ஜோதிடத்தில் சனி பகவான் ஒருவரது செயல்களுக்கு ஏற்ப பலன்களைத் தரக்கூடியவர். மேலும் கிரகங்களிலேயே சனி பகவான் மிகவும் மெதுவாக நகரக்கூடியவர். இவர் ஒரு ராசியில் 2 1/2 ஆண்டுகள் வரை பயணிப்பார். இதனால் சனி பகவானின் நிலையின் தாக்கம் ஒருவரது வாழ்வில் நீண்ட காலம் இருக்கும்.
தற்போது சனி பகவான் தனது மூல திரிகோண ராசியான கும்ப ராசியில் பயணித்து வருகிறார். சுமார் 30 ஆண்டுகள் கழித்து சனி பகவான் இந்த ராசியில் பயணித்து வருகிறார். அதுவும் தற்போது வக்ர நிலையில் சனி பகவான் பயணித்து வருகிறார். இந்நிலையில் இன்று நவம்பர் 15 ஆம் தேதி சனி வக்ர நிவர்த்தி அடைந்து நேர்கதியில் பயணிக்கவுள்ளார்.
வக்ர நிலையில் இருந்ததால் இதுவரை பண பிரச்சனைகளை சந்தித்து வந்த ராசிக்காரர்களின் பிரச்சனைகள் முடிவுக்கு வந்து, அதிர்ஷ்டத்தின் ஆதரவுடன் நிதி நிலையில் முன்னேற்றமும் ஏற்படவுள்ளது.
இப்போது சனி வக்ர நிவர்த்தி அடைவதால் நிதி நிலையில் முன்னேற்றத்தைக் காணப் போகும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்:
தொழிலில் சிறப்பு லாபம் உண்டாகும். அரசியல்வாதிகளுக்கு உயர் பதவி, அதிகாரம் கிடைக்கும். சிவில் துறையினருக்கு நன்மைகள் உண்டாகும். புதிய புதிய வாய்ப்புகள் தேடி வரும். பெரியோர்களின் உதவி, சீனியர்களின் வழிகாட்டுதல் கிடைக்கப் பெறுவீர்கள். மொத்தத்தில் சனியின் இந்த வக்ர நிவர்த்தி மேஷ ராசிக்கு நன்மையான பலனையே தரும்.
- பரிகாரம்: சிவன் சன்னதியில் அர்ச்சனை செய்வது நல்லது.
ரிஷபம்:
தொழில் வாய்ப்புகள் அதிகரிக்கும். அரசியல் லாபம் உண்டாகும். இரும்பு, சிமெண்ட், மண், செராமிக் துறையினருக்கு லாபம் கிடைக்கப் பெறும். தொழிலாளர்களுக்கு நல்லது நடக்கும். பெரியோர்களின் மதிப்பு கூடும். அதிகார பலம் கிடைக்க பெறுவீர்கள். வியாபாரம் விரிவடையும்.
- பரிகாரம்: சுப்பிரமணியர் தரிசனம் மேற்கொள்வது நன்மை அளிக்கும்.
மிதுனம்:
தந்தைக்கும், மகன் அல்லது மகள்களுக்கு இடையில் கருத்து வேறுபாடு ஏற்பாடும். குடும்பத்தில் சண்டை சச்சரவு அதிகரிக்கும். பெரியோர் வழிகாட்டுதல்படி நடப்பது நன்மை அளிக்கும். தர்ம காரிய ஆர்வம் அதிகரிகும். ஆன்மீக ஸ்தலங்களுக்கு சென்றூ வருவீர்கள். தொழிலில் சிரமம் ஏற்படக் கூடும். சகோதரர்களுக்கிடையில் மனஸ்தாபம் ஏற்படும்.
- பரிகாரம்: விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்ய வேண்டும்.
கடகம்:
உடல் ஆரோக்கியம் மேம்படும். சிறுநீரக நோய் பாதிப்பு வந்து நீங்கும். பகை உணர்வு ஏற்படும். தொழில் நன்மை உண்டாகும். பணக் கஷ்டம் ஏற்படக் கூடும். மாணவர் படிப்பில் ஆர்வம் காட்டுவது நல்லது. கடுமையான பேச்சுக்களை தவிர்ப்பது நன்மை அளிக்கும்.
- பரிகாரம்: ஆஞ்சநேயர் பிரார்த்தனை செய்வது தைரியம் அதிகரிக்கும்.
சிம்மம்:
கணவன் மனைவிக்கிடையில் மனஸ்தாபம் ஏற்படும். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. தாம்பத்திய உறவில் விரிசல் ஏற்படக் கூடும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். சிவில் துறையில் இருப்பவர்களுக்கு இரட்டிப்பு லாபம் உண்டாகும். உடல் நலனில் கவனம் செலுத்துவது நல்லது. கால், எலும்பு வலி ஏற்படக் கூடும். உறவினர் மற்றும் நண்பர்களிடத்தில் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம்.
- பரிகாரம்: ருத்ராபிஷேகம் அணிந்து கொள்வது நல்லது.
கன்னி:
எதிரிகள் உங்களை விட்டு விலகி செல்வார்கள். தந்தை மற்றும் உறவினர்களின் உதவி கிடைக்கும். தைரியம் அதிகரிக்கும். கடன் தொல்லையிலிருந்து விடுதலை கிடைக்கும். செலவு அதிகரிக்கும். சிக்கமாக இருப்பது அவசியம். சகோதரர்களுக்கிடையில் மனஸ்தாபம் ஏற்படக் கூடும். மாணவர் நன்மை.
- பரிகாரம்: நரசிம்மர் வழிபாடு செய்வது நன்மை அளிக்கும்.
துலாம்:
குழந்தைகள் விஷயங்களில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. குழப்பம் ஏற்படும். பெரியோர்களின் ஆலோசனை கேட்பது நல்லது. கணவன் மனைவிக்கிடையில் தாம்பத்ய உறவில் மனஸ்தாபம் ஏற்படும். வயிறு பிரச்சனை ஏற்படக் கூடும். மாணவர் படிப்பில் ஆர்வம் காட்டுவது நல்லது.
- பரிகாரம்: லலிதா சஹஸ்ரநாமம் பாராயணம் செய்ய வேண்டும். ஆஞ்சநேயர் வழிபாடு மேற்கொள்வது அவசியம்.
விருச்சிகம்:
பழைய வீட்டை புதுப்பது பற்றிய எண்ணம் மேலோங்கும். உறவினர் மற்றும் நண்பர்களின் உதவி கிடைக்கும். பழைய நண்பரின் மூலமாக உதவி கிடைக்கும். வாகனம் வாங்கும் யோகம் தேடி வரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
- பரிகாரம்: துர்கா அஷ்டோத்திரம் சொல்ல வேண்டும்.
தனுசு:
சகோதரர்களுக்கிடையில் ஒற்றுமை மேலோங்கும். தைரிய சாகச காரிய சித்தி ஏற்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். நெருங்கிய உதவியாளர் உதவி கிடைக்கும். வீண் செலவு ஏற்படும். தைரியம் மற்றும் வீரம் அதிகரிக்கும்.
- பரிகாரம்: குரு ஸ்தோத்திரம் சொல்ல வேண்டும்.
மகரம்:
குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். நிதி உதவி கிடைக்கும். படிப்பில் மாணவர்களுக்கு ஆர்வம் கிடைக்கும். உணவில் கவனம் செலுத்த வேண்டும். அதிக ஆசை பிரச்சனையை ஏற்படுத்தும்.
- பரிகாரம்: ஆஞ்சநேயர் வடை மாலை சாற்றி வழிபாடு செய்ய வேண்டும்.
கும்பம்:
அரசியலில் நன்மை உண்டாகும். அலுவலகத்தில் சக பணியாளர்களின் உதவி கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உடல் நலக் குறைவு ஏற்படும். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது.
- பரிகாரம்: சனி கவசம் பாடுவது நன்மை அளிக்கும்.
மீனம்:
செலவு அதிகரிக்கும். நெருங்கியவர் இழப்பு ஏற்படக் கூடும். கால் பிரச்சனை வரும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும். வண்டியில் செல்லும் போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சரிவு ஏற்படக் கூடும்.
- பரிகாரம்: சனிக்கிழமைதோறும் சனி பகவானுக்கு எள் எண்ணெயில் விளக்கு ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும்.
சனி பகவானின் அருள் பெற, ‘நீலாஞ்சன ஸமாபாஸம், ரவிபுத்ரம் யமாக்ரஜம்; சாயா மார்தாண்ட ஸம்பூதம், தம் நமாமி சனைச்சரம்’ என்ற ஸ்தோத்திரத்தை தினமும் பாராயணம் செய்யலாம். இது தவிர, சனி சாலிசா, ஹனுமான் சாலிசா, கோளறு பதிகம் ஆகிய ஸ்தோத்திரங்களை கூறுவதும் பலன் தரும்.