காஞ்சிபுரம், நவ.27:
சின்னக்காஞ்சிபுரத்தில் அமைந்துள்ளது பழமையான விளக்கொளிப் பெருமாள் கோயில்.ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட பெருமைக்குரிய இக்கோயிலில் கார்த்திகை மாத திருவோண நட்சத்திரத்தையொட்டி தெப்பத் திருவிழா நடைபெற்றது.
ஸ்ரீதேவி,பூதேவியருடன் உற்சவர் விளக்கொளிப் பெருமாள் என்ற தீபப்பிரகாசர், மரகத வல்லித் தாயார், தூப்புல் வேதாந்த தேசிகர் சுவாமிகள் ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் அமர்ந்தவாறு வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன. ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் செய்திருந்தனர்.
.📰 காஞ்சிபுரம் மாவட்ட தலைமைச் செய்தியாளர்: E. ஜாபர்
🔮 2026 புத்தாண்டு ராசி பலன் & பரிகாரம்: இந்த ஆண்டு உங்கள் அதிர்ஷ்டத்தை திறக்கும் ரகசியங்கள்!
நல்ல பலன்களை அடைய என்ன செய்யவேண்டும்? பரிகாரம் என்ன?
.png)