காஞ்சிபுரம், நவ.3:
பஞ்சபூத ஸ்தலங்களில் நிலத்துக்கு உரியதாக போற்றப்படுவது காஞ்சிபுரத்தில் உள்ள ஏலவார்குழலி சமேத ஏகாம்பர நாதர் சுவாமி கோயில்.இக்கோயிலில் மகாகும்பாபிஷேகம் செய்வதற்காக ரூ.29 கோடி மதிப்பில் திருப்பணிகள் நடைபெற்று நிறைவு பெறும் நிலையில் உள்ளன.
மகா கும்பாபிஷேகம் வரும் டிசம்பர் 8 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனையொட்டி கோயில் ராஜகோபுரம் முன்பாக பந்தல்கால் நடும் விழா அதிகாலை 6 மணிக்கு நடைபெற்றது.
பந்தல்காலுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் செய்யப்பட்டு பந்தல்கால் நடப்பட்டது.
.png)