![]() |
மண்டலாபிஷேக நிறைவு நாளையொட்டி அன்ன வாகனத்தில் சரஸ்வதி அலங்காரத்தில் வீதியுலா வந்த உற்சவர் ஆதிபீடா பரமேசுவரி காளிகாம்பாள் |
காஞ்சிபுரம், ஜூலை 31:
காஞ்சிபுரம் ஆதிபீட பரமேஸ்வரி காளிகாம்பாள் கோயிலில் மண்டலாபிஷேகத்தையொட்டி புதன்கிழமை அன்னவாகனத்தில் காளிகாம்பாள் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
காஞ்சிபுரம் ஆதிபீடா பரமேசுவரி காளிகாம்பாள் கோயில் மகா கும்பாபிஷேகத்தையொட்டி ரூ.ஒரு கோடி மதிப்பில் ஆலயம் புதுப்பிக்கப்பட்டு கடந்த ஜூன் 12 ஆம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதன் தொடர்ச்சியாக மண்டலாபிஷேக பூஜைகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. இதன் நிறைவைத் தொடர்ந்து மூலவருக்கும்,உற்வர் காளிகாம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகமும்,108 சங்காபிஷேகமும் நடைபெற்றது.
மாலையில் அம்மன் அன்னவாகனத்தில் சரஸ்வதி அலங்காரத்தில் அலங்காரமாகி ராஜவீதிகளில் வீதியுலா வந்து அருள்பாலித்தார். ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழுவின் தலைவர் ரவி என்ற ஏழுமலை தலைமையில் திருப்பணிக்குழுவினர்,அறங்காவலர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.