காஞ்சிபுரம், ஆக.29:
காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் பஜார் வீதியில் அமைந்துள்ள மாரியம்மன் கோயிலில் மண்டலாபிஷேக நிறைவையொட்டி 108 சங்காபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேருர் பஜார் வீதியில் அமைந்துள்ள மாரியம்மன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் கடந்த ஜூலை மாதம் 12 ஆம் தேதி விமரிசையாக நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து தினசரி அம்மனுக்கு மண்டலாபிஷேக பூஜைகள் நடைபெற்று வந்தன. இதன் நிறைவைத் தொடர்ந்து காலையில் மாரியம்மனுக்கு சிறப்பு கலசாபிஷேகம் மற்றும் 108 சங்காபிஷேகம் நடைபெற்றது.
பக்தர்களுக்கு அன்னதானமும் ஆலய நிர்வாகத்தின் சார்பில் வழங்கப்பட்டது.மாலையில் மூலவர் மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.