1. நவரத்தினங்களில் எதை அணியலாம்? எதை அணிய கூடாது? - ஆச்சாரி, வேலூர்.
நல்லது செய்ய விதிக்கப்பட்ட கிரகம் வலிமை குறைந்திருந்தால் அந்த கிரகத்திற்குரிய கல்லை இணியலாம். லக்னாதிபதி நீசம், அஸ்தங்கம் என வலிமை குறைந்திருந்தால் வாழ்நாள் முழுவதும் அதற்குரிய கல்லை வலதுகை மோதிர விரலில் அணிவது நல்லது.
2. சாஸ்திர சம்பர்தாயம் என்பது உண்மையா? - செரியார்தாசன், ஆரணி.
என்ன சந்தோகம் இது. பூமியில் பிறந்தவர்கள் நம்பித்ன் ஆகவேண்டும். அதுதான் தர்மம். மகாபாரதப்
போருக்கு நல்ல நாளையும், யுத்தம் பலிக்கும் நாளையும் குறித்துக் கொண்டு அந்த நாளில்தான்
களத்தில் இறங்க வேண்டும் என்று துரியோதனன் நம்பி வந்தது சாஸ்த்திரத்தை தானே.
அந்த சாஸ்த்திரத்திற்கு பகவான் கிருஷ்ணரே பயந்து கௌரவர்களை குழப்பியது. நீங்கள் படித்திருப்பீர்களே! அப்படி இருக்க நீங்கள் இது
உண்மையா அது உண்மையா என்று உலறுகிறீர்கள் நம்புமையா அதுதான் மனிதர்களுக்கு நல்லது. அது சரி உங்கள் பெயரை கவனித்தேன் ஒ அவரா நீங்கள்.
3. எவையெல்லாம் “பாவங்கள்” என சொல்லப்படுகிறது? - கோபால், திருவலம்.
1. குழந்தைகளை அடித்தல், இம்சைப்படுத்துதல்.
2. தாய் தந்தையை நிந்தித்தல். மிருகங்களை கொடுமைபடுத்துதல்.
3. ஆலய சொத்துக்களை
அபகரித்தல், குடிக்கும் நீரை வீணாக்குதல்.
4. கலப்படம் செய்து ஏழை - எளியோரை வங்சித்தல்.
5. மாற்றான் மனைவியை நேசித்து ஆசைகாட்டி அபகரித்தல்.
6. பிறர் சொத்தை ஏமாந்நி அபகரித்தல்.
7. பணியாளர்களுக்கு ஊதியம் தராமல் ஏமாற்றுதல்.
8. வாழும் குடும்பத்தை இரண்டாக பிரித்தல்.
9. பொய்சாட்சி கூறுதல்,
மங்கையின் கற்பை சூறையாடல்.
10. காதல் புரிவோருக்கு பகையாக செயல்
படுவது இவையெல்லாம் பாவ கணக்காக எடுத்துக் கொள்ளப்படுகிறது.
உங்கள் ஜோதிட கேள்விகள் அனுப்பவேண்டிய முகவரி
மின்னஞ்சல் முகவரி ksm.news2015@gmail.com