♈ மேஷம் - அன்பு அதிகரிக்கும் நாள்
மேஷ ராசி நேயர்களே, இந்த நாள் உங்களுடைய கலகலப்பான பேச்சுகளால் நட்பு வட்டம் பெருமளவில் அதிகரிக்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒருவருக்கொருவர் அன்பும் பாசமும் அதிகரிக்கும். உங்களது எதிர்காலம் தொடர்பான சில முக்கிய முடிவுகளை இந்த நாள் தைரியமாக எடுப்பீர்கள்.
உங்களது வருமானத்தை உயர்த்துவதற்கான சேமிப்பு குறித்த சிந்தனைகள் மனதில் மேலோங்கும். மாணவர்களுக்கு மேல்நிலைக் கல்வியில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி நல்ல தெளிவுகள் பிறக்கும். கால்நடைகள் வளர்ப்பு மற்றும் அது தொடர்பான வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு லாபகரமான நல்ல சூழ்நிலை உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு | அதிர்ஷ்ட எண் : 9 | அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
நட்சத்திர பலன் : அஸ்வினி : அன்பு அதிகரிக்கும்.
பரணி : சிந்தனைகள் மேம்படும்.
கிருத்திகை : லாபகரமான நாள்.
♉ ரிஷபம் - இலக்குகள் பிறக்கும் நாள்
ரிஷப ராசி நேயர்களே, இந்த நாள் உங்களது கையில் இருக்கும் பணத்தை வீண் விரயம் செய்யாமல் ஆடம்பரச் செலவுகளை பெருமளவில் குறைப்பீர்கள். வாழ்க்கையில் முன்னேறுவதற்கான புதுவிதமான நல் இலக்குகள் உங்களது மனதில் பிறக்கும். மனதில் திட்டமிட்ட பணிகள் அனைத்தும் எண்ணியபடியே நல்லபடியாக நிறைவேறும்.
நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த பூர்வீக சொத்துக்கள் மூலம் நல்ல லாபமும் ஆதாயமும் உண்டாகும். எதிர்பாராத சில திடீர் பயணங்கள் மேற்கொள்வதன் மூலம் வாழ்க்கையில் நல்ல மாற்றம் பிறக்கும். உங்களது பொருளாதாரத்தை மேலும் மேம்படுத்துவதற்கான புதிய நல்வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் நீங்கள் கூறும் கருத்துக்களுக்கு உண்டான மதிப்புகளும் மரியாதைகளும் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு | அதிர்ஷ்ட எண் : 2 | அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
நட்சத்திர பலன் : கிருத்திகை : இலக்குகள் பிறக்கும்.
ரோகிணி : மாற்றம் பிறக்கும்.
மிருகசீரிஷம் : மதிப்புகள் அதிகரிக்கும்.
♊ மிதுனம் - செல்வாக்கு அதிகரிக்கும் நாள்
மிதுன ராசி நேயர்களே, இந்த நாள் கல்வி கற்கும் மாணவர்களுக்கு இருந்துவந்த மறதி சார்ந்த பிரச்சனைகள் மற்றும் சோர்வுகள் பெருமளவில் குறையும். உங்களது அன்றாடக் கல்விப் பணிகளில் சில நல்ல சாதகமான மாற்றங்கள் காணப்படும். உற்றார் உறவினர்களின் வழியில் நீங்கள் எதிர்பார்த்த நல்ல ஒத்துழைப்பும் ஆதரவும் ஏற்படும்.
கால்நடைப் பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு லாபங்கள் முன்பை விட அதிகரிக்கும். வண்டி மற்றும் வாகனப் பயணம் மேற்கொள்வதன் மூலம் நல்ல ஆதாயம் அடைவீர்கள். உங்களுக்கு நெருக்கமானவர்கள் பற்றிய தெளிவான புரிதல்கள் உங்களுக்குள் உண்டாகும். தொழில் மற்றும் வியாபார ரீதியான புதிய பணிகளில் சமுதாயத்தில் உங்களது செல்வாக்கு அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு | அதிர்ஷ்ட எண் : 6 | அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்
நட்சத்திர பலன் : மிருகசீரிஷம் : பிரச்சனைகள் குறையும்.
திருவாதிரை : லாபங்கள் அதிகரிக்கும்.
புனர்பூசம் : செல்வாக்கு அதிகரிக்கும்.
♋ கடகம் - தன்னம்பிக்கை கூடும் நாள்
கடக ராசி நேயர்களே, இந்த நாள் எதிர்பாராத சில சுமுகமான விஷயங்கள் நடப்பதன் மூலம் உங்களது மனதளவில் புதிய தன்னம்பிக்கையும் தைரியமும் உருவாகும். உங்களது உத்தியோகப் பணிகளில் உங்களது முழு உழைப்புகளும் திறமைகளும் அதிகரிக்கும்.
தொழில் மற்றும் வியாபாரம் நிமித்தமான புதிய முயற்சிகள் பெருமளவில் அதிகரிக்கும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் மேலான ஒத்துழைப்புகள் உங்களுக்குச் சாதகமாக மேம்படும். உங்களது வாழ்க்கைத் துணைவர் வழியில் குடும்பத்தில் மகிழ்ச்சியான சுமுகமான சூழ்நிலை காணப்படும். உங்களது மனதில் புதிய தொழில் துறை சார்ந்த தேடல்களும் சிந்தனைகளும் மேம்படும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு | அதிர்ஷ்ட எண் : 1 | அதிர்ஷ்ட நிறம் : இளம் நீல நிறம்
நட்சத்திர பலன் : புனர்பூசம் : தன்னம்பிக்கை உருவாகும்.
பூசம் : முயற்சிகள் அதிகரிக்கும்.
ஆயில்யம் : தேடல்கள் மேம்படும்.
♌ சிம்மம் - நிதானம் வேண்டிய நாள்
சிம்ம ராசி நேயர்களே, இந்த நாள் உங்களுடைய அன்றாடப் பழக்கவழக்கங்களில் சில நல்ல மாற்றங்கள் பரவலாகக் காணப்படும். உங்களது மனதில் ஏதோ இனம் புரியாத வீண் சிந்தனைகள் ஏற்பட்டு, பின்னர் உடனே நீங்கும். வெளியில் விற்கும் துரித வகை உணவுகளை முற்றிலும் தவிர்ப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.
எதிர்பாராத சில திடீர் அலைச்சல்களால் உடலளவில் ஒருவிதமான சோர்வுகள் உண்டாகும். நீதிமன்ற வழக்கு விவகாரங்களில் அவசரப்படாமல் கூடுதல் பொறுமையைக் கையாளுவது நல்லது. உங்களுக்கு நெருக்கமானவர்கள் இடத்தில் தேவையற்ற பிடிவாதம் பிடிக்காமல் சூழ்நிலைக்கேற்ப அனுசரித்துச் செல்லவும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு | அதிர்ஷ்ட எண் : 9 | அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு நிறம்
நட்சத்திர பலன் : மகம் : மாற்றங்கள் காணப்படும்.
பூரம் : சோர்வுகள் உண்டாகும்.
உத்திரம் : அனுசரித்து செல்லவும்.
♍ கன்னி - பொறுப்புகள் அதிகரிக்கும் நாள்
கன்னி ராசி நேயர்களே, இந்த நாள் வேலை செய்யும் உத்தியோகத்தில் உங்களது திறமைக்கேற்ப புதிய வேலைப் பொறுப்புகள் அதிகரிக்கும். மற்றவர்களுடன் பேசும்போது பயனற்ற வீண் விவாதங்களையும் வாக்குவாதங்களையும் குறைத்துக் கொள்வது நல்லது.
முன்பின் தெரியாத புதியவர்களிடத்தில் எதிலும் கூடுதல் கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் செயல்படவும். உங்களது உடன் பிறந்தவர்கள் பற்றிய நல்ல புரிதல் உங்களுக்குள் மேம்படும். எந்தவொரு சிறிய செயலிலும் ஒருவித திருப்தி இல்லாத மனநிலை காணப்படும் என்பதால் அமைதி தேவை. ஒருசில பயனற்ற வீண் அலைச்சல்கள் ஏற்படலாம். நீங்கள் பெரிதும் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் சற்றே காலதாமதமாகும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு | அதிர்ஷ்ட எண் : 2 | அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
நட்சத்திர பலன் : உத்திரம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
அஸ்தம் : புரிதல் மேம்படும்.
சித்திரை : அலைச்சல்கள் ஏற்படும்.
♎ துலாம் - தெளிவுகள் பிறக்கும் நாள்
துலா ராசி நேயர்களே, இந்த நாள் நீங்கள் பணிபுரியும் இடத்தில் நீண்ட நாட்களாக இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மற்றும் மனஸ்தாபங்கள் பெருமளவில் குறையும். உங்களோடு உடனிருப்பவர்களை எதற்கும் தட்டிக்கழிக்காமல் அனுசரித்துச் சென்றால் உங்களது வேலைப் பொறுப்புகள் குறையும்.
திடீர் பயணங்கள் மேற்கொள்வதன் மூலம் வாழ்க்கைக்குத் தேவையான புதிய நல்ல அனுபவங்கள் கிடைக்கும். பழைய தேவையில்லாத விஷயங்களை நினைத்துக் குழப்பம் உண்டாகலாம் என்பதால் விழிப்புணர்வு தேவை. பிற மொழி பேசும் மக்களின் புதிய அறிமுகங்கள் உங்களுக்குத் தடையின்றி உண்டாகும். உங்களது மனதை நீண்ட நாட்களாக உறுத்திக் கொண்டிருந்த பிரச்சனைகளுக்கு நல்ல தெளிவுகள் பிறக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு | அதிர்ஷ்ட எண் : 5 | அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு நிறம்
நட்சத்திர பலன் : சித்திரை : வேறுபாடுகள் குறையும்.
சுவாதி : அனுபவங்கள் கிடைக்கும்.
விசாகம் : தெளிவுகள் பிறக்கும்.
♏ விருச்சிகம் - புத்துணர்ச்சி பெறும் நாள்
விருச்சிக ராசி நேயர்களே, இந்த நாள் உங்களுக்குக் கிடைக்கும் திடீர் தன வரவுகள் மூலம் உங்களது நீண்ட நாள் சேமிப்புகள் பெருமளவில் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் மேலான ஒத்துழைப்புகள் உங்களுக்குச் சாதகமாக மேம்படும். நீங்கள் பிறரிடம் பேசும் பேச்சுக்களில் உங்களது நீண்ட நாள் அனுபவ அறிவு வெளிப்படும்.
உங்களது மனதில் இருந்த வீண் கவலைகளும் பயங்களும் நீங்கி மனதளவில் நல்ல புத்துணர்ச்சி பெறுவீர்கள். ஐடி மற்றும் இணையம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்குப் புதிய நல்ல நல்வாய்ப்புகள் கிடைக்கும். புதிய பொன் பொருள் மற்றும் ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உங்களது உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றமும் தெம்பும் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு | அதிர்ஷ்ட எண் : 1 | அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் நிறம்
நட்சத்திர பலன் : விசாகம் : சேமிப்புகள் அதிகரிக்கும்.
அனுஷம் : அனுபவம் வெளிப்படும்.
கேட்டை : முன்னேற்றமான நாள்.
♐ தனுசு - மேன்மை தரும் நாள்
தனுசு ராசி நேயர்களே, இந்த நாள் உங்களுக்கு அரசு தொடர்பான பணிகளில் நீண்ட நாட்களாக இருந்துவந்த இழுபறிகள் மற்றும் தடைகள் முற்றிலும் மறையும். வண்டி மற்றும் வாகனப் பயணங்களால் நல்ல லாபமும் ஆதாயமும் ஏற்படும். உங்களது உடல் ஆரோக்கியம் முன்பை விடச் செம்மையாக மேம்படும்.
வேலை செய்யும் உத்தியோகப் பணிகளில் மனதிற்கு மகிழ்ச்சி தரும் நல்ல செய்திகள் கிடைக்கும். வியாபாரத்தை மேலும் விரிவுபடுத்தி மேம்படுத்துவதற்கான புதிய உதவிகள் உங்களுக்குத் தடையின்றி கிடைக்கும். கால்நடை வளர்ப்புப் பணிகளில் நல்ல மேன்மையும் அனுகூலமும் ஏற்படும். உற்றார் உறவினர்களின் மேலான ஒத்துழைப்புகள் உங்களுக்குச் சரியான நேரத்தில் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு | அதிர்ஷ்ட எண் : 6 | அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்
நட்சத்திர பலன் : மூலம் : இழுபறிகள் மறையும்.
பூராடம் : மகிழ்ச்சியான நாள்.
உத்திராடம் : ஒத்துழைப்புகள் கிடைக்கும்.
♑ மகரம் - மகிழ்ச்சி நிலவும் நாள்
மகர ராசி நேயர்களே, இந்த நாள் உங்களுக்குப் புதிய ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகளும் திட்டங்களும் மனதில் மேம்படும். நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகளில் நீங்கள் பெரிதும் எதிர்பார்த்த நல்ல முடிவுகள் உங்களுக்குக் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரப் பணிகளில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி நல்ல தெளிவுகள் பிறக்கும்.
கணவன் மனைவிக்கிடையே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து மகிழ்ச்சியான நல்ல தருணங்கள் உண்டாகும். திடீர் பயணங்கள் மேற்கொள்வதன் மூலம் வாழ்க்கையில் ஒரு நல்ல மாற்றம் உண்டாகும். மாணவர்களுக்கு விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். தந்தை வழியில் உங்களுக்குச் சாதகமான நல்ல ஒத்துழைப்புகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு | அதிர்ஷ்ட எண் : 9 | அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு நிறம்
நட்சத்திர பலன் : உத்திராடம் : சிந்தனைகள் மேம்படும்.
திருவோணம் : மாற்றம் உண்டாகும்.
அவிட்டம் : ஒத்துழைப்புகள் கிடைக்கும்.
♒ கும்பம் - நன்மைகள் கூடும் நாள்
கும்ப ராசி நேயர்களே, இந்த நாள் உங்களுடைய அன்றாடச் செயல்பாடுகளில் ஒருவித ஆர்வமின்மையான மந்த சூழல் ஏற்படலாம் என்பதால் சுறுசுறுப்பு தேவை. பணக் கொடுக்கல் வாங்கல் மற்றும் நிதி விவகாரங்களில் கூடுதல் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது.
வண்டி மற்றும் வாகனப் பயணங்களின் போது அவசரப்படாமல் கூடுதல் நிதானம் வேண்டும். மற்றவர்களுக்கு அனாவசியமாக உதவுதலில் சற்றே கவனம் வேண்டும். எளிதில் முடிந்துவிடும் என்று நீங்கள் எதிர்பார்த்த ஒருசில பணிகள் சற்றே அலைச்சலுக்குப் பின்பு நல்லபடியாக நிறைவேறும். உங்களிடம் வேலை செய்யும் வேலையாட்களிடம் கோபப்படாமல் அனுசரித்துச் செல்வதன் மூலம் தொழிலில் நல்ல நன்மை ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு | அதிர்ஷ்ட எண் : 5 | அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
நட்சத்திர பலன் : அவிட்டம் : பொறுமை வேண்டும்.
சதயம் : கவனம் வேண்டும்.
பூரட்டாதி : நன்மையான நாள்.
♓ மீனம் - வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும் நாள்
மீன ராசி நேயர்களே, இந்த நாள் உங்களுக்குப் போட்டித் தேர்வுகளில் நீங்கள் பெரிதும் எதிர்பார்த்த சாதகமான நல்ல முடிவுகள் கிடைக்கும். வியாபாரத்தில் நீங்கள் கையாளும் புதிய அணுகுமுறையால் தொழில் லாபம் கணிசமாக அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே இருந்துவந்த மனஸ்தாபங்கள் நீங்கி நெருக்கம் அதிகரிக்கும்.
குடும்பத்தில் சகோதர வகையில் நீண்ட நாட்களாக இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை மேம்படும். எவ்வளவு கடினமான செயல்களையும் உங்களது புத்தி கூர்மையால் எளிதாகச் செய்து முடிப்பீர்கள். முன்பொருமுறை உங்களது கை நழுவித் தவறிப்போன சில நல்ல வாய்ப்புகள் மீண்டும் உங்களுக்குத் தேடி கிடைக்கும். உங்களது சிறந்த நண்பர்கள் வழியில் நல்ல ஒத்துழைப்பும் ஆதரவும் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு | அதிர்ஷ்ட எண் : 2 | அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை நிறம்
நட்சத்திர பலன் : பூரட்டாதி : முடிவுகள் கிடைக்கும்.
உத்திரட்டாதி : நெருக்கம் அதிகரிக்கும்.
ரேவதி : ஒத்துழைப்பு கிடைக்கும்.
ஒவ்வொரு நாளும் புதிய வாய்ப்புகளையும் சவால்களையும் உள்ளடக்கியதே. கிரகங்களின் சாதகமான சூழலைத் துணையாகக் கொண்டு, விவேகத்துடனும் தன்னம்பிக்கையுடனும் செயல்பட்டால் இந்த நாள் உங்களுக்குப் பொன்னான நாளாக அமையும் என்பதில் ஐயமில்லை!
வாழ்க வளமுடன்..!

