Type Here to Get Search Results !

மேஷ ராசி பொதுப்பலன்கள் மற்றும் குண நலன்கள்


உழைப்பில் கண்ணும் கருத்துமாய் இருக்கும் மேஷ இராசிக்காரர்களே, உங்களின் குணங்கள் மற்றும் பண்புகளை பற்றி பார்க்கலாம். அஸ்வினி, பரணி, கிருத்திகை-1ம் பாதத்தில் பிறந்தவர்கள் மேஷ இராசிக்காரர்கள். பொதுவாக இவர்கள் செவ்வாயை ராசி நாதனாகக் கொண்டு இருப்பதால் கோப குணத்தையும், பிடிவாதத்தையும், முரட்டு சுபாவங்களையும் கொண்டு விளங்குவார்கள். 


மேஷ இராசியின் மறு பெயர்கள் :

வருடை, மை, ஆடு, தகர், மதி, கொச்சை, கொண்டல்.


நட்பு ராசிகள் :

மேஷ ராசிக்காரர்கள் கும்ப ராசிக்காரர்களுடன் நட்புடன் பழகுவர். இது தவிர சிம்மம், தனுசு, மிதுனம் ராசிக்காரர்களும் நண்பர்களாக இருப்பர். 


குணம் :

இவர்கள் உடல் வலிமையும், மன வலிமையும் மிக்கவர்களாக இருப்பர். ஒரு வேலையை எடுத்தால் அவர்கள் அயராது உழைக்கும் குணம் கொண்டவர்களாக இருப்பர். இவர்கள் எந்த ஒரு காரியத்திலும் தன்னம்பிக்கையுடன் செயல்படுவர். இவர்கள் எப்போதும் தலைமைப் பண்பு வகிக்கக் கூடியவர்கள். இவர்கள் அதிகம் தன்னை உயர்த்திக் கொள்வதில் கவனமாகவும், மற்றவர்களுக்கு அடிபணியாத குணமும் கொண்டவர்களாக இருப்பர். 


இவர்கள் கடந்த காலத்தை பற்றி நினைக்காமல் எதிர்காலத்தை பற்றி சிந்தித்து செயலாற்றும் திறன் கொண்டவர்களாக இருப்பர். இவர்கள் காதலில் நாயகனாக திகழ்வர். ஆனால் இவர்கள் எதிலும் நாட்டமில்லாமலும், எதற்கும் திருப்தி அடையாதவர்களாகவும் இருப்பர். இவர்களது குணம் காதலிக்கும்படி இருந்தாலும், இவர்களது எண்ணம் காதலிக்க விடாமல் தடுக்கும். ஆனால் இவர் நிச்சயம் காதலிப்பார். இவர்கள் தெய்வீக வழிபாடு மிக்கவர்களாக இருப்பர். 


யாராலும் முடியாத காரியம், செயல்கள் இவற்றை செய்து முடித்து பெயர் எடுப்பதே இவர்களுக்கு பிடித்தமானது. காவல்துறை, ராணுவம், விஞ்ஞானம், மின்சாரம் மற்றும் வரி தொடர்பான பணிகளில் பணியாற்றுவது சிறப்பானது. மேஷ ராசிக்காரர்கள் பொதுவாக நேர்மையானவர்கள். இவர்கள் மற்றவர்களுக்கு உதவி செய்வதில் அதிக ஈடுபாடுடன் இருப்பர். இவர்கள் தாய், தந்தை சொல் கேட்டு அவர்களை மதித்து போற்றுபவர்கள் ஆவர். இவர்கள் வீண்பழி சொற்களுக்கு செவி சாய்க்க மாட்டார்கள். தைரியமும் அஞ்சா நெஞ்சமும் இவருக்கு உடன் பிறந்தது என்பதால் எதையும் சமாளித்து விடும் ஆற்றலையும் பெற்றிருப்பார்கள்.


மேஷராசியில் பிறந்தவர்களுக்கு தேவைக்கேற்ற பண வசதிகள் ஏற்பட்டாலும் சேமிக்கும் அளவிற்கு வருவாய் இருக்காது. தான தர்மம் செய்யும் குணம் கொண்டவர் என்பதால் பிறர் இவர்களை எளிதில் ஏமாற்றி காரியத்தை சாதித்துக் கொள்வார்கள். இவர்களுக்கு பிறக்கும் பிள்ளைகள் நல்ல குணம் படைத்தவர்களாகவும், புகழ், கௌரவம் உயரப்பெற்றவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் குடும்பத்திற்காக அதிகம் உழைக்கும் உள்ளம் கொண்டவர்களாக இருப்பர்.


மேஷ இராசிக்கு அதிர்ஷ்டம் தரக்கூடியவை :

நிறம் - சிவப்பு

கடவுள் - முருகன்

தினம் - வியாழன்

எண் - 9

அதிபதி - செவ்வாய் 

கல் - வைரம், மாணிக்கம்

 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.