Type Here to Get Search Results !

சுகங்களை அள்ளித் தரும் சுக்கிரன் பரிகாரம்

சுகங்களை அள்ளித் தருபவர் சுக்கிர பகவான். ஆனால் ஒரு சிலருக்கு ஜாதகத்தில் சுக்கிரனின் நிலை கெட்டுப் போயிருக்கும் பட்சத்தில், அவர்களால் வாழ்வில் எந்தவிதமான ஒரு சுகத்தையும் அனுபவிக்க முடியாத நிலை இருக்கும். 


இப்படி சுக்கிரன் கிரக தோஷத்தால் தவிப்பவர்கள் வாழ்வில் மேலான இன்பங்களை பெற செய்ய வேண்டிய சுக்கிரன் பரிகாரம் குறித்து இங்கு நாம் தெரிந்து கொள்ளலாம்.


சுக்கிரன் பரிகாரம்  :

ஜாதகத்தில் சுக்கிர கிரகம் நீச்ச தன்மை அடைந்து, அதனால் சுக்கிர கிரக தோஷம் அடைந்தவர்கள் வெள்ளிக்கிழமைகளில் சுக்கிர பகவானுக்கு விரதம் இருப்பதன் மூலம் சுக்கிர கிரகத்தின் அருளைப் பெற முடியும். 


ஏதாவது ஒரு மாதத்தில் வருகின்ற ஒரு வளர்பிறை வெள்ளிக்கிழமை தினத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்து முடித்துவிட்டு, வெள்ளிக்கிழமை சுக்கிர ஹோரை நேரமான காலை 6 மணி முதல் 7 மணி குள்ளான நேரத்தில் நவகிரக சந்நிதி சென்று, சுக்கிர பகவானுக்கு மல்லிகை பூக்களை சமர்ப்பித்து, சர்க்கரை பொங்கல் அல்லது கற்கண்டுகளை நைவேத்தியம் வைத்து, நெய் தீபம் ஏற்றி 9 முறை வலம் வர வந்து, சுக்கிர பகவானை வழிபாடு செய்ய வேண்டும். 


இப்படி தொடர்ந்து 9 வாரங்கள் தவறாமல் சுக்கிர பகவான் வழிபாடு செய்ய வேண்டும். ஒன்பதாவது வாரத்தின் இறுதியில் பச்சரிசியை ஏழைப் பெண்களுக்கு தானம் செய்ய வேண்டும். இதனால் சுக்கிர பகவானின் அருள் கிடைத்து சிறப்பான வாழ்க்கை அமையும்.


ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அன்றும் காலையில் குளித்து முடித்ததும், செல்வக் கடவுளான மகாலட்சுமி தேவியின் புகழை கூறும் “ஸ்ரீ சூக்தம்” எனப்படும் மந்திர ஸ்தோத்திரங்களை பாராயணம் செய்ய வேண்டும். 


வெள்ளிக்கிழமைகளில் இளம் பச்சை, வெள்ளை நிற ஆடைகளை அணிந்து வெளியில் செல்வதன் மூலம் சுக்கிர பகவானின் அருள் கிடைக்கும். ஜாதகத்தில் சுக்கிர பகவானின் பலத்தை அதிகரிக்க, சுக்கிர பகவானின் ஆதிக்கம் நிறைந்த வைரத்தை தங்கத்தில் பதித்து, வலது கை மோதிர விரலில் அணிந்து கொள்ள வேண்டும். 




வைரக்கல் மோதிரம் அணிய விரும்பாதவர்கள் அதற்கு நிகரான ஆற்றலை கொண்ட ஜிர்கான் எனப்படும் ராசிக்கல் பதித்த மோதிரத்தை அணிந்து கொள்ளலாம்.


சுக்கிர கிரகத்தால் ஏற்பட்டிருக்கின்ற தோஷம் நீங்கி செல்வ வளம் மகிழ்ச்சியான மண வாழ்வு பெற விரும்புபவர்கள். சுக்கிர பகவானின் அம்சம் நிறைந்த 6 முக ருத்ராட்சத்தை வாங்கி, சுக்கிரனுக்குரிய பரணி, பூரம், பூராடம் ஆகிய நட்சத்திர தினத்தில் அணிந்து கொள்வதால் மேற் சொன்ன பலன்களை பெறலாம். மேலும் வெள்ளிக்கிழமைகள் தோறும் தவறாமல் லட்சுமி தேவி அல்லது ஜெகதாம்பாள் தேவி வழிபாடு செய்ய வேண்டும்.


கஞ்சனூர் அருள்மிகு அக்னீஸ்வரர் கர்ப்பகாம்பிகா சமேத திருக்கோயில்


வாழ்வில் சுக்கிர கிரகத்தால் முழுமையான நற்பலன்கள் கிடைத்து, சுகமாக வாழ விரும்புபவர்கள் வெள்ளிக்கிழமைகளில் பரணி, பூரம், பூராடம் ஆகிய நட்சத்திரங்கள் ஏதேனும் ஒன்று வருகின்ற தினத்தில் கும்பகோணம் அருகில் இருக்கின்ற கஞ்சனூர் அருள்மிகு அக்னீஸ்வரர் கர்ப்பகாம்பிகா சமேத திருக்கோயிலில் தனி சன்னதியில் இருக்கின்ற சுக்கிர பகவானுக்கு வெள்ளை நிற வஸ்திரம் சாற்றி, அபிஷேகம் மற்றும் அர்ச்சனை செய்து வழிபாடு செய்ய ஜாதகத்தில் இருக்கின்ற சுக்கிர தோஷம் நீங்கி சுக்கிர பகவானால் வாழ்வில் நன்மையான பலன்கள் ஏற்பட வழிவகுக்கும்.


சுக்கிர பகவானின் அருள் கிடைத்து வாழ்வியல் மேலானை பலனை பெற விரும்புபவர்கள் ஆணாக இருப்பின் தங்களின் மனைவியையும், பெண்ணாக இருப்பின் தங்களின் கணவரையும் அன்பாக கவனித்து, அவர்களுக்கு காண தேவைகளை பூர்த்தி செய்தாலே சுக்கிர பகவான் மனம் குளிர்ந்து சுக்கிர தோஷம் நீங்கும். 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.