Type Here to Get Search Results !

செல்வ வளம் பெருக சொல்ல வேண்டிய ஸ்லோகம்...!

நமது வீடுகளில் மகாலஷ்மி கடாட்ஷம் பரிபூரணமாக இருக்க வேண்டுமானால் கீழ்க்கண்ட ஸ்லோகத்தை தினமும் மூன்று முறை கூறி வந்தால் வற்றாத செல்வ வளம் நமது வீடுகளில் நிறையும்.


ஸ்ரீ லட்சுமி ஸ்லோகம்:

அச்வாரூடம் மஹாலஷ்மீம் த்வி நேத்ரஞ்ச சதுர்புஜம்

ஸ்வர்ணாங்கீம் ஹரிவல்லாபாம் பீ நஸிம நஸ சோபிதாம்!

ஸ்ர்வாபரண ஸம்யுக்தாம் துகூலாம்பர தாரிணீம்

ஐச்வர்யதாம் ஸ்ரீலஷ்மீம்ஸர்வ ஸொபாக்ய ஸித்தயே

 

இந்த ஸ்லோகத்தை வாசிக்க இயலாதவர்கள் கீழ்க்கண்ட பிரார்த்தனையை பக்தியுடன் தினமும் மூன்று முறை வாசித்தாலே போதுமானது.

 

குதிரையின் மேல் வீற்றிருக்கும் மகாலட்சுமியே!

இரண்டு கண்களையும் நான்கு கைகளையும் உடையவறே!

தங்கம் போல் மஞ்சள் நிறமான பிரகாசமான உடலை கொண்டவளே!

செல்வத்தைத் தரும் ஐஸ்வர்யலட்சுமியே!

எங்களுக்கு சகல செளபாக்கியத்தையும் தந்தருள்வாயாக.



இதேபோன்று, தினமும் இந்த ஸ்லோகத்தையும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் செல்வ வளம் பெருகும். குடும்ப பிரச்சனைகள் படிப்படியாக குறையும்.


செல்வ வளம் பெருக ஸ்லோகம்

சிவயோஸ்தனுஜாயாஸ்து ச்ரிதமந்தாரசாகினே

சிகிவர்யதுரங்காய ஸுப்ரமண்யாய மங்களம்

பக்தாபீஷ்டப்ரதாயாஸ்து பவரோகவிநாசினே

ராஜராஜாதி வந்த்யாய ரணதீராய மங்களம்

சுப்ரமண்ய மங்களாஷ்டகம்.


பொதுப்பொருள்:

பார்வதி-பரமேஸ்வரனின் புத்திரரே, 

அண்டியவர்களுக்கு கற்பக விருட்சம் போன்று கேட்ட வரங்களைத் தருபவரே, 

சிறந்ததும் அழகானதுமான மயிலை வாகனமாகக் கொண்டவரே 

சுப்ரமண்யப் பெருமானே நமஸ்காரம். 

பக்தர்கள் விரும்பியதை அளிப்பவரே, 

ஜனன-மரண ரோகத்தைப் போக்குகிறவரே, 

குபேரனால் வணங்கப்பட்டவரே, 

அரக்கரை வதைக்கும் யுத்தத்தில் பிரியமும் தைரியமும் கொண்டவரே, 

முருகப்பெருமானே, 

நமஸ்காரம்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.