குரு பெயர்ச்சி 2023 ஏப்ரல் 22ம் தேதி நடக்கிறது. மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு செல்வதால் எந்த ராசியினர் கவனமாக இருக்க வேண்டும் என்பதைப் பார்ப்போம்.
ஜோதிடத்தில் முக்கிய பெயர்ச்சியான சனி பெயர்ச்சி திருக்கணித பஞ்சாங்கத்தின் படி ஜனவரி 17ல் நடந்தது. இந்நிலையில் மற்றொரு முக்கிய நிகழ்வான குரு பெயர்ச்சி வரும் ஏப்ரல் 22ம் தேதி நடக்க உள்ளது.
குரு பெரும்பாலும் தீய பலன் தருவதில்லை என்றாலும், சில அமைப்புகளால் அவரால் சுப பலன்களை கொடுக்க முடியாத சூழல் இருக்கும். அப்படிப்பட்ட ராசியினர் குரு பெயர்ச்சி காலத்தில் கவனமாக செயல்படுவது அவசியம்.
தனக்காரகன், பிரகஸ்பதி, தேவ குரு என அழைக்கப்படக்கூடிய குரு பகவான், எங்கு அமர்ந்தாலும், எங்கு பார்த்தாலும் நல்ல பலனே கிடைக்கும். பொதுவாக குரு பார்க்கும் இடம் பலம் பெறும். அவர் பார்வை பெறும் இடத்தில் உள்ள ராசி, கிரகங்கள் சுபத்துவமடையும். குரு பகவான் தன்னுடைய 5, 7, 9, 11 ஆகிய இடங்களில் இருக்கும் போது மிகவும் சிறப்பான பலன்களைத் தரக்கூடியவராக இருப்பார்.
அந்த வகையில் குரு பகவான் மேஷம் ராசியில் வருவதால் மேஷ ராசிக்கும், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு ஆகிய ராசியினருக்கு மிக சிறப்பான பலனைப் பெறுவார்கள்.
கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் :
ரிஷப ராசிக்கு குரு பகவான் 12ம் வீட்டில் அதாவது விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்க உள்ளார். இதனால் விரயங்கள் மட்டுமில்லாமல், இன்னல்கள் உண்டாகும். அதுவும் ரிஷப ராசி அதிபதி சுக்கிர பகவான், பகை கிரகமாக குரு அமைவதால் செலவு அதிகரிக்க வாய்ப்புள்ளது. உங்கள் தொழில், வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் கிடைக்காமல் போகலாம். உங்களுக்கு இன்னல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
கடகம் :
கடக ராசிக்கு 10ம் ஸ்தானமான தொழில் ஸ்தானத்தில் குருவின் சஞ்சாரம் நடக்க உள்ளது. தொழில், உத்தியோகம் தொடர்பான பிரச்னைகள் ஏற்பட்டு தீரும். வேலையில் இருப்பவர்கள் அந்த வேலையை தக்கவைத்துக் கொள்வது நல்லது. பெரிய முதலீடு செய்வதை தவிர்ப்பது நல்லது. சிறியளவிலான முதலீடு நல்ல பலனைத் தரும்.
கன்னி :
கன்னி ராசிக்கு 8ம் வீடான அஷ்டம ஸ்தானமான ஆயுள், துஸ் ஸ்தானத்தில் சஞ்சரிக்க உள்ளார். இந்த காலத்தில் உங்களின் ஆரோக்கியம் மேம்படும். சில தர்ம சங்கடமான சூழலில் சிக்க வேண்டியது இருக்கும். நாம் செய்யக்கூடிய செயல் சீராக செலவது போல தோன்றினாலும், அது சரியான பலனைக் கொடுக்காததால் மனம் சங்கடப்படும். நம்மிடம் இருப்பதை விடுத்த, மனம் வேறு எதையோ நாடக்கூடிய சூழல் இருக்கும்.
விருச்சிகம் :
விருச்சிகம் குரு பகவானுக்கு 6ம் வீடான ரண, ருண, ரோக, சத்ரு ஸ்தானத்தில் சஞ்சரிக்க உள்ளார். என்றாலும் உங்கள் செயல்களில் எதிரிகளை சமாளிக்க வேண்டியது இருக்கும். பயணங்களின் போது கவனம் தேவை. மனதில் தேவையற்ற குழப்பங்கள் ஏற்படும். செயல்களில் இருக்கும் தடுமாற்றம் குருவால் சற்று தீரும். எதிரிகளிடம் கவனமாக நடந்து கொள்ளவும். நோய் ஸ்தானம் என்பதால் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.
மகரம் :
மகர ராசிக்கு குரு பகவான் 4ம் இடமான சுக, தாயார் ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உங்களுக்கு திடீர் செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆடம்பர வாழ்க்கைக்காக அதிக செலவு செய்வீர்கள். தாயின் ஆரோக்கியம் மேம்பட வாய்ப்புள்ளது. இருப்பினும் திடீர் மருந்து செலவுகள் தவிர்க்க முடியாததாக இருக்கும்.
மீனம் :
உங்கள் ராசிக்கு 2ம் இடமான தன, குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிக்க உள்ளார். இதனால் குடும்ப உறுப்பினரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. நிதி நிலை சிறப்பாக இருக்கும் என்றாலும் அதை மகிழ்ச்சியாக அனுபவிக்க மனம் இல்லாமல் இருக்கும். குடும்ப உறுப்பினர்களை அனுசரித்துச் செல்ல வேண்டிய காலம். வாழ்க்கையில் முன்னேறுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். ஆனால் அதை கடினப்பட்டேனும் சரியாக பயன்படுத்திக் கொள்ளவும்.