொத்துக்கள், தாய்ப்பாசம், வாகனவசதி போன்றவைகள் இல்லாத அல்லது கிடைக்காத அல்லது மறுக்கப்பட்டவனாக ஜாதகன் இருப்பான். இது அத்தனையும் எனக்கு இருக்கிறது என்று ஒருவர் சொன்னால் இந்த அமைப்பின் மேல் சுபக்கிரகங்களின் பார்வை பட்டுக் கொண்டிருக்கும் ஜாதகன் பெண்களின்மேல் அதீதமான ஈர்ப்பு உள்ளவன். சிலர் பெண்களுக்காக உருகி கோதாவரி ஆறு போல ஓடக்கூடியவர்களாக இருப்பார்கள். மனப் போராட்டங்கள் மிகுந்த ஜாதகம். (பெண்பித்து இருந்தால் மனப்போராட்டம் ஏன் இருக்காது?:
5 ஐந்தாம் வீட்டில் செவ்வாய் இருந்தால்: பெண்குழந்தைகள் மட்டுமே இருக்கும். வாழ்க்கை வசதிகள், சொத்துக்களில் குறைபாடுகள் இருக்கும். அல்லது சொத்து, சுகம் இல்லாமல் இருக்கும். சிலர் மனம் வெறுக்கும் சூழ்நிலைகளைச் சந்திக்க நேரிடும். தர்ம, நியாயங்கள், நன்நடத்தைகள் ஆகியவற்றை உதறி விட்டு வாழ நேரிடும். சிலர் குறுகியமனப்பான்மை கொண்டவர்களாக இருப்பார்கள். சிலர் எடுத்ததெற்கெல்லாம் கோபம் கொள்ளுகின்ற குணத்தை உடையவர்களாக இருப்பார்கள்.
6. ஆறாம் வீட்டில் செவ்வாய் இருந்தால்: நல்ல கட்டுமஸ்தான மற்றும் ஆரோக்கியமான உடல் அமைப்பு இருக்கும் ஜாதகன் ஊராக இருந்தாலும் சரி, போராக இருந்தாலும் சரி, எதிரிகளை துவம்சம் செய்யக்கூடியவனாக இருப்பான். மனதில் பயமே இருக்காது. சிலருக்கு அதீத பெண் ஆசை இருக்கும் அதாவது அதீதமான காம உணர்வுகள் இருக்கும். எப்போதும் காம சிந்தனைகள் மேலோங்கி இருக்கும். சிலர் தங்கள் முயற்சியால் மேன்மை அடைவார்கள். புகழ்பெறுவார்கள்
7 ஏழாம் வீட்டில் செவ்வாய் இருந்தால்: தர்ம நியாயம் இல்லாத காரியங்களைச் செய்பவான ஜாதகன் இருப்பான். சுபக்கிரகங்களின் பார்வை இருந்தால் அது குறையும். சிலருக்கு மண வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்காது. சண்டைபிடிக்கும், அல்லது சண்டை போட்டு சட்டையைப் பிடிக்கும் மனப்பான்மை இருக்கும் அநேக நோய்கள் ஒவ்வொன்றாகத் தேடிவரும். மனையாளும் அதனால் பாதிக்கப்படுவாள். சிலர் கல்மனதுக்காரர்களாக இருப்பார்கள்.
8 எட்டாம் வீட்டில் செவ்வாய் இருந்தால்: உடலும், உள்ளமும் நலமாக இருக்காது. சொத்து சேராது. சுகம் எட்டிபார்க்காது. சிலருக்கு ஆயுள் குறைவாக இருக்கும். ஜாதகத்தில் வேறு அம்சங்கள் நன்றாக இல்லாவிட்டால் ஜாதகன் சீக்கிரமே சிவனடி சேர்ந்து விடுவான். தர்ம, நியாயங்களைப் பற்றிக் கவலைப்படாத மனதைக் கொண்டிருப்பான்.
9 ஒன்பதாம் வீட்டில் செவ்வாய் இருந்தால்: தந்தையோடு நல்ல உறவு இருக்காது. தந்தை மேல் அன்பு பாசம் இருக்காது. ஜாதகன் அதிரடியான ஆள். கடுமையான ஆள் ஜாதகன் கண்களுக்குப் புலப்படாத கலைகளில் ஆர்வம் உள்ளவனாக இருப்பான். அதில் தேர்ச்சியும் பெறுவான்.
10. பத்தாம் வீட்டில் செவ்வாய் இருந்தால்: இது செவ்வாய் நமக்கு நன்மைகளை அள்ளித் தரும் இடம். ஜாதகன் ராஜ அந்தஸ்துடன் இருப்பான். வீரன். சூரன். வெற்றியாளன் ஆற்றல் உடையவன்.ஆர்வம் உடையவன். மகன்கள் இருப்பார்கள்.சொத்து சுகம், புகழ் என்று எல்லாம் கிடைக்கும் ஜாதகன்
11. பதினொன்றாம் வீட்டில் செவ்வாய் இருந்தால்: மகன்கள் இருப்பார்கள்.சொத்து சுகம், புகழ், வளம் எல்லாம் இருக்கும் வயாக்ரா சாப்பிடமலேயே ஆண்மை உணர்வு அதிகமாக இருக்கும் மன உறுதி இருக்கும். நிறைய நண்பர்கள், கூட்டாளிகள் இருப்பார்கள். ஜாதகன் உண்மையிலேயே தனித்தன்மை வாய்ந்தவனாக இருப்பான். ஜாதகன் எதையும் தெளிவாகப் பேசக்கூடியவனாக இருப்பான
12 பன்னிரெண்டாம் வீட்டில் செவ்வாய் இருந்தால்: கண்களில் குறைபாடுகள் ஏற்படும். பயப்பட வேண்டாம். கண் நோய்கள் ஏற்படலாம். ஜாதகன் சோம்பல் உடையவன். சோம்பல்தான் அவனுடைய முதல் மனைவி! பொருளாதார இழப்புக்கள் இருக்கும். பல சொத்துக்களைத் தொலைப்பான் துன்பங்கள், துயரங்கள் என்று எல்லாமே ஜாதகனுக்கு எதிராகக் கொடிபிடிக்கும் சிலர் படு கருமியாக இருப்பார்கள். சாப்பிடும்போது காக்காய் வந்தால் கையைக் கழுவி விட்டு காகத்தை ஓட்டுபவர்கள் என்று வைத்துக் கொள்ளூங்கள்
வெவ்வேறு ராசிகளில் செவ்வாய் இருக்கும் பலன்கள்: (Since this portion is in simple English. I have given it as it is)
1மேஷத்தில் செவ்வாய்: The individual will be inspiring, generous and active He will be powerful and will be good at Mathematics. He will be blessed with a dark sensual body
2 ரிஷபத்தில் செவ்வாய்: The individual will be timid, stubborn and sensitive. He will have a strong inclination toward sports and magic He will have a strong animal instinct.
3 மிதுனத்தில் செவ்வாய்: The individual will be ambitious, quick, rash, fearless and tactless. He will be blessed with a loving family and children He will be skilled in music.
4 கடகத்தில் செவ்வாய்: The individual will be intelligent, wealthy, and fickle-minded He will be proficient in any one of following fields Agriculture, Medical and Surgical
5 சிம்மத்தில் செவ்வாய்: If Mars is in Leo, the individual will be liberal, generous, noble and successful. They will also be interested in occult science, astrology, astronomy and mathematics and will also have deep love and respect for their parents.
6 கன்னியில் செவ்வாய்: If Mars is in Virgo, the individual will be self-confident, conceited, boastful and materialistic. Their marriage will usually not be successful and these individuals can also suffer from digestive disorders.
7 துலா ராசியில் செவ்வாய்: The individual will be ambitious, perceptive He will be fond of adulation. He will be blessed with a tall, symmetrical body and a fair complexion.
8 விருச்சிகத்தில் செவ்வாய்: The individual will be indulgent, clever and aggressive! He will have a medium stature and make great progress in life.
9 தனுசில் செவ்வாய்: The individual will be conservative, indifferent, impatient and quarrel some. He can make a good minister or a statesman!
10 மகரத்தில் செவ்வாய்: The individual will be rich, brave, generous, bold and respected He can easily attain a high political position and will usually be blessed with many sons.
11 கும்பத்தில் செவ்வாய்: The individual will be unhappy, miserable, poor unwise, controversial and will have a tendency to forget things. These individuals will be in constant danger from water.
12 மீனத்தில் செவ்வாய்: The individual will be passionate, restless, faithful and willful. He will have a fair complexion, can have troubles in their love affairs and will also have a few children.
செவ்வாயின் சொந்த வீடுகள்: மேஷம், விருச்சிகம் (2 இடங்கள்) செவ்வாயின்
உச்ச வீடு: மகரம்
செவ்வாயின் நீச வீடு: கடகம்
செவ்வாயின் நட்பு வீடுகள்: சிம்மம், தனுசு, மீனம் (3 இடங்கள்)
செவ்வாயின் சம வீடுகள்: ரிஷபம், துலாம், கும்பம் (3 இடங்கள்)
செவ்வாயின் பகை வீடுகள்: மிதுனம், கன்னி, (2 இடங்கள்)
சொந்த வீட்டில் ஆட்சி பலத்துடன் இருக்கும் செவ்வாய்க்கு 100% வலிமை இருக்கும். சம வீட்டில் இருக்கும் செவ்வாய்க்கு 75% பலன் உண்டு. நட்பு வீட்டில் இருக்கும் செவ்வாய்க்கு 90% பலன் உண்டு. பகை வீட்டில் இருக்கும் செவ்வாய்க்கு 50% பலன் மட்டுமே உண்டு நீசமடைந்த செவ்வாய்க்கு பலன் எதுவும் இல்லை உச்சமடைந்த செவ்வாய்க்கு இரண்டு மடங்கு (200%) பலன் உண்டு. இந்த அளவுகள் ஒரு உத்தேச அளவுகளே..
செவ்வாயின் சுய அஷ்டவர்க்கப் பலன்கள்:
சுயவர்க்கத்தில் செவ்வாய் கொண்டிருக்கும் பரல்களை வைத்துப் பலன்கள் எல்லாம் பொதுப்பலன்கள். உங்களுடைய ஜாதகத்தின் மற்ற அம்சங்களை வைத்து இவைகள் மாறுபடலாம், அல்லது வேறுபடலாம். அதையும் மனதில் கொள்க!
1, 2, 3 பரல்வரை : உயர்வாகச் சொல்வதற்கு ஒன்றுமில்லை. உடல் உபாதைகள். காய்ச்சல் போன்ற நோய்கள் அடிக்கடி வரும். எதற்கு எடுத்தாலும் விவாதம் அல்லது சண்டை போடக்கூடிய அமைப்பு. உறவுகள், நெருங்கிய உறவுகளுடன் பிரிந்து வாழும் வாழ்க்கை அமையும்
4 பரல்கள்: சமமான அளவில் நன்மை மற்றும் சமமான அளவில் தீமைகள் கொண்ட ஜாதகம்
5 பரல்கள்: அனைவரையும் ஈர்க்கக்கூடிய பழக்கவழக்கங்கள், நன்நடத்தை உள்ள ஜாதகர்.
6 பரல்கள். அரசிடம் இருந்து ஆதரவும் சலுகைகளும் கிடைக்கக்கூடிய ஜாதகர். அல்லது ஆட்சியில் உள்ளவர்களுடன் நெருக்கமான தொடர்பு உள்ள ஜாதகர்
7 பரல்கள்: ஜாதகரால் அவருடைய உடன்பிறப்புக்களுக்கும், உடன் பிறப்புக்களால் ஜாதகருக்கும் தொடர்ந்து நன்மைகள் கிடைக்கும் பாசமலர்கள்.
8 பரல்கள்: எதிரிகளைத் துவம்சம் செய்யக்கூடிய ஜாதகர். இடங்களும் சொத்துக்களும் ஆதாயமாகக் கிடைகக்கூடிய ஜாதகர்
செவ்வாயின் கோச்சாரப் பலன்கள்:
குறிப்பிட்டுள்ளவைகள் எல்லாம் சந்திரனில் இருந்து நடப்பில் செவ்வாய் இருக்கும் ராசியை வைத்துப் பலன்கள்:
3ஆம் வீடு, 6ஆம் வீடு, 11ஆம் வீடு ஆகிய இடங்களில் கோச்சார செவ்வாய் சஞ்சரிக்கும் காலங்கள் மட்டுமே நன்மையுள்ளதாகும் மற்ற இடங்களில் அவர் சஞ்சாரிக்கும் காலங்களில் நன்மைகள் இருக்காது
செவ்வாயின் கோச்சாரப் பலன்களைப் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். குரு அல்லது சனியைப் போல் அல்லாமல் அவர் ஒரு ராசியில் தங்கிச் செல்லும் காலம் மிகக் குறைவானது! அவர் வான வெளியில் ஒரு சுற்று சுற்றி முடிக்க எடுத்துக் கொள்ளும் காலம் 18 மாதங்கள். ஒவ்வொரு ராசியிலும் சுமார் ஒன்றரை மாதங்கள் இருப்பார். In short, Mars is the is significator of brothrhood, courage and talents of a native
செவ்வாய் எப்போதும் தீமைகளையே கொடுப்பார். செவ்வாய் திசை வந்தால் துன்பங்களும், சிரமங்களும் விபத்துக்களும் வந்து சேரும் என்று சிலர் நினைப்பதுண்டு. அது உண்மையல்ல!
தமிழகத்தில் ஒரு மாபெரும் தலைவி மிதுன லக்கினக்காரர். அவருடைய பதினொன்றாம் வீட்டு அதிபதியான செவ்வாய்தான், தன்னுடைய தசா புத்தியில் அவரை முதலமைச்சராக பதவியில் உட்கார வைத்து அழகு பார்த்தது. அதுபோல செவ்வாயால் நன்மைகள் பெற்றவர்கள் பலர் உண்டு.
ஜாதகனின் ஜாதகத்தில் தான் எந்த வீட்டிற்கு அதிபதியோ, அதற்குரிய செயல்களை செவ்வாய் சரியாக உரிய நேரத்தில் செய்து விடுவான் எந்தக் கிரகமும், முழுவதும் நன்மைகளையோ அல்லது முழுவதும் தீமைகளையோ அளிக்காது. ஒவ்வொரு கிரகமும், அதன் இருப்பிடம், சம்பந்தம் கொண்டுள்ள மற்ற கிரகங்கள், பார்வை ஆகியவற்றைப் பொறுத்தே நன்மையையும் தீமையையும் வழங்கும்
செவ்வாயின் தாக்கம் குறைய நன்மை பெற விரதம்
ஜாதகத்தில் செவ்வாய் நீசமாக அல்லது பகை வீட்டில் அமர்ந்து படுத்திக் கொண்டிருந்தால், அல்லது கஷ்டங்களை அதிகமாக அனுபவிப்பதாக நீங்கள் நினத்தால் அதற்குப் பரிகாரம் இருக்கிறது செவ்வாய்க் கிழமை விரதம் இருங்கள். எழுந்தது முதல் மாலை ஆறுமணி வரை உபவாசம் இருக்க வேண்டும். தண்ணீர் மட்டும் குடிக்கலாம். மாலையில் செவ்வாயின் நாயகர் சுப்பிரமணியரை வணங்கி விட்டு இரண்டு வாழைப் பழங்கள் ஒரு டம்ளர் பால் சாப்பிடலாம். அல்லது அரிசி வெல்லப் பாயாசத்தைப் பிரசாதமாக வைத்து வணங்கிவிட்டு இரண்டு டம்ளர்கள் பாயாசத்தைக் குடிக்கலாம் கோவிலுக்கு முடிந்தால் சென்று வணங்கி வரலாம். அல்லது வீட்டிலேயே விளக்கு ஏற்றி வணங்கலாம்.
இறைவன் எங்கும் இருக்கிறான் எத்தனை செவ்வாய்க் கிழமைகள் விரதம் இருக்க வேண்டும்? ஒன்பது செவ்வாய்க் கிழமைகள் இருக்க வேண்டும். சிலர் இருபத்தோரு செவ்வாய்க் கிழமைகள் விரதம் இருக்க வேண்டும் என்பார்கள். விரதம் எப்படி உங்கள் விருப்பமோ, நாட்களின் எண்ணிக்கையும் உங்கள் விருப்பம்தான்
விரதம் யார் யார் இருக்க வேண்டும்?
திருமணம் தள்ளிக்கொண்டே போகிறவர்களும், காரியத் தடைகள் உள்ளவர்களும், மிகுந்த துன்பங்கள் மற்றும் கஷ்டங்களை அனுபவிப்பவர்களும் செவ்வாய் விரதத்தை மேற் கொள்ளலாம். வேலை இல்லாமல் இருப்பவர்களும் மன அமைதியற்றவர்களும் மேற்கொள்ளலாம்.
ஆக்கத்திற்கும், ஊக்கத்திற்கும் உரிய கோளான செவ்வாய் ஜாதகத்தில் வலிமையாக இருக்க வேண்டும்.
செவ்வாயும் சந்திரனும்கூட்டணி
1. லக்கினத்தில் இந்தக் கிரக அமைப்பு இருந்தால், அது மேஷ லக்கினம், விருச்சிக லக்கினமாக இருந்தால் அல்லது கடக லக்கினமாக இருந்தால் நல்லது. ஜாதகனுக்கு எல்லாம் நன்மையே. இல்லையென்றால் ஜாதகனுக்கு சுகக் கேடு. ஆரோக்கியக் கேடு.
2. இரண்டாம் வீட்டில் இந்தக் கிரக அமைப்பு இருந்தால், ஜாதகனின் வாழ்க்கை வளமாகவும் செல்வம் மிக்கதாகவும் இருக்கும். அதோடு இதய நோய் உடையவனாகவும், அடிக்கடி விபத்துக்களில் சிக்கிக் கொள்பவனாகவும் இருப்பான்.
3. மூன்றாம் வீட்டில் இந்த அமைப்பு இருந்தால், ஜாதகன் அம்சமாக இருப்பான். அம்சம் என்றால் என்ன வென்று தெரியுமல்லவா? எதையும் ரசிப்பவனாக இருப்பான். வாழ்க்கை ரசனைகள் மிகுந்து இருக்கும். அதே நேரத்தில் மனதில் கவலைகளுக்கும், பிரச்சினைகளுக்கும் குறைவிருக்காது. சிலரது (நன்றாகக் கவனிக்கவும்) சிலர் தனது துணையை இளம் வயதிலேயே பறிகொடுக்க நேரிடும்!
4. நான்காம் இடத்தில் இந்த அமைப்பு இருந்தால், ஜாதகன் மிகுந்த அதிர்ஷ்டசாலி! ஜாதகனுக்கு எதையும் மோதிப் பார்க்கும் குணம் இருக்காது. வருவது வரட்டும் என்று மேலோட்டமாக இருப்பான். வலிமையான மனம் உடையவனாக இருப்பான். இளைய உடன் பிறப்புக்களுடனான உறவு சுகமாக இருக்காது!
5. ஐந்தாம் இடத்தில் இந்தக் கிரக அமைப்பு இருந்தால், ஜாதகனைப் பரபரப்பான ஆசாமியாகவும், தகறாறு செய்யும் மனப்பான்மையுடையவனாகவும் மாற்றிவிடும். ஆனால் ஜாதகன் அதிகாரமுள்ளவனாக இருப்பான்.
6. ஆறாம் இடத்தில் இந்தக் கிரக அமைப்பு, ஜாதகனுக்குப் பலவிதமான பிரச்சினைகளைக் கொடுக்கும். எதிரிகளை ஏற்படுத்திக் கொடுக்கும். சிலருக்கு அடிக்கடி விபத்துக்கள் ஏற்படும்.
7. ஏழாம் இடத்தில் இந்தக் கிரக அமைப்பு செல்வம், புகழ் இரண்டையும் கொடுக்கும். அதே நேரத்தில் திருமண வாழ்வில் கசப்பை உண்டாக்கி விடும். கசப்பு எந்த அளவு வேண்டுமென்றாலும் இருக்கலாம். உறவுகளை ஓரங்கட்டிவிடும். சிலருக்கு இதயநோய்கள் உண்டாகும். ஒரு ஆறுதல் ஜாதகன் எதிரிகளைத் துவம்சம் செய்து விடுவான். சிலருக்கு இரண்டு தடவைகள் திருமணம் நடக்கலாம்.
8. எட்டாம் இடத்தில் இந்தக் கிரக அமைப்பு மிகவும் மோசமானது. அழிவை ஏற்படுத்தக் கூடியது. திருமண வாழ்வில் முறிவை ஏற்படுத்தும். அல்லது கணவன்/மனைவி இருவரில் ஒருவரைக் காலி செய்துவிடும்.சிலருக்கு முதல் திருமணம் ரத்தாகி, இரண்டாவது திருமணம் நடக்கலாம். சிலருக்கு அதீதமான பணத்தைக் கொடுக்கும். அதே நேரத்தில் ஆயுளைக் குறைத்து விடும் அபாயமும் உண்டு!
9. ஒன்பதாம் இடத்தில் இந்தக் கிரக அமைப்பு சக்தி, அதிகாரம், வலிமை, வளமை என்று எல்லாவற்றையும் கொடுக்கும், அதே நேரத்தில் ஜாதகனின் ஆயுளைக் குறைத்து விடும் அபாயமும் உண்டு! அல்லது ஜாதகன் விபத்தில் சிக்கிக்கொள்ளும் அபாயமும் உண்டு!
10. பத்தாம் இடத்தில் இந்தக் கிரக அமைப்பு இருந்தால் ஜாதகனுக்கு அதீத வருமானம் உடைய வேலை அல்லது தொழில் அமையும். சிலருக்கு உடல் வலிமை இருக்கும். மன வலிமை இருக்காது.
11. பதினொன்றாம் இடத்தில் இந்தக் கிரக அமைப்பு இருந்தால் ஜாதகனுக்கு நிறைய நண்பர்கள் கிடைப்பார்கள். சமூக சேவையில் ஜாதகன் பெயர் எடுப்பான். ”காசுமேல காசு வந்து கொட்டுகிற நேரம் இது; ராஜலக்ஷ்மி வந்து கதவைத் தட்டுகிற நேரம் இது” என்று பாடிக் கொண்டிருப்பான். பணம் கொட்டும். சிலரின் ஜாதகத்தில் செவ்வாய்க்கு இந்த இடம் உகந்த இடம் இல்லையென்றால், ஜாதகன் ஆர்வக்குறைவாக இருப்பான். ஆனால் பணம் மட்டும் மழையாகக் கொட்டும்!
12. பன்னிரெண்டாம் இடத்தில் இந்தக் கிரக அமைப்பு இருந்தால் தீமைகளே அதிகம். இடம் என்ன சாதாரணமான இடமா என்ன? விரைய ஸ்தானம் (House of Loss) உடல் உபத்திரவம், மன உபத்திரவம், கடன், அதிர்ஷ்டமின்மை, உறவுகளின் இழப்பு, நண்பர்களின் பிரிவு என்று எல்லாமுமே படுத்துவதாக இருக்கும். கவலைப் படாதீர்கள், இந்த அமைப்பு உங்களுக்கு இருந்தால், நீங்கள் ஞானியாகி விடலாம். ஞானியாகிவிட்டால் அதைவிட மேன்மையான நிலை எதுவும் இல்லை!
செவ்வாய் தோஷம்
ஜாதகத்தில் லக்னமானது, சந்திரன், சுக்கிரன் ஆகியவை 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் எங்கு இருந்தாலும் அந்த ஜாதகம் செவ்வாய் தோஷ ஜாதகமாக கருதப்படுகிறது. பொதுவாக இந்த இடங்களில் பாவ கிரகங்கள் இருப்பதும் ஒருவகையில் தோஷம்தான்.
செவ்வாய் தோஷ விதிவிலக்குகள்
சில ஜாதகங்களில் செவ்வாய் தோஷ இருந்தாலும் அதில் சில விதிவிலக்குகள் உள்ளதாக ஜோதிட சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ளது. அவற்றை பற்றி சிறிது விரிவாக காண்போம்,
1. ஜாதகத்தில் லக்னமானது, சந்திரன், சுக்கிரன் ஆகியவைகளுக்கு 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாயின் ஆட்சி வீடுகளான மேஷம், விருச்சிகம், உச்ச வீடான மகரம் என்று இருந்து அந்த இடத்தில் செவ்வாய் இருந்தால், செவ்வாய் தோஷம் இல்லை. மேலும் அந்த இடங்களில் செவ்வாய் இருந்து, சூரியன், குரு, சனி ஆகியோர் சேர்ந்து இருந்தாலும் செவ்வாய் தோஷம் இல்லை. மேலும் அந்த இடங்களில் உள்ள செவ்வாய்க்கு சூரியன், குரு, சனி ஆகியவர்களின் பார்வை பட்டிருந்தாலும் செவ்வாய் தோஷம் இல்லை.
2. லக்னத்தைப் பொறுத்தவரை கடக லக்னம், சிம்ம லக்னம் ஆகிய லக்னத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் எந்த இடத்தில் இருந்தாலும் செவ்வாய் தோஷம் இல்லை.
3. செவ்வாய் இருக்கக்கூடிய 2- இடமானது மிதுனம் அல்லது கன்னியாக இருந்தால் அந்த ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இல்லை.
4. செவ்வாய் 4-ல் இருந்து அந்த இடம் மேஷம், விருச்சிகம் ஆகிய ராசிகளாக இருந்தால் அது செவ்வாய் தோஷ ஜாதகம் இல்லை.
5. களத்திர ஸ்தானத்தில் செவ்வாய் இருந்து, அந்த ஸ்தானமானது கடகமாகவோ அல்லது மகரமாகவோ இருந்தால் அது செவ்வாய் தோஷம் இல்லை.
6. செவ்வாய் இருக்கும் 8-வது இடமானது தனுசு அல்லது மீனமாக இருந்தாலும், 12-வது இடம் ரிஷபம், துலாமாக இருந்தாலும் இந்த செவ்வாய் தோஷம் இல்லை.
7. ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாயானது சிம்மம் அல்லது கும்பத்தில் இருந்தால் செவ்வாய் தோஷம் இல்லை. செவ்வாய் குருவுடன் சேர்ந்திருந்தாலும் செவ்வாய் தோஷம் இல்லை.
8. சந்திரனுடன் சேர்ந்து மேலே சொன்ன எந்த இடத்தில் செவ்வாய் இருந்தாலும் செவ்வாய் தோஷம் இல்லை.
9. மேலே சொன்ன இடங்களில் செவ்வாய் இருந்து புதன் அல்லது சூரியனுடன் சேர்ந்திருந்தாலோ அல்லது அவர்களால் பார்க்கப்பட்டாலோ செவ்வாய் தோஷம் இல்லை.
10. மேஷம், சிம்மம், விருச்சிகம், மகரம் ஆகிய ராசிகளில் செவ்வாய் இருந்து, அந்த இடம் இந்த தோஷத்தைக் குறிப்பிடும் 8-ம் இடமாகவோ அல்லது 12-வது இடமாகவோ இருந்தாலும் செவ்வாய் தோஷம் இல்லை.
11. சனி, ராகு, கேது ஆகியோருடன் சேர்ந்திருந்தாலும் செவ்வாய் தோஷம் இல்லை.
12. செவ்வாய்க்கு நட்பு கிரகங்களான சூரியனின் ஆட்சி வீடான சிம்மம், சந்திரனின் ஆட்சி வீடான கடகம், குருவின் ஆட்சி வீடுகளான தனுசு, மீனம் ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்து, அந்த இடம் லக்னம், சந்திரன், சுக்கிரன் ஆகியவைகளுக்கு 2, 4, 7,8, 12 ஆகிய இடங்களாக இருந்தாலும் செவ்வாய் தோஷம் இல்லை.
செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் செல்ல வேண்டிய ஆலயங்கள்
செவ்வாய் தோஷம் உள்ளவர்களுக்கு சீர்காழியில் அமைந்துள்ள வைத்தீஸ்வரன் கோவில் சிறப்பு வாய்ந்த பரிகார தலமாக விளங்குகிறது. மேலும்
1. சுப்ரமணியசுவாமி, சென்னிமலை, ஈரோடு.
2. சங்கமேஸ்வரர், பவானி, ஈரோடு.
3. கந்தசுவாமி, திருப்போரூர், காஞ்சிபுரம்.
4. மலையாள தேவி துர்காபகவதி அம்மன், நவகரை, கோயம்புத்தூர்.
5. அமிர்தகடேஸ்வரர், மேலக்கடம்பூர், கடலூர்.
6. அருணஜடேசுவரர், திருப்பனந்தாள், தஞ்சாவூர்.
7. கைலாசநாதர், கோடகநல்லூர், திருநெல்வேலி.
8. வீரபத்திரர், அனுமந்தபுரம், காஞ்சிபுரம்.
9. கல்யாண கந்தசுவாமி, மடிப்பாக்கம், சென்னை.
10. அகஸ்தீஸ்வரர், வில்லிவாக்கம், சென்னை.
11. தேனுபுரீஸ்வரர், திருப்பட்டீசுவரம், தஞ்சாவூர்.
12. அகோர வீரபத்திரர், வீராவாடி, திருவாரூர்.
13. பிரளயநாதசுவாமி, சோழவந்தான், மதுரை.
14. விருத்தபுரீஸ்வரர், திருப்புனவாசல், புதுக்கோட்டை.
15. சுப்பிரமணியர் காங்கேயன், காங்கேயநல்லூர், வேலூர்.
16. ஏழுமலையான், திருப்பதி, ஆந்திரா
போன்ற கோவில்களுக்கு சென்று வழிபட்டு செவ்வாய் தோஷம் விலகி வளமோடு வாழலாம்.