உங்கள் பிறந்த தேதியும், பெயரும் வைத்து நீங்கள் எந்த ஊரில் இடம் அல்லது வீடு வாங்கினால் யோகம் என்பதை அறியலாம்.
ஒருவரின் பிறந்த தேதி, மாதம், வருடம், இம்முறையும் கூட்டிவரும் எண் இவற்றிக்கும் நீங்கள் வாங்கும் இடமோ (அ) வீடோ அந்த ஊரின் கூட்டு எண்ணும் நட்பாக அமைந்தால் அங்கு நீங்கள் வாழும் போது யோகமான வாழ்வு ஏற்படும்.
உதாரணம் :
ஜாதகரின் பிறந்த தேதி, மாதம் வருடம் வருமாறு : 05 – 05 – 1970
அவரது விதி எண் = 27 = 9. அதற்குரிய கிரகம் செவ்வாய். அவர் கட்டியிருக்கும் வீட்டின் ஊரின் பகுதி :- ARANI = 10 = 1+0 = 1. அவரது விதி எண் 9க்கு இவர் கட்டியிருக்கும் ஊரின் பெயர் எண் 1.(9க்கு நட்பு எண் 1) கட்டிய வீட்டால் நன்மையே.
செந்த ஊரிலோ (அ) சொந்த இடத்திலோ எந்த ஊருக்கும் சென்று வாங்காதவர்கள் மேற்கூறியவற்றை மட்டும் பார்த்து கட்டுவது (அ) வாங்குவது நலம் பயக்கும்..
வெளியிடத்தில் சென்று வாங்க விருப்பபடுபவர்கள் மேற்கூறியவற்றையும் பார்க்க வேண்டும் மற்றும் கட்டலாமா, வாங்கலாமா, என்பதையும் அறிய வேண்டும். அதாவது கட்டலாம் என்பதற்கு CONSTRUCTION வாங்கலாம் என்பதற்கு APARTMAENT இவற்றின் கூட்டுத்தொகையும் உங்கள் விதி எண்ணிற்கும் நட்பாக அமைவது அவசியமாகும். கட்டலாம் – வீடு கட்டுவது, வாங்கலாம் – மனை வாங்குவது, இதில் நீங்கள் எதை செய்ய விருப்பமோ அதன் கூட்டு தொகை நட்பாக அமைய வேண்டும்.
மேலும் நீங்கள் கட்டும் வீடோ அல்லது இடமோ உங்கள் இராசிப்படி,
மேஷம் – வடக்குப்பகுதி,
கடகம் – தென்மேற்குப்பகுதி,
கன்னி – தெற்குப்பகுதி,
துலாம் – வடஅமற்குப்பகுதி,
விருச்சிகம் – கிழக்குப்பகுதி,
தனுசு – தெற்குப்பகுதி,
கும்பம் – வடகிழக்குப்பகுதி,
மீனம் – தென்கிழக்குப்பகுதி ஆகாதவையாகும்.
மற்ற இராசிகள் ரிஷபம், சிம்மம், மிதுனம், மகரம் இராசிக்காரர்கள் நகரம் அல்லது ஊரின் மத்தியப்பகுதியில் வீடு கட்டலாம் இடம் வாங்கலாம் நன்மைதரும்.
பத்திரிகையாளர்கள் என்ற போர்வையில் திராவிட இயக்கத்தைக் கொச்சைப்படுத்தி எழுதுவது- முதல்வர் ஆவேசம் பதவி வரும் போகும் கழகம் தான் நம் அடையாளம்... நம் உயிர் மூச்சு..... முதல்வர் மு.க ஸ்டாலின் பேச்சு 🖱 ரபேல் வாட்ச் விவகாரம்..நாம் போட்டுள்ள சட்டை, வேட்டி, காரை பற்றியெல்லாம் பேசி வருகிறார்கள்-அண்ணாமலை |