காஞ்சிபுரம், நவ.4:
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் காசிபுக்கா நகரில் உள்ள வெங்கடேசுவர சுவாமி கோயிலில் இம்மாதம் 1 ஆம் தேதி சனிக்கிழமை கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர்.
இச்சம்பவத்தில் மேலும் 20 பேர் காயமடைந்தனர்.உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் மோட்ச தீபம் ஏற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து சம்பவத்தில் காயமடைந்தவர்கள் விரைவாக குணமடையவும் ஆலயத்தில் பிரார்த்தனை செய்யப்பட்டது. மத்தியப்பிரதேச மாநில அமைச்சர் சுவாமி தரிசனம்
மாதம் தோறும் வரக்கூடிய பௌர்ணமியன்று காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் நள்ளிரவு நவ ஆவர்ண பூஜை நடத்தப்பட்டு பக்தர்களுக்கு சங்குத்தீர்த்தம் மற்றும் பிரசாதம் வழங்கப்படுவது வழக்கம். ஐப்பசி மாத பௌர்ணமியையொட்டி ஆலயத்தில் நவ ஆவர்ணபூஜை கோயில் ஸ்தானீகர்களால் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு தீர்த்தமும்,பிரசாதமும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் மத்தியப்பிரதேச மாநில நீர்வளத்துறை அமைச்சர் துல்சிராம் சிலாவத்ஜி தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார்
.png)