"அட்சய திருதியை வந்தாலே நகைக்கடைகளில் அலைமோதும் கூட்டத்தைப் பார்க்கிறோம். தங்கம் வாங்கினால் மட்டும்தான் மகாலட்சுமி வருவாளா? அப்படியென்றால் தங்கம் வாங்க முடியாதவர்கள் நிலை என்ன? உண்மையில் 'அட்சயம்' என்றால் 'தேயாதது' அல்லது 'குறையாதது' என்று பொருள். நகைக்கடைக்குப் போவதை விட, இந்த நாளில் நீங்கள் செய்ய வேண்டிய மிக முக்கியமான மூன்று காரியங்கள் உள்ளன. அவை உங்கள் தலைமுறைக்கே செல்வத்தைச் சேர்க்கும். ஆதி அந்தம் அத்தியாயத்தில் இன்று நாம் காண்பது: தங்கத்தை விட மேலான அட்சய திருதியை ரகசியங்கள்!"
அட்சய திருதியை: ஏன் இவ்வளவு சிறப்பு?
- ஆன்மீக ரீதியாக இந்த நாள் பல வரலாற்று நிகழ்வுகளின் சாட்சி:
- திரேதா யுகம் இந்த நாளில்தான் தொடங்கியது.
- மகாலட்சுமி விஷ்ணுவின் திருமார்பில் இடம்பிடித்த நாள்.
- அன்னபூரணி சிவபெருமானுக்கு உணவு அளித்து பிட்சாடனர் கோலம் நீக்கிய நாள்.
- குசேலர் கொண்டு வந்த ஒரு பிடி அவலுக்காக, கிருஷ்ணர் அவருக்கு அள்ள அள்ளக் குறையாத செல்வத்தை வழங்கிய நாள்.
இந்த நாளில் என்ன செய்ய வேண்டும்?
1. தங்கம் வேண்டாம்... கல் உப்பு வாங்குங்கள்!
தங்கத்தை விட மகாலட்சுமிக்கு மிகவும் நெருக்கமான ஒரு பொருள் இந்த பூமியில் உண்டென்றால் அது கல் உப்பு. மகாலட்சுமி கடலில் பிறந்தவள், உப்பும் கடலில் பிறந்தது. இந்த நாளில் உங்கள் வீட்டிற்குப் புதிதாக ஒரு பாக்கெட் கல் உப்பு வாங்கி வந்து, அதை உங்கள் உப்பு ஜாடியில் நிரப்புங்கள்.
2, மஞ்சள், குங்குமம்
தங்கம் வாங்குவதற்குப் பதில், வாழ்வாதாரத்திற்குத் தேவையான தானியங்களை (பருப்பு, அரிசி) அல்லது மஞ்சள், குங்குமம் போன்றவற்றை வாங்கலாம்.
குசேலர் கிருஷ்ணருக்குத் தங்கம் கொடுக்கவில்லை, ஒரு பிடி அவல் தான் கொடுத்தார். ஆனால் அவருக்குக் கிடைத்தது அள்ள அள்ளக் குறையாத செல்வம்.
உங்கள் சக்திக்கு உட்பட்ட ஒரு பொருளை வாங்கி, அதை இறைவனுக்குப் படைப்பதுதான் உண்மையான அட்சயம்.
3. "உதவி" - அதுவே பெரிய புண்ணியம் :
அட்சய திருதியை அன்று நாம் செய்யும் எந்த ஒரு செயலும் பல கோடி மடங்கு பெருகும் என்பது பிரபஞ்ச விதி.
நீங்கள் தங்கம் வாங்கினால் அது உங்கள் பீரோவில் மட்டும் இருக்கும். ஆனால், இந்த நாளில் ஒரு வேளை அன்னதானம் செய்தால் அல்லது ஏழை மாணவரின் கல்விக்கு உதவினால், அந்தப் 'புண்ணியம்' உங்கள் ஜாதகத்தில் உள்ள கர்மவினைகளை நீக்கி, செல்வச் செழிப்பைத் தரும். அட்சய திருதியை அன்று நீங்கள் செய்யும் 'தானம்' தான் உங்கள் அடுத்தடுத்த பிறவிகளிலும் உங்களுக்குத் துணையாக வரும் உண்மையான அட்சயம்.
ஜோதிட ரகசியம்:
அட்சய திருதியை நாளில் நிகழப்போற ஒரு அபூர்வ கிரக நிலை உங்க ஜாதகத்தையே மாற்றப்போகுது. சூரியன் மேஷத்திலும், சந்திரன் ரிஷபத்திலும் உச்சம் பெறும் இந்த நாளில், நீங்கள் ஒரு நல்ல பழக்கத்தைத் தொடங்கலாம். ஒரு புதிய தொழில் திட்டம், சேமிப்புத் திட்டம், அல்லது ஒரு கலைப் பயிற்சி - எதை இன்று தொடங்கினாலும் அது அமோகமாக வளரும். இதற்குத் தங்கம் தேவையில்லை, உங்கள் தன்னம்பிக்கை போதும்!
ஒன்னு... முன்னோர்கள் ஆசி கிடைக்க, சூரிய உதயத்துல செம்பு பாத்திரத்துல தண்ணீர் எடுத்து எள் கலந்து சூரியனுக்கு அஞ்சலி செலுத்துங்க. ரெண்டு... தீராத கடன் தீர, ஒரு வெள்ளை துணியில கல் உப்பு, 5 கோமதி சக்கரம் வச்சு முடிச்சு போட்டு உங்க பணப்பெட்டியில வைங்க. சந்திர பலத்தால பண வரவு பெருகும்!"
"மூணு... திருமணத் தடை நீங்க, சுமங்கலிப் பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், கண்ணாடியைத் தானமா கொடுங்க. நாலு... தொழில்ல வெற்றி பெற, ஏழை மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்களைத் தானம் செய்யுங்க. இந்த நாள்ல நீங்க கொடுக்கிற தானம், உங்க புண்ணியத்தை அட்சயமாகப் பெருக்கும்!"
"தங்கம் ஒரு உலோகம் மட்டுமே, ஆனால் உங்கள் தர்மம் தான் உண்மையான செல்வம். இந்த அட்சய திருதியை அன்று நகைக்கடைக்கு ஓடுவதை விட, ஒரு ஏழையின் பசியைத் தீர்த்துப் பாருங்கள்... உங்கள் வீட்டில் மகாலட்சுமி நிரந்தரமாகக் குடிபுகுவாள்! அடுத்த 'ஆதி அந்தம்' ரகசியத்தில் உங்களைச் சந்திக்கிறேன். மறக்காமல் Way to Astro Tamil-க்கு சப்ஸ்கிரைப் செய்யுங்கள்!

