காஞ்சிபுரம், நவ.21:
காஞ்சிபுரம் திருக்காலிமேடு பகுதியில் அருந்ததியர் நகரில் அமைந்துள்ளது மாத்தம்மன் மற்றும் வரசித்தி விநாயகர் திருக்கோயில். கும்பாபிஷேகத்தையொட்டி இக்கோயில் புதுப்பிக்கப்பட்டு யாகசாலை பூஜைகள் வியாழக்கிழமை காலையில் கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. கோ.பூஜை, தனபூஜை, நவக்கிரகஹோமம் மற்றும் மகாலட்சுமி ஹோமம் ஆகியனவும் நடைபெற்றது.
வெள்ளிக்கிழமை 2 வது நாளாக காலையில் யாகசாலை பூஜையில் மகா பூரணாகுதி தீபாராதனைகள் நடைபெற்றது.காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோயில் தலைமை பூஜகர் கே.ஆர்.காமேசுவர சிவாச்சாரியார் யாகசாலை பூஜைகளை நடத்தினார்.மகா பூரணாகுதி தீபாராதனைக்குப் பிறகு புனிதநீர்க்குடங்கள் கோபுரத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து மூலவர் மாத்தம்மனுக்கும், வர சித்தி விநாயகருக்கும் சிறப்பு அபிஷேகமும், அதனையடுத்து தீபாராதனை, பக்தர்களுக்கு அன்னதானமும் நடைபெற்றது.
இரவு சுவாமி வீதியுலா நடைபெற்றது.கும்பாபிஷேகத்திலும்,அபிஷேக நிகழ்விலும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் மற்றும் திருக்காலிமேடு தெருவாசிகள் ஆகியோர் செய்திருந்தனர்.
.png)