கிரக பலன்கள் குறித்த அச்சமும், பரிகார நிமித்தமான கிரக வழிபாடும் சமீப காலமாக அதிகரித்து வருகிறது.
- சூரியன் - சிவன்
- சந்திரன் - பார்வதி
- செவ்வாய் - முருகன்
- புதன் - விஷ்ணு
- குரு - பிரம்மா, தட்ணாமூர்த்தி
- சுக்கிரன் - லட்சுமி, இந்திரன், வருணன்
- சனி - சாஸ்தா (ஐயப்பன்)
- ராகு - காளி, துர்க்கை, மாரியம்மன்
- கேது - விநாயகர், சண்டிகேஸ்வரர்
இந்த தேவதைகளை அந்தந்த கிழமைகளில் வழிபாடு செய்து வர வாழ்வில் நன்மை உண்டாகும். ராகுவுக்குரிய தேவதைகளை, ஞாயிறு ராகு காலத்திலும், கேதுவுக்குரிய தேவதைகளை, திங்கள் எமகண்ட நேரத்திலும் தரிசிப்பது சிறப்பைத் தரும்.
கிரகங்கள் ஒன்பது (சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது). இவை ஒவ்வொன்றுக்கும் ஒரு அதிபதி நியமிக்கப் படுவார். அந்த அதிகாரியே கிரகத்தின் அதி தேவதையாக அறியப் படுகிறார்.
அந்தந்த கிரகங்களுக்குரிய தானியத்தால் நவக்கிரக ஹோமம் செய்தால் கிரக தோஷங்கள் விலகும். சுபிட்சம் நிலவும்.