Type Here to Get Search Results !

ஆகஸ்ட் 8: பல விதமான துன்பங்கள் நீங்கும் நாக சதுர்த்தி, கருட பஞ்சமி ... வழிபாட்டு முறை மற்றும் நேரம்

 




நாக சதுர்த்தி என்பது ஒரு இந்து விழாவாகும், இது நாக தேவர்களைப் போற்றும் நாளாகக் கொண்டாடப்படுகிறது. நாக சதுர்த்தி சிறப்பாக இந்தியா, நேபாளம், பங்களாதேஷ் போன்ற நாடுகளில் அனுசரிக்கப்படுகிறது. 


ஆடி  மாத வளர்பிறையில் வரும் சதுர்த்தியை  (நான்காம் திதி)  நாக சதுர்த்தி என்றும், அதற்கு அடுத்து வரும் பஞ்சமி திதியை கருட பஞ்சமியாகவும் கொண்டாடுகிறோம். 


  • நாகர் மற்றும் கருடன் அவதரித்த தினம்

அதாவது நாகர் மற்றும் கருடன் அவதரித்த தினங்களாக இந்த நாட்கள் கருதப்படுகின்றன. இந்த நாட்களல் நாகரையும், கருடரையும் வழிபடுவது மிகவும் சிறப்பானதாகும். இதனால் வாழ்க்கையில் ஏற்படும் பல விதமான துன்பங்கள் நீங்கும் என்பத நம்பிக்கை.


பாற்கடலிருந்து வெளிவந்த ஆலகாலத்தினை சிவபெருமான் உண்ட தினமாகவும் இந்நாள் கருதப்படுகிறது.


நாக சதுர்த்தி, கருட பஞ்சமி இவை இரண்டுமே மிகவும் சக்தி வாய்ந்த நாட்களாக கருதப்படுகின்றன. இறந்து போன தன்னுடைய சகோதர்களின் உயிரை, பெண் ஒருத்தில் நாக சதுர்த்தி அன்று விரதம் இருந்து மீட்டதாக புராண கதைகள் சொல்லப்படுகிறது. பிரிந்த உயிரை கூட மீட்டு தரும் சக்தி படைத்தது என்பதால் நாகங்களால் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து விடுபட இது சிறந்த நாளாக கருதப்படுகிறது.


  • ​நாகர் வழிபாடு :
மனிதர்களின் வாழ்க்கையில் ஏற்படும் பல விதமான துன்பங்களுக்கு பின்னால் பார்த்தால் ஏதாவது ஒரு நாகத்தின் தோஷம் தான் காரணமாக இருக்கும். அல்லது குறைந்த பட்சம் ராகு,கேதுவின் தாக்கத்தால் இருக்கும். நம்முடைய முன்னோர்கள் அல்லது நாம் முந்தைய பிறவிகளில் ஏதாவது ஒன்றில் நாகங்கள் எதற்காவது துன்பம் ஏற்படுத்தி இருந்தால் நாக தோஷம் ஏற்படும். 


நாகங்களை அடித்திருந்தாலோ அல்லது அவற்றிற்கு துன்பம் ஏற்படுத்தி இருந்தாலோ நாக தோஷம் அல்லது நாகங்களின் சாபங்களுக்கு ஆளாக வேண்டி இருக்கும். நாக தோஷம் இருந்தால் திருமண தடை, குழந்தை பாக்கியம் ஏற்படுவதில் தடை போன்ற பிரச்சனைகள் ஏற்படும். சிலரது குடும்பத்தில் தலைமுறை தலைமுறையாக நாகங்களின் சாபம் என்பது தொடர்ந்து கொண்டே இருக்கும்.


  • நாக சதுர்த்தில கருட பஞ்சமி 

நாக தோஷங்கள் மற்றும் நாக சாபங்களால் பாதிக்கப்பட்டவர்கள் அவற்றில் இருந்து விடுபட மிகவும் சிறப்பான நாள் நாக சதுர்த்தி மற்றும் கருட பஞ்சமி தினமாகும். 


  • தேதி - நேரம்

இந்த ஆண்டு நாக சதுர்த்தி ஆகஸ்ட் 08ம் தேதி வியாழக்கிழமையும், கருட பஞ்சமி ஆகஸ்ட் 09ம் தேதி வெள்ளிக்கிழமையும் வருகிறது. ஆகஸ்ட் 07ம் தேதி இரவு 09.52 மணிக்கு துவங்கி, ஆகஸ்ட் 08ம் தேதி இரவு 11.47 வரை சதுர்த்தி திதி உள்ளது. அதே போல் ஆகஸ்ட் 08ம் தேதி இரவு 11.48 மணி துவங்கி, ஆகஸ்ட் 10ம் தேதி அதிகாலை 01.44 வரை பஞ்சமி திதி உள்ளது.


  • நாக சதுர்த்தி வழிபாட்டு முறை :

நாக சதுர்த்தி அன்று காலையில் எழுந்து குளித்து விட்டு சொல்லப்பட்டிருக்கும் 3 நேரங்களில் ஏதாவது ஒரு நேரத்தில் அருகில் உள்ள கோவில் அல்லது அரச மரத்தடியில் இருக்கும் நாகர் சிலைகளுக்கு பால், மஞ்சள் கொண்டு அபிஷேகம் செய்து, மலர்கள் சூட்டி வழிபட வேண்டும். 


"நானும் என்னுடைய, என்னுடைய வம்சத்தை சேர்ந்தவர்களும் எப்போதாவது தெரியாமல் நாகர் குலத்திற்கு ஏதாவது தீங்கு செய்திருந்தால் அதனை மன்னித்து, எங்களின் கஷ்டங்களை தீர்த்து வை" என்று சொல்லி, நம்முடைய கவலைகளை சொல்லி வழிபட வேண்டும். 



கோவிலுக்க செல்ல முடியாதவர்கள் வீட்டில் இருக்கும் நாகர் உருவத்திற்கு பால் அபிஷேகம் செய்து வழிபடலாம். நாகர் உருவம் இல்லை என்றால் நாகத்தை ஆபரணமாக அணிந்த சிவன், முருகன், பெருமாள், விநாயகர், அம்மன் போன்ற ஏதாவது ஒரு தெய்வத்தின் படத்திற்கு சிறிதளவு பால் படைத்து வழிபடலாம். 


பிறகு அந்த பாலை கால்படாத இடத்தில் மண்ணில் படும்படி ஊற்றி வேண்டும். நைவேத்தியமாக முடிந்தவற்றை செய்து படைக்கலாம். நாகர் வழிபாட்டினை ராகு கால வேளையில் செய்வத சிறப்பானதாகும். நாக பஞ்சமி வழிபாடு செய்வதால் பயம், நடுக்கம் ஆகியவை நீங்கும்.


  • நாக சதுர்த்தி வழிபாட்டு நேரம் :

ஆகஸ்ட் 08ம் தேதி இரவு 11.47 வரை சதுர்த்தி திதி உள்ளது.

காலை - 07.35 முதல் 08.55 வரை

10.35 முதல் 11.30 வரை

ராகு காலம் - பகல் 01.30 முதல் 3 வரை


  • ​கருட பஞ்சமி வழிபாட்டு முறை :

கருட பஞ்சமி அன்று கெளரி மாதாவை வழிபட வேண்டும். கெளரி மாதா, நாகாபரணங்களை அணிந்தவள். கருடனையும் கெளரியையும் இந்த நாளில் வழிபடுவது மிக சிறப்பானது. கருடனின் படம் வீட்டில் இருந்தால் வழிபடலாம். இல்லை என்றால் ஏதாவது ஒரு அம்பாள் படத்தை வைத்து, அவளை கெளரியாக பாவித்து வழிபடலாம். கருடர் படம், கருடனுடன் இருக்கும் பெருமாள் படம் இருந்தால் அதற்கு துளசி மாலை சாற்றி, கொழுக்கட்டை நைவேத்தியமாக படைத்து வழிபடலாம். 


அம்மன் படம் இருந்தால் பூக்கள், சந்தனம், குங்குமம் வைத்து வழிபடலாம். கருடன் அல்லது பெருமாளுக்குரிய மந்திரங்கள் சொல்லி வழிபட வேண்டும். 


கருட பஞ்சமி வழிபாட்டினை துவங்குவதற்கு முன், ஒரு சிவப்பு கயிறில் 10 முடிச்சுகள் போட்டு கருடனுக்கு அல்லது அம்பாளுக்கு வலது புறம் இருக்கும் படி வைத்து, பூஜை செய்து, பிறகு அதை ரக்ஷையாக கையில் கட்டிக் கொள்ளலாம். இதனால் பயம், தயக்கம், பதற்றம், வாகன விபத்துக்கள், கண் திருஷ்டி போன்றவை நீங்கும்.


  • கருட பஞ்சமி வழிபாட்டு நேரம் :

ஆகஸ்ட் 09ம் தேதி முழுவதும் பஞ்சமி திதி உள்ளது.

காலை - 9 முதல் 10.20 வரை

பகல் - 12.05 முதல் 01.05 வரை


சொல்ல வேண்டிய மந்திரங்கள் :

  • ஸ்ரீ கௌரி காயத்ரி மந்திரம் :

ஓம் மகாதேவ்யை ச வித்மஹே

ருத்ர பத்னியை ச தீமஹி

தந்நோ கௌரி ப்ரசோதயாத்.


  • ஸ்ரீ ஆதிசேஷன் காயத்ரி :

ஓம் சஹஸ்ர ஷீர்ஷாய வித்மஹே

விஷ்ணு தல்பாய தீமஹி

தந்நோ நாக ப்ரசோதயாத்.


  • கருட காயத்ரி :

தத்புருஷாய வித்மஹே

ஸுவர்ண பக்ஷாய தீமஹி

தந்நோ கருட ப்ரசோதயாத்.




Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.