காஞ்சிபுரம் :
காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் அருகே மானாம்பதி சாலையில் அமைந்துள்ள பழமையான அங்காள பரமேசுவரி அம்மன் கோயிலில், ஆடி மாத அமாவாசையை முன்னிட்டு வியாழக்கிழமை திருவிளக்கு பூஜை சிறப்பாக நடைபெற்றது.
இந்த பூஜையையொட்டி மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, பின்னர் கோ.பூஜை, சுமங்கலி பூஜை மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன.
சுமார் 200க்கும் மேற்பட்ட பெண்கள் திருமண பாக்கியம், குடும்ப நலன் மற்றும் செல்வ செழிப்பு வேண்டி திருவிளக்கு பூஜையில் கலந்துகொண்டனர்.
பின்பு உற்சவர் அங்காள பரமேசுவரி அம்மன், ஊஞ்சலில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இந்த நிகழ்வுக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாக குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.