![]() |
ஆடித்திருவிழாவையொட்டி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த தண்டு மாரியம்மன் |
காஞ்சிபுரம், ஆக.6:
காஞ்சிபுரம் ரயில் நிலைய சாலையில் உள்ள தண்டு மாரியம்மன் ஆலயத்தில் செவ்வாய்க்கிழமை ஆடித் திருவிழாவையொட்டி கூழ்வார்த்தலும், படையலிடுதல் நிகழ்வும் நடைபெற்றன.
காஞ்சிபுரம் ரயில் நிலைய சாலையில் அமைந்துள்ளது பழமையான தண்டு மாரியம்மன் திருக்கோயில். இக்கோயிலின் 29 வது ஆண்டு ஆடித் திருவிழாவையொட்டி காலையில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும் அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன.
இதனைத் தொடர்ந்து அம்மனுக்கு கூழ்வார்த்தல் நிகழ்ச்சியும், படையிலிடுதல் வைபவமும், பின்னர் அன்னதானமும் நடைபெற்றது. மாலையில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
ஏற்பாடுகளை சுற்றுலா வேன் ஓட்டுநர்கள் சங்க தலைவர் ராஜூ தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.