♈ மேஷம் - செல்வாக்கு கூடும் நாள்
மேஷ ராசி நேயர்களே, இந்த நாள் உங்களது உத்தியோகப் பணிகளில் மேலதிகாரிகள் மூலம் புதிய பொறுப்புகள் தேடி வரும். தொழில் மற்றும் வியாபாரப் பணிகளில் எதிர்பார்த்த நல்ல லாபங்கள் ஏற்படும். புதிய மற்றும் முக்கிய நபர்களின் அறிமுகம் உங்களுக்குத் தடையின்றி கிடைக்கும்.
தந்தையின் வழியில் உங்களுக்குச் சாதகமான ஒத்துழைப்பான சூழ்நிலை ஏற்படும். நீண்ட நாட்களாக உங்களை வாட்டி வதைத்த கடன் சார்ந்த இன்னல்கள் பெருமளவில் குறையும்.
உங்களது தனிப்பட்ட பேச்சாற்றல் மூலம் மற்றவர்களை எளிதில் கவர்வீர்கள். வெளிவட்டாரப் பழக்கவழக்கங்களில் உங்களது செல்வாக்கு அதிகரிக்கும். ஊடகம் மற்றும் சமூகத் தொடர்புத் துறைகளில் இருப்பவர்களுக்குப் புதிய நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு | அதிர்ஷ்ட எண் : 2 | அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள் நிறம்
நட்சத்திர பலன் : அஸ்வினி : பொறுப்புகள் கிடைக்கும்.
பரணி : ஒத்துழைப்பான நாள்.
கிருத்திகை : வாய்ப்புகள் கிடைக்கும்.
♉ ரிஷபம் - முன்னேற்றம் தரும் நாள்
ரிஷப ராசி நேயர்களே, இந்த நாள் உங்களது குடும்ப உறுப்பினர்களின் அத்தியாவசிய தேவைகளைக் கேட்டறிந்து நிறைவேற்றுவீர்கள். அரசு சார்ந்த பணிகளில் நீண்ட நாட்களாக இருந்துவந்த தேக்கநிலை மாறி நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
வீட்டில் தள்ளிப்போன சுபகாரியத் தொடர்பான பேச்சுவார்த்தைகள் எளிதில் கைகூடும். தொழில் மற்றும் வியாபார நிமித்தமான புதிய முதலீடுகள் பெருமளவில் அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே ஒருவரையொருவர் புரிந்து கொண்டு அனுசரித்து நடந்து கொள்ளவும்.
உங்களது மனதில் நீண்ட நாட்களாக நினைத்த காரியங்கள் எண்ணியபடியே நிறைவேறும். உத்தியோகப் பணிகளில் நீங்கள் எதிர்பார்த்த சில சாதகமான மாற்றங்கள் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு | அதிர்ஷ்ட எண் : 3 | அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
நட்சத்திர பலன் : கிருத்திகை : முன்னேற்றம் உண்டாகும்.
ரோகிணி : முதலீடுகள் அதிகரிக்கும்.
மிருகசீரிஷம் : மாற்றம் ஏற்படும்.
♊ மிதுனம் - வெற்றிகள் குவியும் நாள்
மிதுன ராசி நேயர்களே, இந்த நாள் வெளிவட்டாரத்தில் உங்களுக்கான மதிப்புகளும் மரியாதைகளும் பெருமளவில் அதிகரிக்கும். வாழ்க்கையின் முக்கிய விஷயங்களில் தைரியமாகப் பல முடிவுகளை எடுப்பீர்கள்.
தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்துவந்த மறைமுகமான எதிர்ப்புகளை உங்களது புத்தி கூர்மையால் வெற்றி கொள்வீர்கள். உங்களது பழைய நண்பர்களின் திடீர் சந்திப்புகள் ஏற்பட்டு மனதிற்கு மகிழ்ச்சி தரும். நீண்ட நாள் கடன்களை அடைப்பதற்கான நல்ல ஆலோசனைகளும் வழிகளும் கிடைக்கும்.
வியாபாரத்தில் நீங்கள் கையாளும் மாற்றமான அணுகுமுறையால் லாபம் கணிசமாக மேம்படும். வேலை செய்யும் இடத்தில் உயர் அதிகாரிகளிடத்தில் நல்ல நெருக்கமும் இணக்கமும் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு | அதிர்ஷ்ட எண் : 1 | அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்
நட்சத்திர பலன் : மிருகசீரிஷம் : மதிப்புகள் அதிகரிக்கும்.
திருவாதிரை : சந்திப்புகள் ஏற்படும்.
புனர்பூசம் : நெருக்கம் உண்டாகும்.
♋ கடகம் - விவேகம் வேண்டிய நாள்
கடக ராசி நேயர்களே, இந்த நாள் உங்களது மனதளவில் சிறுசிறு வீண் கவலைகள் ஏற்பட்டு, பின்னர் உடனே நீங்கும். பிறரிடம் பேசும்போது தெளிவற்ற குழப்பமான பேச்சுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது. மற்றவர்களிடம் அனாவசியமான தற்பெருமை பேச்சுகளைக் குறைத்துக் கொள்வது நற்பெயரைக் காக்கும்.
திடீர் பயணங்கள் மேற்கொள்வதன் மூலம் வாழ்க்கைக்குத் தேவையான புதிய நல்ல அனுபவம் ஏற்படும். ஆன்மீக மற்றும் தெய்வீகப் பணிகளில் உங்களது ஈடுபாடும் ஆர்வமும் அதிகரிக்கும். சபை மற்றும் பொதுப் பணிகளில் உங்களுக்கான முக்கியத்துவம் மேம்படும்.
மற்றவர்களின் குறைகளை ஆராய்ந்து பெரிதுபடுத்தாமல் இருப்பது நல்லது. சவாலான செயல்களில் அவசரப்படாமல் சிந்தித்துச் செயல்படவும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு | அதிர்ஷ்ட எண் : 3 | அதிர்ஷ்ட நிறம் : ரோஸ் நிறம்
நட்சத்திர பலன் : புனர்பூசம் : கவலைகள் நீங்கும்.
பூசம் : அனுபவம் ஏற்படும்.
ஆயில்யம் : சிந்தித்து செயல்படவும்.
♌ சிம்மம் - மகிழ்ச்சி நிலவும் நாள்
சிம்ம ராசி நேயர்களே, இந்த நாள் உங்களது மனதளவில் இருந்த நீண்ட நாள் வருத்தங்களும் ஏங்கங்களும் பெருமளவில் குறையும். குடும்பத்தில் உள்ளவர்களிடையே அன்பும் மகிழ்ச்சியும் உண்டாகும். புதிய பொன், பொருள் மற்றும் விலை உயர்ந்த பொருட்களின் சேர்க்கை உங்களுக்குத் தடையின்றி ஏற்படும்.
நீங்கள் பெரிதும் எதிர்பார்த்த சில முக்கிய உதவிகள் உங்களுக்குச் சாதகமாக அமையும். உடல் ஆரோக்கியம் தொடர்பான நீண்ட நாள் இன்னல்களும் சோர்வுகளும் குறையும்.
எதிர்கால நலன் கருதி சேமிப்பு தொடர்பான முயற்சிகள் மனதில் அதிகரிக்கும். வியாபாரத்தில் தொழில் விரிவாக்கத்திற்கான முதலீடுகள் அதிகரிக்கும். உத்தியோகப் பணி நிமித்தமான புதிய சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு | அதிர்ஷ்ட எண் : 9 | அதிர்ஷ்ட நிறம் : செந்நிறம்
நட்சத்திர பலன் : மகம் : வருத்தங்கள் குறையும்.
பூரம் : இன்னல்கள் குறையும்.
உத்திரம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
♍ கன்னி - தெளிவுகள் பிறக்கும் நாள்
கன்னி ராசி நேயர்களே, இந்த நாள் நீங்கள் பல வழிகளில் எதிர்பார்த்திருந்த சில முக்கிய உதவிகள் தடையின்றிக் கிடைக்கும். வீட்டில் சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் நல்ல முன்னேற்றமும் அனுகூலமும் ஏற்படும்.
மாணவர்களுக்குக் கணிதம் மற்றும் அறிவியல் தொடர்பான துறைகளில் ஆர்வம் அதிகரிக்கும். வங்கி சார்ந்த துறைகளில் பணிபுரிபவர்களுக்கு வேலைப் பொறுப்புகள் மேம்படும். எந்தவொரு காரியத்திலும் முன் கோபம் இன்றி அமைதியுடன் செயல்படுவது நல்லது.
நிர்வாகம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்குப் புதிய நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். ஆன்மீகப் பணிகளில் இருந்துவந்த நீண்ட நாள் குழப்பங்கள் நீங்கி தெளிவுகள் பிறக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு | அதிர்ஷ்ட எண் : 1 | அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்
நட்சத்திர பலன் : உத்திரம் : உதவிகள் கிடைக்கும்.
அஸ்தம் : பொறுப்புகள் மேம்படும்.
சித்திரை : குழப்பங்கள் விலகும்.
♎ துலாம் - பொறுமை வேண்டிய நாள்
துலா ராசி நேயர்களே, இந்த நாள் உங்களது முகத்தில் புதிய பொலிவுகளும் மகிழ்ச்சியும் உண்டாகும். மனதில் பொன், பொருள் வாங்கும் ஆடம்பர எண்ணங்கள் அதிகரிக்கும்.
ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பல பணிகளைப் பார்க்க வேண்டிய சூழ்நிலைகள் அமையலாம். எந்தவொரு சிறிய செயலிலும் அவசரப்படாமல் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. பொது மற்றும் சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு உயரிய கௌரவப் பொறுப்புகள் கிடைக்கும்.
உங்களது நினைவாற்றலில் இருந்துவந்த மந்த தன்மைகள் முற்றிலும் விலகும். மற்றவர்களிடம் நீங்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து இருந்த சில முக்கிய உதவிகள் தடையின்றிக் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு | அதிர்ஷ்ட எண் : 2 | அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை நிறம்
நட்சத்திர பலன் : சித்திரை : பொழிவுகள் உண்டாகும்.
சுவாதி : பொறுமை வேண்டும்.
விசாகம் : உதவிகள் கிடைக்கும்.
♏ விருச்சிகம் - விழிப்புணர்வு வேண்டிய நாள்
விருச்சிக ராசி நேயர்களே, இந்த நாள் உங்களது நண்பர்கள் வழியில் சில தேவையற்ற பண விரயங்கள் உண்டாகலாம் என்பதால் எச்சரிக்கை தேவை. தொழில் மற்றும் வியாபாரம் நிமித்தமான அலைச்சல்கள் சற்றே மேம்படும்.
புதிய மனிதர்களின் கருத்துக்களை அப்படியே நம்பாமல் தீரச் சிந்தித்து முடிவெடுக்கவும். விலை உயர்ந்த பொருட்கள் மற்றும் ஆபரணங்களைக் கையாளும்போது கூடுதல் கவனம் வேண்டும். உங்களோடு உடன் இருப்பவர்களால் வாழ்க்கையில் புதிய கண்ணோட்டம் பிறக்கும்.
ஆரோக்கியம் காக்க நீண்ட நேரம் கண் விழித்து வேலை செய்வதைக் குறைத்துக் கொள்ளவும். உங்களை வாட்டி வதைத்த கடன் சார்ந்த பிரச்சனைகள் பெருமளவில் குறையும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு | அதிர்ஷ்ட எண் : 1 | அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
நட்சத்திர பலன் : விசாகம் : விரயங்கள் உண்டாகும்.
அனுஷம் : கவனம் வேண்டும்.
கேட்டை : பிரச்சனைகள் குறையும்.
♐ தனுசு - மனமகிழ்ச்சி தரும் நாள்
தனுசு ராசி நேயர்களே, இந்த நாள் உங்களுக்குக் கால்நடை வளர்ப்புத் துறைகளில் புதிய நல்வாய்ப்புகள் கிடைக்கும். புதிய ஆடம்பரப் பொருட்களின் மீது உங்களுக்கு ஈடுபாடும் ஆர்வமும் ஏற்படும். உங்களது மனதில் நீண்ட நாட்களாக எண்ணியிருந்த சுப காரியங்கள் எண்ணியபடியே கைகூடும்.
தொழில் நிமித்தமாக மேற்கொள்ளும் வெளியூர் பயணங்களால் நல்ல நன்மைகளும் அனுகூலமும் உண்டாகும். எதிர்காலச் சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மனதில் மேம்படும். உங்களது மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சி தரக்கூடிய நல்ல செய்திகள் வந்து சேரும்.
உங்களது உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்களும் சோர்வுகளும் பெருமளவில் குறையும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு | அதிர்ஷ்ட எண் : 6 | அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
நட்சத்திர பலன் : மூலம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
பூராடம் : நன்மைகள் உண்டாகும்.
உத்திராடம் : இன்னல்கள் குறையும்.
♑ மகரம் - லாபம் பெருகும் நாள்
மகர ராசி நேயர்களே, இந்த நாள் உங்களது மனதளவில் இருந்த நீண்ட நாள் குழப்பங்கள் முற்றிலும் நீங்கி நல்ல தெளிவுகள் பிறக்கும். அரசு சார்ந்த செயல்பாடுகளில் அவசரப்படாமல் கூடுதல் விவேகத்துடன் செயல்படுவது நல்லது.
தொழில் மற்றும் வியாபாரம் நிமித்தமாக மேற்கொள்ளும் வெளியூர் பயணங்கள் உங்களுக்கு மிகவும் சாதகமாக அமையும். உங்களது எதிர்காலம் சார்ந்த சிந்தனைகளும் திட்டங்களும் மனதில் மேம்படும். மாணவர்களுக்குக் கல்வியில் நல்ல முன்னேற்றமும் ஆர்வமும் ஏற்படும்.
செய்யும் எந்தவொரு காரியத்திலும் சுய ஆதாயத்துடன் சிந்தித்துச் செயல்படுவீர்கள். வியாபார அபிவிருத்தி சார்ந்த புதிய உதவிகள் உங்களுக்குச் சரியான நேரத்தில் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு | அதிர்ஷ்ட எண் : 3 | அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
நட்சத்திர பலன் : உத்திராடம் : தெளிவுகள் பிறக்கும்.
திருவோணம் : சிந்தனைகள் மேம்படும்.
அவிட்டம் : உதவிகள் கிடைக்கும்.
♒ கும்பம் - தன்னம்பிக்கை கூடும் நாள்
கும்ப ராசி நேயர்களே, இந்த நாள் உங்களது மனதிற்கு நெருக்கமானவர்களின் நியாயமான தேவைகளைக் கேட்டறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். நீங்கள் எடுக்கும் திடீர் முடிவுகளால் வாழ்க்கையில் சில நல்ல மாற்றங்கள் ஏற்படும்.
பொது மற்றும் சமூகப் பணிகளில் உங்களுக்கு ஈடுபாடும் ஆர்வமும் உண்டாகும். உங்களது அலுவலகத்தில் நீண்ட நாட்களாக இருந்துவந்த பணி நெருக்கடிகள் முற்றிலும் மறையும். உங்களது மறைமுகத் திறமைகளைப் பிறரிடம் வெளிப்படுத்துவதற்கான நல்வாய்ப்புகள் கிடைக்கும்.
உங்களது மனதில் எந்தவொரு காரியத்தையும் சுலபமாகச் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கை பெருமளவில் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு | அதிர்ஷ்ட எண் : 6 | அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
நட்சத்திர பலன் : அவிட்டம் : மாற்றங்கள் ஏற்படும்.
சதயம் : நெருக்கடிகள் மறையும்.
பூரட்டாதி : தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
♓ மீனம் - நிதானம் வேண்டிய நாள்
மீன ராசி நேயர்களே, இந்த நாள் நீங்கள் உங்களது தொழில் மற்றும் வியாபாரம் நிமித்தமான முக்கிய பணிகளில் அவசரப்படாமல் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. மற்றவர்களிடம் பேசும்போது பேச்சுக்களில் கனிவும் நிதானமும் வேண்டும்.
ஆரோக்கியம் காக்க நீண்ட நேரம் கண்விழிப்பதைத் தவிர்ப்பது நல்லது. அரசியல் துறையில் இருப்பவர்கள் புதிய வாக்குறுதிகளை பிறருக்கு அளிப்பதைத் முற்றிலும் தவிர்க்கவும். எதிர்பாராத சில அத்தியாவசிய செலவுகள் வருவதன் மூலம் கையில் சற்றே நெருக்கடியான சூழ்நிலை உண்டாகலாம்.
வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரிகள் மற்றும் உயரதிகாரிகளிடம் வீண் தர்க்கம் செய்யாமல் அனுசரித்துச் செல்லவும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு | அதிர்ஷ்ட எண் : 3 | அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
நட்சத்திர பலன் : பூரட்டாதி : சிந்தித்து செயல்படவும்.
உத்திரட்டாதி : வாக்குறுதிகளில் கவனம்.
ரேவதி : அனுசரித்து செல்லவும்.
முடிவுரை:
ஒவ்வொரு நாளும் புதிய வாய்ப்புகளையும் சவால்களையும் உள்ளடக்கியதே. கிரகங்களின் சாதகமான சூழலைத் துணையாகக் கொண்டு, விவேகத்துடனும் தன்னம்பிக்கையுடனும் செயல்பட்டால் இந்த நாள் உங்களுக்குப் பொன்னான நாளாக அமையும் என்பதில் ஐயமில்லை!
வாழ்க வளமுடன்..!

