1. எனது மகளுக்கு கன்னிராசி அஸ்தம் 1ம் பாதம் எப்போது திருமணம் நடக்கும்? தவிர்க்க வேண்டிய நட்சத்திரம், தசா, எதுவென கூறுங்களேன்? - சாந்தி, சத்துவாச்சாரி.
உங்கள் மகளுக்கு ராகு தசாவில் குருபுக்தி (அ) சுக்ரபுக்தியில் 26 வயதுக்குமேல் 29 வயதிற்குள் திருமணம் நடக்கும். அஸ்தம், திருவோணம், ரோகினி, திருவாதிரை, சதயம், ஸ்வாதி, தவிர்க்கவும், ஏகதசா, தசா சந்திப்பு, ராகுதசா, குருதசா, செவ்வாய் தசா, கேது தசா தவிர்க்கவும்.
2. திருமணத்திற்குப் பிறகு என் ஜாதகத்தில் மாங்கல்ய தோஷம் என அறிந்தேன். மாங்கல்யம் நீடித்து இருக்க எனக்கு ஒரு வழிகாட்டுங்கள்? -கே. பார்வதி, ஆற்காடு.
ஸ்ரீ தியாகராஜர் திருக்கோயில் திருவெற்றியூர் ஈசன் திருக்கோயில் அங்கு சென்று இந்த ஆலயத்தில் உள்ள திரிபுரசுந்தரி என்கிற வடிவுடை அம்மனுக்கு வெள்ளிக்கிழமை குங்கும அர்ச்சனை செய்து அந்த குங்குமத்தை வீட்டிற்கு எடுத்து வந்து உங்கள் தாலியில் திலகமிட்டு வர தாலி பாக்கியம் (சமங்கலி பாக்கியம்) கிடைக்கும்.
3. கோவிலில் இரவு தங்குவது அவசியமா? - குணா, வேலூர்.
கட்டாயமில்லை, ஆனாலும் திருச்செந்தூர், திருப்பதி, குருவாயூர் கோவில்களில் இரவு தங்குவது அவசியம் இங்கு அதிகாலை தரிசனம் பார்ப்பது முக்கியம்.
4. நீடித்த ஆயுள் ஜாதகத்தில் நானே அறிய முடியுமா? - பாபு, புதூர்.
லக்னம் முதல் நான்கு இராசிகளுக்குள் புதன் மட்டும் இருந்தால் 33 வயது. சுக்ரன் மடடும் இருந்தால் 66 வயது. குரு மட்டும் இருந்தால் 100 வயது.
5.எனது மகன் கோகுல் படிப்பை தொடர முடியவில்லை, அவனுடைய ஜாதகப்படி என்ன தொழில் செய்யலாம்? திருமணகாலம் எப்போது? சொந்தமா? அன்னியமா?
கோகுல் மிதுனாரசி, புனர்பூச நட்சத்திரம், கன்னியா லக்னம், 10 வயது முதல் சனி தசை, 4ல் இருப்பதால் படிப்புதடை, 2016 ஆகஸ்டில் சனி தசை சந்திர புக்தி வந்தபிறகு ஆடம்பரம், அலங்காரம், ரெடிமேட் டிரஸ், திரவப்பொருள், உணவு சம்மத்தப்பட்ட தொழில்களை கூட்டு சேர்ந்து செய்யலாம். திருமணத்திற்கு இன்னும் 8 ஆண்டுகள் காத்திருக்கவும். அன்னிய உறவில் தான் திருமணம் நடக்கும்.