Type Here to Get Search Results !

புத்த பூர்ணிமா நாளில் சந்திர கிரகணம்... யோகம் பெறும் 3 ராசிகள்

இந்தாண்டு சந்திர கிரகணம் புத்த பூர்ணிமா (மே 5ம் தேதி) அன்று வருகிறது. இதில், அனைத்து ராசிக்காரர்களையும் பாதிக்கும் என்றாலும், 3 ராசிக்காரர்களுக்கு சுப பலன்களை தரும்.



சூரியன் மற்றும் சந்திரனில் ஏற்படும் கிரகணம் இந்து மதம் மற்றும் ஜோதிடத்தில் மங்களகரமானதாக கருதப்படவில்லை. இந்த நேரத்தில் எதிர்மறை தன்மை அதிகமாக இருக்கும் என கணிக்கப்படுகிறது. எனவே, கிரகண காலத்தில் சுப காரியங்கள் செய்யக்கூடாது என கூறப்படுகிறது. 

கிரகணம் மற்றும் சூதக காலத்தின் போது கோயில்களின் கதவுகள் கூட மூடப்படும். இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் மே 5ஆம் தேதி வெள்ளிக்கிழமை நிகழ உள்ளது. சந்திரகிரகணம் மே 5ஆம் தேதி இரவு 8.44 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 1 மணிக்கு நிறைவடையும்.


இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் வைஷாக பூர்ணிமா தினத்தன்று நடைபெறுகிறது. வைஷாக பூர்ணிமா, புத்தர் பிறந்த நாள் என்பதால் புத்த பூர்ணிமா என்றும் அழைக்கப்படுகிறது. இந்த சந்திர கிரகணம் அனைத்து ராசிக்காரர்களையும் பாதிக்கும். இருப்பினும், 3 ராசிக்காரர்களுக்கு சுப பலன்களை தரும்.


மேஷம்   :  மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த சந்திர கிரகணம், வாழ்க்கையில் நல்ல நாட்களை தொடங்கிவைக்கும். இவர்களுக்கு வேலையில் கவனம் அதிகரிக்கும். அதிர்ஷ்டம் உங்களுடன் இருக்கும். தொழில், வியாபாரத்தில் லாபம் உண்டாகும். புதிய வேலை கிடைக்கும். பணம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. மொத்தத்தில், இந்த நேரம் பயனுள்ளதாக இருக்கும். 


சிம்மம்  :  இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் சிம்ம ராசிக்காரர்களுக்கு பெரும் பலன்களைத் தரும். சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த நேரம், நீண்ட நாளாக வராத கடன்களையும், செல்வங்களையும் கொடுக்கும். பாதியில் நிறுத்தப்பட்ட வேலைகள் தொடங்கும். புதிய வேலையைத் தொடங்க இது ஒரு நல்ல நேரம். ஆன்மீக பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும், நன்மைகள் கிடைக்கும். அதிர்ஷ்டம் உங்களுடன் இருக்கும்.


மகரம்  :  இந்த சந்திர கிரகணம் மகர ராசிக்காரர்களுக்கு தொழிலில் முன்னேற்றம் தரும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும். புதிய வேலை கிடைக்கும். பணம் சாதகமாக இருக்கும். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். பழைய பிரச்சனைகளில் இருந்து விடுதலை கிடைக்கும். பொருளாதார நிலை மேம்படும். நீங்கள் புதிய வீடு, கார் அல்லது ஏதேனும் மதிப்புமிக்க பொருட்களை வாங்கலாம். புதிய வேலையைத் தொடங்க இது ஒரு நல்ல நேரம்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.