Type Here to Get Search Results !

திருமணமும் செவ்வாய் தோஷப் பொருத்தம்




ஜாதகப் பொருத்தம் பார்ப்பதற்கு செவ்வாய் தோஷத்தின் விதிமுறைகளையும் அனுசரிப்பது அவசியமாகும்.

பொதுவாக பெண், ஆண் ஜாதகங்களில் 2, 4, 7, 8, 12 ஆகிய வீடுகளில் செவ்வாய் இருப்பது தோஷம் ஆகும். இதை லக்னரீதியாகவும், சந்திரா லக்னம் ரீதியாகவும் எண்ணிப் பார்க்க வேண்டும்.

செவ்வாய் தனது ஆட்சி வீட்டிலோ அல்லது உச்சவீட்டிலோ, செவ்வாயுடன் குரு, சந்திரன் போன்ற சுபர்கள் சேர்ந்திருந்தாலோ, செவ்வாய் தோஷம் தானாகவே நிவர்த்தியாகிவிடும் என்றும் சிலர் செவ்வாய், சனி, சூரியன் முதலானோருடன் கூடியிருந்தாலும் செவ்வாய் தோஷம் தானாகவே நிவர்த்தியாகிவிடும் என்றெல்லாம் கூறுவது தவறான கருத்தாகும். 

ஒரு நல்ல மனிதர் தீய குணமுடைய மனிதரோடு சேரும் போது தீய பழக்கங்களை தான் நல்ல மனிதரை கெடுக்கும் நல்ல பழக்க வழக்கங்கள் எளிதில் யாரிடமும், யாரும் ஏற்ப்பதில்லை. தீய குணங்கள் யாரிடம் சேர்ந்தாலும் எளிதில் மாறவே மாறாது. வயது ஆக ஆக அந்த  மனிதருடைய வலிமை குறையத்தானே செய்யும். அதுபோலதான் செவ்வாய் தோஷம் 32 வயதிற்கு பிறகுதான் ஒரு ஜாதகருக்கு தானாகவே அதன் பலம் குறைந்து வலிமை இழந்து நிவர்த்தியாகும். இது தான் மறைக்கப்படாத உண்மையாகும்.

அப்படி என்றால் ஒரு பெண்ணுக்கோ, ஆணுக்கோ செவ்வாய் தோஷம் இருந்தால் 32 வயதிற்குள் திருமணம் செய்ய முடியாதா? என்ற கேள்வி எழுகிறது...  செய்யலாம்...  

விதிமுறைகள் : 

1.    பெண், ஆண் இருவருடைய ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் ஒருவருக்குமட்டும் இருந்தால் இவர்கள் இருவரையும் சேர்த்து வைக்கலாம். அதாவது திருமணம் செய்து வைக்கலாம் எப்போது முன்னர் நான் கூறியது போல 32 வயதிற்குப் பிறகு என்பது கவனத்தில் கொள்ளவும்.

2.    பெண், ஆண் இருவர் ஜாதகத்திலும் செவ்வாய் தோஷமிருந்தால் அந்த தம்பதியை நீங்கள் திருமணம் செய்ய நினைக்கும் வயதில் தாராளமாக செய்து வைக்கலாம்.

3.    இருவர் ஜாதகத்திலும் 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் இல்லாதிருப்பது பொருத்தமாகும்.

4.    ஆண் ஜாதகத்தில் செவ்வாய் 2, 4, 7, 8, 12ல் இருக்க, அவ்வாறே பெண் ஜாதகத்திலும் இருப்பது இதுவும் நல்ல பொருத்தமாகும்.

5.     ஆண் ஜாதகத்தில் செவ்வாய் 2, 4, 7, 8, 12ல் மற்ற கிரகங்களுடன் கூடியிருக்க, பெண் ஜாதகத்தில் செவ்வாய் 2, 4, 7, 8, 12ல் தனித்து நிற்பது இப்படி இருக்கும் அமைப்புகள் இருவருக்கும் 28 வயதிற்கு மேல் திருமணம் வெய்யலாம்மத்திம பொருத்தமாகும்.

அவ்வளவுதான் இதையல்லாம் சரிபார்த்துவிட்டு நீங்கள் சந்தோஷமாக தைரியமாக திருமணம் செய்து வைக்கலாம். வாழ்க வளமுடன்....