Type Here to Get Search Results !

நாக தோஷ திருமணம் பொருத்தம்

ஜாதகப் பொருத்தம் பார்ப்பதற்கு நாக தோஷ விதி முறைகளையும் அனுசரிப்பது அவசியமாகும். ஆண் - பெண் ஜாதகங்களில் 2, 4, 5, 7, 8, 12 ஆகிய இடங்களில் ராகு (அ) கேது இருப்பது நாக தோஷமாகும். இந்த விதிமுறையை லக்னம் முதற்க்கொண்டு சந்திரன் இருக்கும் இடத்தைக் கொண்டும் பார்க்க வேண்டும். 


இனி நாக தோஷ பொருத்தம் எவ்வாறு பார்ப்பது என்பது பற்றி பார்ப்போம்....

1. ஆண், பெண் இருவரது ஜாதகத்திலும் நாக தோஷம் இருந்தாலும் (அ) இல்லாவிட்டாலும் திருமணம் செய்யலாம் இது உத்தமம் ஆகும்.


2. ஆண் ஜாதகத்தில் நாக தோஷம் இருக்க, பெண் ஜாதகத்தில் நாக தோஷம் இல்லாதிருந்தால் திருமணம் செய்யக்கூடாது. இது அதமம் ஆகும்.


3. இனி ராகு (அ) கேது மேற்குறிய 2, 4, 5, 7, 8, 12 ஆகிய இடங்களில் இருந்தால் ஜோதிட சாஸ்திரம் என்ன சொல்கிறது என்ற பார்ப்போம்.


2- ல் ராகு (அ) கேது இருந்தால் மார்பு வலி, இதய வலி, சொத்து தகராறு, மனைவிக்குப்பீடை, குடும்ப வாழ்கைகையில் போராட்டம் இருக்கும்.

4ல் இருந்தால் கணவன் + மனைவி பிரிவினை ஏற்ப்படுத்தும், குடும்ப வாழ்வில் சண்டை சச்சரவு இருக்கும்.

5-ல் இருந்தால் கர்ப்பசேதம், நல்ல முடிவுக்கு வர முடியாமல் தவிப்பது, குழந்தை இல்லாத நிலை ஏற்ப்படும்.

7- ல் இருந்தால் அடிக்கடி உடல் உபாதைகள், கணவன், மனைவிக்குள் அடிக்கடி சண்டை, பிரிவினையும் ஏற்ப்பட இட முண்டு.

8-ல் இருந்தால் ஆயுள் தோஷம், நோய்கள்தாக்கம், குடும்பத்தில் அதிக பணவிரையம்,விஷக்கடி தொல்லையும் ஏற்ப்படக்கூடும்.

12-ல் மோசமான பலன்கள் கூறப்பட்டுள்ளது. இந்த இடத்தை சுபர் பார்த்தாலோ (அ) 12 ம் அதிபதி பலமாக இருந்தாலோ பெரிய பாதிப்புகள் ஏற்ப்படாது.


ஆகவே மேற்கூறிய நாக தோஷப் பொருத்தம் கவனமாக ஆராய்ந்து பொருத்தம் பார்த்து திருமணம் செய்து தம்பதிகளை சந்தோஷமாக வாழ வழிவகை செய்யுங்கள்.


வாழ்க வளமுடன்.

 “ஜோதிட சாம்ராட்”  எம்.எஸ்.மகேந்திரன் 


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.