Type Here to Get Search Results !

கோச்சார செவ்வாயின் பலனகள்

1) ஒரு ஜாதகனின் சந்தர லக்கினத்தில் செவ்வாய் சஞ்சரிக்கும்போது; ஜாதகனுக்கு எல்லா வகைகளிலும் தொல்லைகள் உண்டாகும்.

2) சந்திர லக்கினத்தில் இரண்டாம் இடத்தில் செவ்வாய் சஞ்சரிக்கும்போது;  ஜாதகன் எவ்வளவுதான் ஆற்றலும் செல்வாக்கும் படைத்தவனாய் இருந்தாலும். அவனுக்கு அரசாங்கத்தின் மூலமும் பகைவர்கள் மூலமும் கெடுதல்கள் ஏற்படும். சண்டை சச்சரவுகள். பித்தநோய்கள்.திருடர்கள்.நெருப்பு இவற்றால் தீங்குகள் தோன்றும்.

3) சந்திர லக்கினத்துக்கு மூன்றாம் இடத்தில் செவ்வாய் சஞ்சரிக்கும்போது;  ஜாதகனுக்குத் திருடர்களாலும் சிறுவர்களாலும் நன்மை உண்டாகும்.அவனது செல்வம் பெருகும்.உடல் நிலை சீர்படும். மற்றவர்களை அடக்கி ஆளக்கூடிய அதிகாரமும் நிலபுலன்களின் சேர்க்கையும் ஏற்படும்.

4) சந்திர லக்கினத்துக்கு நான்காம் இடத்தில் செவ்வாய் சஞ்சரிக்கும்போது; ஜாதகனுக்குக் காய்ச்சலோ வயிற்று வலியோ ஏற்படுகிறது.
அவன் விரும்பாமலே அவனுக்குத் தீயவர்களுடைய தொடர்பும்,அதனால் தீமைகளும் உண்டாகும்.அவனுக்கு எதிலும் குறைவை உண்டாக்கும்படியான நிகழ்ச்சிகள் நடக்கும்.

5) சந்திர லக்கினத்திக்கு ஐந்தாம் இடத்தில் செவ்வாய் சஞ்சரிக்கும்போது;  ஜாதகனுடைய பிள்ளைகளாலேயே அவனுக்குத் தொல்லைகள் உண்டாகும். பகைவர்களால் இடைஞ்சல் ஏற்படும். கோபமும் பயமும் அடிக்கடி தோன்றும். நோய்களால் உடல் அழகு குன்றும்.

6) சந்திர லக்கினத்துக்கு ஆறாம் இடத்தில் செவ்வாய் சஞ்சரிக்கும்போது;  ஜாதகனுக்கு இருந்த பயங்களும் பகைமைகளும் விலகிவிடும்.சண்டைகள் சமாதானம் ஆகிவிடும். ஏராளமான செல்வம் உண்டாகும்.ஜாதகன் எவருடைய தயவையும் எதிர்பாராதவனாய் இருப்பான்.

7) சந்திர லக்கினத்துக்கு ஏழாம் இடத்தில் செவ்வாய் சஞ்சரிக்கும்போது; ஜாதகனுக்கு அவனுடைய மனைவியோடு சண்டை ஏற்படும். கண் நோயும் வயிற்று வலியும் உண்டாகும்.

8) சந்திர லக்கினத்துக்கு எட்டாம் இடத்தில் செவ்வாய் சஞ்சரிக்கும்போது; ஜாதகனுக்கு இரத்தப் போக்கு ஏற்படும். அவனுடைய பணத்துக்கும் கௌரவத்துக்கும் பழுது உண்டாகும்.

9) சந்திர லக்கினத்துக்கு ஒன்பதாம் இடத்தில் செவ்வாய் சஞ்சரிக்கும்போது; ஜாதகனுக்கு உடல் வலிமை குன்றும். பொருள் விரயமும் அலைச்சலும் அவமானமும் ஏற்படும். அவன் நடமாடுவதற்கும்கூட வலுவில்லாதவனாய்த் திரிவான்.

10) சந்திர லக்கினத்துக்கு பத்தாம் இடத்தில் செவ்வாய் சஞ்சரிக்கும்போது; ஜாதகனுக்குப் பெரிய நன்மையோ தீமையோ ஏற்படமாட்டாது எனினும் பாதி காலம் (முற்பகுதி அதாவது) சிறிது தொல்லைகளும். பாதி காலம் (அதாவது பிற்பகுதி) சிறிது நன்மைகளும் ஏற்படும்.

11) சந்திர லக்கினத்துக்குப் பதினோராம் இடத்தில் செவ்வாய் சஞ்சரிக்கும்போது;  ஜாதகனுக்குத் தொட்டது எல்லாம் வெற்றியாகவே முடியும். ஏராளமான பொருள் வரவு ஏற்படும். அவன் தன்னைச் சூழ்ந்து உள்ள எல்லாரையும் காட்டிலும் மிக மேலான நிலையில் இருப்பான்.

12) சந்திர லக்கினத்துக்குப் பன்னிரண்டாம் இடத்தில் செவ்வாய் சஞ்சரிக்கும்போது;  ஜாதகனுக்குச் சொல்லமுடியாத தொல்லைகள் ஏற்படும்.பல வழிகளில் வீண் செலவுகள் நெரும். கண் வலியியினாலும்.பித்தநோயினாலும்.பெண்களுடைய கோபத்தினாலும் ஜாதகன் துன்பத்தை அடைவான்.