காஞ்சிபுரம், நவ.4:
காஞ்சிபுரம் அருகே திருமுக்கூடலில் அமைந்துள்ள ஸ்ரீ ஆனந்தவல்லி சமேத ஆதிபுரீசுவரர் கோயிலில் ஐப்பசி மாத பௌர்ணமியயொட்டி செவ்வாய்க்கிழமை மூலவருக்கு அன்னாபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வேகவதியாறு,பாலாறு,செய்யாறு ஆகிய 3 ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் அமைந்துள்ளது திருமுக்கூடல் எனும் கிராமம்.தட்சண திரிவேணி சங்கமம் என்றும் போற்றப்படுகிற இங்கு பிரதோஷ தினத்தில் மூலவர் சுயும்புலிங்கமாக வெளிப்பட்ட புண்ணியஸ்தலமுமாகும்.
இக்கோயிலில் உலக நன்மைக்காக ஐப்பசி மாத பௌர்ணமியையொட்டி மூலவர் ஆதிபுரீசுவரரக்கு அன்னாபிஷேகம் நடத்தப்பட்டு சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன.
மாலையில் அன்னம் கலைந்து பாலாற்றில் விடுதலும், பக்தர்களுக்கு அமுதூட்டலும், அன்னம் பாலித்தலும் நடைபெற்றது.
அன்னாபிஷேக பெருவிழாவை 23 வது ஆண்டாக திருமுக்கூடல் ஆதிபுரீஸ்வரர் அறக்கட்டளையின் நிறுவனர் பி.யோகராஜ் தலைமையில் விழாக்குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள் இணைந்து செய்திருந்தனர்.
.png)