Type Here to Get Search Results !

ரிஷபராசி (அ) ரிஷப லக்னத்தினர்... என்ன வேலை, தொழில் செய்யலாம் ?

 ஜோதிடம் என்பது வாழ்க்கையல்ல ஒரு வழிகாட்டி



ரிஷபராசி (அ) ரிஷபலக்னம்  

அரைபயனுள்ள ராசியாகும். இதன் அதிபதி சுக்ரன். இது பெண்தன்மையுள்ளது. இராஜ குணம் உடையது. ஆர்ப்பாட்டம் செய்ய ஆசை பட்டாலும் செய்ய துணிவில்லாதது. அதிக சுய இரக்கமும் கொண்டது. உழைப்புக்கு முன்னுரிமை கொடுத்தால் வாழ்வில் உயர்வைத்தரும் இராசியாகும். நிர்வாக பலமும், ஆற்றலில் ஊக்கமும் கொண்டது. இங்கு சந்திரன் உச்சம். ராகுநிசம், சூரிய பகை, செவ்வாய் சமம், புதன், சனி நட்பு இப்படிப்பட்ட அமைப்பு கொண்ட ரிஷபராசிக்கு செந்தக்காரர்கள் எந்த வேலை தொழில் செய்தால் உயர்வடைவார்கள் என்பதை பார்ப்போம்.



இந்த இராசிக்காரர்களுக்கும் சரி. லக்னக்காரர்களுக்கும் சரி தொழில் காரகன் சனியே பாதகாதிபதியாக வருவதால் இவர்களுக்கேற்ற தொழில் எதுவென்று தெரியாமல் தவிப்பார்கள் உழைப்புக்கேற்ற ஊதியமோ, முதலீடுக்கேற்ற லாபமோ திருப்திகாரமாக கிடைப்பதற்கு அரிதாகும். பொறுமையை கடைப்பிடிப்பது மிக மிக அவசியம். ஒரு தொழில் அமைவதற்கு சிரமமாக இருக்கும் தொழில்காரகன் சனி அசுவினி 1, 2, 3, 4ம் பாதமும், பரணி 1, 2ம் பாதமும் ஏறி இருக்கும் ஜாதகருக்கு தொழில் ரீதியான முன்னேறங்கள்நிலையற்றதாகவும், சுயபலமின்றி செய்யும் தொழில் விசயங்களில் எவ்வாறு கஷ்டப்பட்டாலும் முன்னேற்றம் இருக்காது. அடிமை தொழிலும் பலம் பெறாது. ஆக சனி மேஷராசியில் இருக்க கூடாது என்பது உறுதியாகிறது. ரிஷபத்தில் ரோகிணி, மிருகசீரிஷம் நட்சத்திரங்களில் சனி இருக்க கூடாது.

மிதுனத்தில் திருவாதிரை நட்சத்திரத்தில் இருக்க கூடாது. கடகத்தில் புனர்பூசம் நட்சத்திரத்தில் இருக்க கூடாது மற்றும் பூசம் நட்சத்திரத்திலும் இருக்க கூடாது. ஆயில்யமும் வடாது. போன்ற நட்சத்திரங்களில் சனிபகவான் இருந்தால் தொழில் அமையாமல் பொருளாதார சிக்கலில் தவிப்பார்கள். இப்படி அவரவர் ஜாதகத்திளில் துல்லியமாக பார்க்கும்போது அவர்கள் நிலை தெரிந்துவிடும். இவருக்கு இந்த தோழிதான் என முடிவாக கூறிவிடலாம். கும்பம், மீனம், ரிஷபம், விருச்சகம் போன்ற வீடுகளில் சனி சாதகமாக நட்சத்திர பாதத்தில் அமைந்து இருந்து சனி ராகு, சனி கேது, சனி குரு என சேர்க்கை இல்லாமல் இருந்தால் யோகம் செய்யும் தொழிலில் யோகமே இது உறுதி.

1. ஆயுதம் சம்பந்தப்பட்ட தொழில்

2. நெருப்பு சம்மந்தப்பட்ட தொழில்

3. இரும்பு, ஆயில், எண்ணெய், பெட்ரோல், லெதர் தொழில்.

4. இராசாயனம் சம்மந்தப்ட்ட தொழில்

5. தபால்துறை, காவல், கடினமான தொழில்கள்.

6. பலவகை கூட்டுத் தொழில்கள், வதைக்கும் தொழில்கள்.

7. மறைமுக தொழில்கள்

போன்ற தொழிகளில் ரிசபராசி (அல்லது) ரிஷப லக்னகாரர்கள் யோசிக்காமல்  இந்த வகையான தொழில்களை செய்யும் போது வெற்றி பெருவது உறுதியாகிறது.

“ஜோதிட சாம்ராட்” எம்.எஸ்.மகேந்திரன் ✍




Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.