Type Here to Get Search Results !

சனி பெயர்ச்சி பலன்கள் : மேஷம் முதல் மீனம் ராசி வரை.. யார் யாருக்கு யோகம்... பாதிப்பு...

 

நிகழும் மங்களகரமான ஸ்வஸ்தி ஸ்ரீசோபக்ருத் வருஷம் தட்சிணாயணம் ஹேமந்த ரிது மார்கழி மாதம் 4ம் நாள் (20.12.2023)  புதன்கிழமை - உத்திரட்டாதி நக்ஷத்ரமும் - சித்தயோகமும் - வ்யதீபாத நாமயோகமும் - பவ கரணமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 27.13க்கு - மாலை 5.23க்கு ரிஷப லக்னத்தில் சனி பகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு (வாக்கியப் பஞ்சாங்கப்படி) ஆட்சியாக மாறினார். 


கும்ப ராசிக்கு வரும் சனி பகவான் தொடர்ந்து 2 1/2 வருட காலத்திற்கு இந்த ராசியில் சஞ்சாரம் செய்து அருளாசி வழங்குவார்.  அதாவது,  2026 மார்ச் 6 வரை சனி பகவான் கும்ப ராசியில் தங்கி இருப்பார். இந்த சனி பெயர்ச்சியால் எந்தெந்த ராசிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

மேஷம்


செவ்வாயை ராசி நாதனாக கொண்ட மேஷ ராசிக்காரர்களுக்கு இது லாப சனி காலமாகும். இந்த காலக்கட்டத்தில் செய்யும் தொழிலில் லாபமும், அபரிமிதமான வருமானமும் கிடைக்கும். திருமணமான தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். 


உங்களின் செல்வாக்கும், சொல்வாக்கும் உயரும். நீங்கள் தொட்டதெல்லாம் இனி பொன்னாகும். குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள் குழந்தை பாக்கியம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் அதிகரிக்கும்.


பணியில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பண வரவும், பதவி உயர்வும் இருக்கும். சக ஊழியர்களின் ஆதரவாலும், நட்பாலும் அலுவலகத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரிகள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்க வேண்டும். 


அரசியல்வாதிகளுக்கு மேலிடத்தின் ஆதரவு கிடைக்கும். எனினும் அதை முழுமையாக அனுபவிக்க முடியாத அளவுக்கு சில குறுக்கீடுகள் வரலாம். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். உங்கள் முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். 


பெண்களுக்கு மன நிம்மதியை கொடுக்கும் காலக்கட்டம். தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவார்கள். புதிய சொத்துக்களை வாங்குவீர்கள்.மாணவர்கள் உற்சாக மனநிலையுடன் கல்வியில் ஈடுபடுவார்கள். விளையாட்டிலும் வெற்றியை பெறுவார்கள்.


  • பரிகாரம் : செவ்வாய் கிழமை தோறும் முருகனை வழிபட்டு வந்தால் துன்பங்கள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும்.



ரிஷபம்

சுக்கிரனை ராசிநாதனாக கொண்ட ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சியால் பல நன்மைகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பண வரவு சரளமாக இருக்கும். குடும்பத்தில் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் கிடைக்கும். 


பழைய கடன்கள் கூட வசூலாகும். பணியில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். வருமானம் சீராக இருக்கும். நீங்கள் விரும்பிய இடமாற்றங்களும் கிடைக்கும். மேலதிகாரிகள் ஆதரவு கிடைத்தாலும், மரியாதைக்குரிய தொலைவில் இருந்து பழகுவது நல்லது. 


வியாபாரிகளுக்கு போட்டி பொறாமை அதிகரிக்கும். எனினும் பொறுமையுடன் செயல்பட்டு அதை சமாளிப்பீர்கள்.. உங்கள் சமயோஜித புத்தியால் பிரச்சனைகளில் இருந்து தப்பித்துக் கொள்வீர்கள். அரசியல்வாதிகளின் கௌரவம் உயரும். தங்கள் கட்சி தொண்டர்கள், நெருங்கியவர்களுக்கு மிகப்பெரிய உதவிகளை செய்து பாராட்டுக்களை பெறுவீர்கள்.


கலைத்துறையினருக்கு படிப்படியான வளர்ச்சி கிடைக்கும். புதிய வீடு வாகனம் வாங்கும் யோகம் கிட்டும். பெண்களுக்கு குடும்பத்தில் மன நிம்மதி நிலவும். மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். மாணவர்களுக்கு ஞாபக சக்தியும், அறிவாற்றலும் அதிகரிக்கும். படிப்பில் வெற்றி கிடைக்கும். பெற்றோரின் ஆதரவுடன் எதிர்கால திட்டங்களை செயல்படுத்துவீர்கள்.


  • பரிகாரம் : வெள்ளிக்கிழமை தோறும் அருகில் உள்ள பெருமாள் ஆலயங்களுக்கு சென்று வர நன்மை கிடைக்கும்


மிதுனம்


புதனை ராசிநாதனாக கொண்ட மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சியில் மனதில் தெளிவு உண்டாகும். எனவே மனதை ஒருநிலைப்படுத்தி உழைக்க தொடங்குவீர்கள். பிள்ளைகள் உங்கள் பேச்சை கேட்டு நடந்து கொள்வார்கள். 


வழக்குகளில் சாதகமான திருப்பங்கள் ஏற்படும். விட்டுக்கொடுத்து சென்று வழக்குகளை முடித்துக்கொள்ளவும். பணியில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். அலுவலகத்தில் உங்கள் மதிப்பு உயரும். விரும்பிய இடமாற்றங்கள் கிடைக்கும். மேலதிகாரிகள் உங்கள் பேச்சுக்கு செவி சாய்ப்பார்கள். 


அரசியல்வாதிகள் தொண்டர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய முயற்சி செய்வார்கள். உங்களின் அனைத்து முயற்சிகளும் வெற்றியை நோக்கி செல்லும். பொறுப்புகள் கூடும். எனினும் பிறரிடம் பேசும் போது நிதானம் தேவை. பெண்களுக்கு கணவரின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். உறவினர்கள் அனுசரித்து செல்வார்கள். பண வரவு சீராக இருக்கும்.


மாணவர்கள் கல்வியிலும் விளையாட்டிலும் சிறந்து விளங்குவார்கள். பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவு கிடைக்கும். 


  • பரிகாரம் : புதன்கிழமை பெருமாள் கோயிலுக்கு சென்று 6 முறை வலம் வர குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.


 

கடகம்


சந்திரனை ராசிநாதனாக கொண்ட கடக ராசிக்கார்களுக்கு, இந்த சனி பெயர்ச்சியினால் பிரச்சனைகள் உருவாகலாம். இதுவரை உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தில் இருந்த சனி பகவான் இன்று முதல் 8-ம் இடமான அஷ்டம ஸ்தானத்தில் நுழைகிறார். 


இந்த காலக்கட்டத்தில் வீண் அலைச்சல் ஏற்படும். ஆரோக்கியத்தில் அடிக்கடி பிரச்சனை வரும் என்பதால் மருத்துவ செலவுகள் அதிகரிக்கும்.. பொருளாதாரத்தில் பற்றாக்குறை அதிகரிக்கும், மன நிம்மதி இருக்காது. இது சோதனை காலமாக இருக்கும் என்பதால் எதையும் சிந்தித்து செயல்படுவது நல்லது. 


அஷ்டம சனிக் காலத்தில் அகலக்கால் வைக்கக்கூடாது என்பதால் புதிய தொழில் எதுவும் தொடங்க வேண்டாம். குடும்பத்திலும் பிரச்சனைகள் அதிகரிக்கும், யாருக்கேனும் வாக்குறுதி கொடுத்தால் நிறைவேற்ற முடியாது.


அரசியல்வாதிகள் தங்கள் தொண்டர்களின் ஆதரவுடன் பல பாராட்டுக்குரிய செயல்களை செய்வார்கள். எதிரிகளின் தொல்லை குறையும். கலைத்துறையினர் கடினமாக உழைத்தால் தான் வெற்றி கிடைக்கும். 


பெண்கள் நன்றாக யோசித்த பின்னரே பிறரின் வார்த்தைகளை நம்ப வேண்டும். கணவர் மற்றும் குடும்பத்தினரிடம் விட்டுக்கொடுத்து நடந்து கொள்வது நல்லது. மாணவர்கள் கடினமாக உழைத்து படிப்பதன் மூலம் நல்ல மதிப்பெண்களை பெறுவார்கள்.


  • பரிகாரம் : அம்மன் வழிபாடு எல்லா துன்பங்களையும் போக்கும்.



சிம்மம்


சூரியனை ராசி நாதனாக கொண்ட சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த சனி பெயர்ச்சியால் பொருளாதார நிலை மேம்படும். பொதுநல காரியங்களில் ஆர்வம் அதிகரிக்கும். திருமன தடை ஏற்பட்டவர்கள் விரைவில் திருமணம் கைகூடும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். குடும்பத்தில் நிம்மதி, மகிழ்ச்சி அதிகரிக்கும். 


பணியாளர்கள் கடின உழைப்பை தாரக மந்திரமாக கொண்டு செயலாற்றினால் வெற்றி கிடைக்கும். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கலில் சாதக முடிவுகள் வந்தாலும், கவனம் தேவை. அரசியல்வாதிகளுக்கு சங்கடங்கள் குறைய தொடங்கும். தொண்டர்கள் உங்கள் பெருமைகளை புரிந்து கொள்வார்கள்.


கலைத்துறையினருக்கு திறமைக்கேற்ற புகழும், கௌரவமும் கிடைக்கும். பண வரவு திருப்திகரமாக இருக்கும். நண்பர்கள் மூலம் தேவையான உதவிகள் கிடைக்கும். 


பெண்களுக்கு கணவருடனான ஒற்றுமை சுமாராகவே இருக்கும். மாணவர்கள் புத்திசாலித்தனமாக செயல்படுவார்கள்.படிப்பிலும், விளையாட்டிலும் வெற்றி காண்பீர்கள். 


  • பரிகாரம் : ஞாயிற்றுக்கிழமை சிவன் கோயிலை 11 முறை வலம் வந்தால் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும்.



கன்னி


புதனை ராசிநாதனாக கொண்ட கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த சனி பெயர்ச்சியால் செல்வாக்கும், செல்வ செழிப்பும் அதிகரிக்கும். கன்னி ராசிக்காரர்களுக்கு சனி பகவான் 6-ம் வீட்டில் அமர்ந்து முழு ராஜ யோகத்தையும் தரப்போகிறார். 


சனி பகவான தனது சொந்த வீட்டிற்கு வருவதால் நோய்கள் தீரும். அசையா சொத்துக்களை வாங்குவீர்கள். திடீர் அதிர்ஷ்டம் வரும். புதிய தொழில் தொடங்கினால் லாபம் பன்மடங்கு அதிகரிக்கும். இந்த சனி பெயர்ச்சி உங்களுக்கு விபரீத ராஜயோகங்களை தரப்போகிறது. குடும்பத்தில் ஒற்றுமை அதிகரித்து மகிழ்ச்சி நிலவும். செல்வமும் செல்வாக்கும் அதிகரிக்கும். 


பணியில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகள் ஆதரவு இருக்காது. எனினும் சக ஊழியர்களின் ஆதரவுடன் அதை சமாளிப்பீர்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கலில் சிக்கல் இருக்காது. எனினும் கவனமாக செயல்படுவது நல்லது. அரசியல்வாதிகள் அனைவரையும் அரவணைத்து செல்வார்கள். கட்சி மேலிடத்தின் ஆதரவு கிடைக்கும்.


கலைத்துறையினருக்கு சாதகமான திருப்பங்கள் ஏற்படும். உங்கள் திறமைக்கேற்ற பணமும், பாராட்டும் கிடைக்கும். சக கலைஞர்களால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். 


பெண்கள் குடும்பத்தில் மகிழ்ச்சியை காண்பார்கள். கணவருடன் ஒற்றுமை அதிகரிக்கும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். மாணவர்கள் வீண் விவாதங்களை தவிர்க்கவும். பழைய தவறுகளை திருத்திக்கொண்டு புத்துணர்ச்சி உடன் பாடங்களை படிக்கவும். 


  • பரிகாரம் : அருகில் இருக்கும் ஐயப்பன் கோயிலுக்கு சென்று வழிபட பாவங்கள் நீங்கும்.



துலாம்


சுக்கிரனை ராசிநாதனாக கொண்ட துலாம் ராசிக்காரர்ர்கள், இந்து சனி பெயர்ச்சி இதுவரை இருந்த கடினமான சூழல் மற்றும் தொல்லைகளிலிருந்து விடுபடுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி, உற்சாகம் அதிகரிக்கும். சமூகத்தில் உயர் அந்தஸ்தில் உள்ளவர்களின் நட்பு கிடைக்கும். உயர் பதவிகள் உங்களுக்கு தேடி வரும்.


பணியில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். உழைப்புக்குக்கேற்ற ஊதியம் கிடைக்கும். எனினும் சக ஊழியர்களுக்கு உங்கள் மீது பொறாமை ஏற்படலாம். எடுத்த காரியங்களில் தடை ஏற்படலாம். வியாபாரிகள் நல்ல பொருளாதார வளர்ச்சியை காண்பார்கள். கொடுக்கல், வாங்கலில் உள்ள சிரமங்கள் குறையும். அரசியல் வாதிகளுக்கு நெருங்கிய நண்பர்கள் மூலம் இடையூறு ஏற்படலாம். எனவே எவரிடமும் மனம் திறந்து பேசலாம். 


கலைத்துறையினருக்கு சுமாரான வாய்ப்புகளே கிடைக்கும். புகழை தக்கவைத்துக் கொள்ள கடும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். 


பெண்களுக்கு குழந்தைகளால் சந்தோஷம் ஏற்படும். கணவருடனான ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். புத்தாடை, அணிகலன்களை வாங்கி மகிழ்வீர்கள். மாணவர்கள் கல்வியில் மிகுந்த ஆர்வம் காட்டுவார்கள். பெற்றோரின் ஆதரவு நல்லவிதமாக இருக்கும்.. 


  • பரிகாரம்  : குலதெய்வத்தை வணங்கி வர நன்மைகள் உண்டாகும்.


விருச்சிகம்


செவ்வாயை ராசிநாதனாக கொண்ட விருச்சிக ராசி அன்பர்களுக்கு இந்த சனி பெயர்ச்சியால் திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கிடைக்கும். இது அர்த்தாஷ்டம சனி காலம். 


சனி பகவான் 4-ம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்வதால் பாதிப்புகள் இருக்காது. சனி பகவான் உங்கள் ஆசை, குறிக்கோள்களை நிறைவேற்றுவார். பண வரவும், தன வரவும் அதிகரிக்கும். பொருளாதார நிலை உயரும்.  வீடு கார், புதிய ஆடை ஆபரணம் வாங்கி மகிழ்வீஅர்கள்.. ஆஞ்சநேய வழிபாடு அற்புதங்களை நிகழ்த்தும்.


பணியில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். மனதில் புத்துணர்ச்சி அதிகரிக்கும். அரசியல்வாதிகளின் பெயரும், புகழும் வளரும். புதிய வசதிகள் உங்களை தேடி வரும். பயணங்களால் நன்மை உண்டாகும். 


கலைத்துறையினருக்கு புகழும், பாராட்டும் கிடைக்க சற்று தாமதகாமகலாம். சக கலைஞர்களிடம் உங்கள் ரகசியங்களை சொல்ல வேண்டாம். பெண்களுக்கு குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். சேமிப்பில் கவனம் செலுத்துவீர்கள். ஆலயங்களுக்கு சென்று ஆன்மீக பலம் கிடைக்கும். மாணவர்களுக்கு நினைவாற்றல் அதிகரிக்கும். தேர்வில் நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும்.


  • பரிகாரம் : செவ்வாய் கிழமைகளில் துர்க்கை அம்மனை வழிபட எதிர்ப்புகள் விலகும். தைரியம் கூடும்.



தனுசு

 

குரு பகவானை ராசி நாதனாகிய கொண்ட தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த சனி பெயர்ச்சியால்  நீங்கள் சார்ந்துள்ள துறையில் புகழின் உச்சியை நோக்கி படிப்படியாக முன்னேறுவீர்கள். 


தனுசு ராசிக்காரர்களை ஏழரை ஆண்டுகாலமாக ஆட்டிப்படைத்த ஏழரை சனி விலகப்போகிறது. இனி உங்களுக்கு பொன்னான காலம் தான். உங்கள் துன்பங்கள் துயரங்கள் நீங்கும் காலம் வந்துவிட்டது. 


நீண்ட நாட்களுக்கு முன்பு கடனாக கொடுத்த பணம் வசூலாகும். எல்லா வழிகளிலும் நன்மை கிடைக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். இதுவரை இருந்த தடைகள் அனைத்தும் நீங்கி, திருப்திகரமான பண வரவு இருக்கும்.


உயர் பதவிகள் தேடி வரும். தொழிலிலும் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். முழுமையான ராஜ யோகம் தேடி வரும். நீங்கள் புகழின் உச்சத்திற்கு செல்வீர்கள்.. 


பணியில் இருப்பவர்கள் தங்கள் பணிகளை சிறப்பாக செய்து முடிப்பார்கள்.. அரசியல் வாதிகளுக்கு பெயரும் புகழும் உயரும். தொண்டர்களின் ஆதரவுடன் கட்சியில் புதிய பொறுப்பை பெறுவீர்கள். 


கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் குறைவாகவே இருந்தாலும் பண வரவு சீராகவே இருக்கும். பெண்களுக்கு கணவரின் அன்பும், ஆதரவும் அதிகமாகவே கிடைக்கும். ஆன்மீக சுற்றுலா, இன்ப சுற்றுலா சென்று மகிழ்வீர்கள். மாணவர்களுக்கு உழைப்புக்கேற்ற மதிப்பெண்கள் கிடைக்கும் கடுமையாக உழைத்து படிக்கும் மாணவர்கள் சாதனை புரிவார்கள்.. 


  • பரிகாரம் : சனி பகவானுக்கு நல்லெண்ணை தீபம் ஏற்றி வழிபடுவது கஷ்டங்களை போகும்.



மகரம்


சனி பகவானை ராசி நாதனாக கொண்ட மகர ராசிக்காரர்களுக்கு இந்த சனி பெயர்ச்சி காலத்தில் உடல் சோர்வு அதிகரிக்கலாம். வருமானம் சீராகவே இருக்கும். ஆனால் பேராசைக்கு இடம் கொடுக்காமல் பணியாற்ற வேண்டும். நண்பர்கள் போல் பழகும் எதிரிகளிடம் கவனமாக இருக்க வேண்டும். யாராக இருந்தாலும் நன்கு யோசித்த பின்னரே ஆக்கு கொடுக்கவும். மற்றபடி கடன் தொல்லைகள் எதுவும் ஏற்படாது. 




பணியில் இருப்பவர்களுக்கு பயணங்களால் நல்ல பலன்கள் கிடைக்கும். மேலதிகாரிகள் சற்று பாராமகமாக நடந்து கொண்டாலும், தொல்லைகள் கொடுக்க மாட்டார்கள்.


அரசியல்வாதிகளின் பணியாற்றும் திறன் அதிகரிக்கும். கட்சி மேலடத்தின் ஆதரவு கிடைக்கும். புதிய பொறுப்புகள் கிடைக்கவும் வாய்ப்புள்ளது. கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கும். பெயரும், புகழும் உயரும். 


பெண்கள் கணவரின் பாராட்டுகளை எளிதில் பெறுவார்கள். ஆடை ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள்.. இல்லத்தில் நிம்மதி இருக்கும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெறுவார்கள் பெற்றோரின் ஆதரவு இருக்கும்.


  • பரிகாரம் : ஆஞ்சநேயரை வணங்கி வர வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும். 


கும்பம்


சனி பகவானை ராசி நாதனாக கொண்ட கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த சனிப்பெர்யர்ச்சி ஜென்ம சனியாக அமையும். எனினும் சனி சொந்த வீட்டில் சஞ்சரிப்பதால் எந்த பாதிப்பும் ஏற்படாது. பொருளாதாரம் திருப்தி அளிக்கும் என்றாலும், பண பற்றாக்குறையால் இரவு பகலாக பாடுபட வேண்டியிருக்கும்.  மேலும் உங்கள் உடல் நலத்தில் கவனம் செலுத்துவது நல்லது. 


இந்த காலக்கட்டத்தில் மன குழப்பங்கள் அதிகரிக்கும். சிலருக்கு ஏமாற்றங்கள் வரலாம். பொல்லாதவர்களை விட்டு விலகி நல்லவர்களுடன் இணைந்து செயல்பட்டால் நல்லது நடக்கும். இல்லையேல் பல துன்பங்களை சந்திக்க நேரிடலாம்.


பணியில் இருப்பவர்கள் அனைத்து வேலைகளையும் குறுகிய காலத்தில் முடித்து மேலதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள். பண வரவு நன்றாக இருக்கும். வியாபாரிகள் கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் நல்ல பலன்களை பெறுவார்கள். அரசியல்வாதிகளை தேடி தேடி புதிய பதவிகள் வரும். சில காரியங்களில் தடை ஏற்பட்டாலும் முடிவு சாதகமாகவே அமையும்.


கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்க கூடுதல் முயற்சி மேற்கொள்ள வேண்டி இருக்கும். ஆனால் உங்கள் சுய கௌரவத்திற்கு பங்கம் ஏற்படாது. 


பெண்களுக்கு குடும்பத்தில் அனுகூலமான சூழல் இருக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மாணவர்கள் கல்வியில் சிறப்பான கவனம் செலுத்துவீர்கள். பாடங்களை முன்னதாகவே படித்து முடித்து ஆசிரியர்களின் பாராட்டை பெறுவீர்கள். 


  • பரிகாரம் : விநாயக பெருமானை வணங்க எல்லா துன்பங்களும் நீங்கும்.



மீனம்


குரு பகவானை ராசி நாதனாக கொண்ட மீன ராசி அன்பர்களுக்கு இந்த சனி பெயர்ச்சியில் தாயின் வழியில் நன்மைகள் உண்டாகும். உங்களை விட்டு விலகி இருந்த தாய் வழி உறவினர்கள் மீண்டும் வந்து இணைவார்கள் அதிகமான பயணங்களை மேற்கொள்ள வேண்டி இருக்கும். 


குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பணியில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். ஊதிய உயர்வும் இருக்கும். மேலதிகாரிகள் உங்களை நம்பி புதிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். 


வியாபாரிகள் கூட்டாளிகளை நம்பாமல் நீங்களே முன்னின்று செயல்பட்டால் குளறுபடிகளை தவிர்க்கலாம். அரசியல்வாதிகளுக்கு கட்சி மேலடத்தின் ஆதரவு கணிசமாக உயரும். எனினும் தொண்டர்கள் பாராமுகமாகவே இருப்பார்கள். கலைத் துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். அனைத்து வேலைகளும் சுமூகமாக முடியும். 


பெண்கள், குடும்பத்தினரிம் விட்டுக்கொடுத்து, அனுசரித்து செல்லவும். மாணவர்கள் படிப்பில் வரும் இடையூறுகளை சமாளிக்க ஆற்றலை பெறுவார்கள். தெளிவான மனதுடன் படித்து நல்ல மதிப்பெண்களை பெறுவார்கள்.


  • பரிகாரம் : முருகனை வணங்க எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும்.


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.