இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் மே 5 ஆம் தேதி சித்ரா பௌர்ணமி அன்று நிகழ உள்ளது. இருப்பினும் கிரகணம் ஜோதிடத்தில் அசுபமாக பார்க்கப்படுகிறது. சந்திர கிரகணத்தின் போது ஏற்படும் தோஷம் நீங்கி வாழ்க்கையில் நன்மைகளை பெற நீங்கள் வீட்டிலேயே எளிமையான பரிகாரங்கள் செய்யலாம்.
இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் மே 5 வெள்ளிக்கிழமை புத்த பூர்ணிமா மற்றும் சித்ரா பௌர்ணமி அன்று துலாம் ராசியில் நிகழ உள்ளது.
ஜோதிடத்தில், சந்திரன் மற்றும் சூரிய கிரகணம் மங்களகரமானதாகக் கருதப்படுவதில்லை. எனவே, மக்கள் பல எதிர்மறையான விளைவுகளை சந்திக்க நேரிடும். சந்திர கிரகணத்தின் போது ஏற்படும் தோஷம் நீங்கி வாழ்க்கையில் நன்மைகளை பெற நீங்கள் வீட்டிலேயே எளிமையான பரிகாரங்கள் செய்யலாம்.. இது உங்கள் வாழ்க்கையில் ஏற்பட உள்ள பிரச்சனைகளை நீக்குவதுடன், பணவரவு, மகிழ்ச்சி, அமைதி ஆகியவற்றை உங்களுக்கு வழங்கும்.
சந்திர கிரகணம் 2023 நிகழும் நேரம் :
இந்திய நேரப்படி, இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் மே 5 ஆம் தேதி இரவு 8.44 மணிக்கு துவங்குகிறது. இந்த சந்திர கிரகணம் இரவு 8:44 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 01.01 மணிக்கு நிறைவடைகிறது. இரவு 10 மணி 52 நிமிடம் 59 நொடிக்கு கிரகணம் உச்சம் அடையும். இந்த சந்திர கிரகணம் 4 மணி 18 நிமிடங்கள் நிகழும். கிரகணத்தின் சூதக் காலம் அதாவது தோஷம் காலை 9:00 மணி முதல் தொடங்கும்.
சந்திர கிரகணம் நிகழும் நட்சத்திரம் :
மே 5 ஆம் தேதி சந்திரகிரகணம் துலாம் ராசி, விசாக நட்சத்திரத்தில் நிகழ்கிறது. எனவே, கிரகணத்தின் போது துலாம், விருச்சிகம், தனுசு, மீனம், மேஷம் ஆகிய ராசிக்காரர்கள் சற்று கவனமாக இருக்கவும்.
இந்த 5 ராசிக்காரர்கள் கிரகண நேரத்தில் பரிகாரம் செய்ய வேண்டியது அவசியம். ஏனென்றால், சந்திர கிரகணத்தின் போது நாம் செய்யக்கூடிய செயல் நமக்கு 100 மடங்கு பலனைத் தரும் என கூறப்படுகிறது. அதனால் நாம் இறையருளை பெற கிரகண நேரத்தில் இறை மந்திரம், இறை நாமத்தை நாம் உச்சரிப்பது நல்லது.
சந்திர கிரகணத்தின் போது பாராயணம் செய்ய வேண்டிய ஸ்லோகங்கள்:
வேலை மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்பட, சந்திர கிரகணத்தின் போது, 'ஓம் ஸ்ரீ ஹ்ரீம் ஸ்ரீ கமலே கமலாலயே ப்ரஸித்-ப்ரஸித் ஸ்ரீ ஹ்ரீ ஸ்ரீ மஹாலக்ஷ்ம்யை நமஹ' என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். இந்த மந்திரத்தை கிரகண நேரத்தில் உச்சரிப்பதன் மூலம், சமூகத்தில் மரியாதை கூடும். இல்லையெனில், ‘ஒம் ஹ்ரீம் வம் சந்திர தேவாய நமஹ’ என்ற மந்திரத்தையும் உச்சரிக்கலாம்.
கிரகணத்தின் போது செய்ய வேண்டிய பரிகாரம் :
கிரகணத்திற்கு முன் சவரம் செய்து, வெள்ளிப் பாத்திரத்தில் கங்கை நீர், அரிசி, சர்க்கரை, பால் ஆகியவற்றைக் கலந்து சந்திரனுக்கு அர்க்கியம் செய்யவும். அர்க்கியம் செய்யும் போது, “ஓம் த்ரயம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்த்தனம்; உர்வாருகமிவ பந்தனான் ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத்” என்ற மந்திரத்தை உச்சரிக்கவும்.
ஒரு தேங்காயை எடுத்து 21 உங்கள் தலையை சுற்றி, ஓடும் தண்ணீரில் விடவும். இப்படி செய்வதால் உங்களுக்கு ஏற்படும் தோஷம் நீங்கும். இது சந்திரனின் நிலையை வலுவாக்குவதால், மனம் அமைதி கிடைக்கும்.
கிரகணத்தின் போது தானம் செய்ய வேண்டிய பொருட்கள் :
கிரகண தோஷம் நீங்க, சந்திரனுக்குரிய அரிசி, வெள்ளை வஸ்திரம், வெள்ளைப் பூக்கள், சர்க்கரை, முத்துக்கள், சங்கு, தயிர் போன்றவற்றை சந்திர கிரகணத்தின் போது பிறருக்கு தானம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் ஜாதகத்தில் சந்திரனின் நிலை வலுவடைந்து செல்வம் பெருகும்.