காஞ்சிபுரம், ஆக.29:
காஞ்சிபுரம் கருக்கினில் அமர்ந்தவள் கோயில் தெருவில் அமைந்துள்ள நகரீஸ்வரர் ஆலயத்தில் மகா கும்பாபிஷேக திருப்பணிகளை மேற்கொள்வதற்கான பாலாலய பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.
காஞ்சிபுரம் கருக்கினில் அமர்ந்தவள் கோயில் தெருவில் அமைந்துள்ளது காமாட்சி அம்பிகை சமேத நகரீஸ்வரர் திருக்கோயில்.பழமையான இக்கோயிலுக்கு மகா கும்பாபிஷேகம் செய்வது தொடர்பான அறங்காவலர் குழு கூட்டம் அதன் தலைவர் உதயகுமார் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் எடுத்த முடிவின்படி மகா கும்பாபிஷேகம் செய்வதற்கான திருப்பணிகள் தொடக்க பாலாலய பூஜை நடைபெற்றது.பாலாலய பூஜையொயைட்டி கணபதி ஹோமம்,நவக்கிரக ஹோமம், கோ பூஜை ஆகியனவற்றை காஞ்சிபுரம் குமரகோட்டம் முருகன் கோயில் தலைமை பூஜகர் கே.ஆர்.காமேசுவர சிவாச்சாரியார் நடத்தினார்.
பாலாலய பூஜையில் கோயில் செயல் அலுவலர் பா.முத்துலட்சுமி,அறங்காவலர்கள் பத்ரி நாராயணன்,சாய் சரவணன் ஆகியோர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.