மேஷம்
மறைமுக திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். சிறுதூர பயணங்களின் மூலம் புத்துணர்ச்சி உண்டாகும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். குடும்பத்தில் அமைதியான சூழ்நிலை உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் பிறக்கும். தடைப்பட்டு போன சில காரியங்கள் திடீரென்று நடைபெறும். அனுகூலம் நிறைந்த நாள்.
- அதிர்ஷ்ட திசை : கிழக்கு
- அதிர்ஷ்ட எண் : 1
- அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
அஸ்வினி : புத்துணர்ச்சியான நாள்.
பரணி : அமைதியான நாள்.
கிருத்திகை : தடைகள் மறையும்.
ரிஷபம்
எதிர்பாராத சில வரவுகள் கிடைக்கப் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். பேச்சுக்களில் நிதானத்துடன் இருக்கவும். புதிய உறுப்பினர்களால் சில அலைச்சல்கள் உண்டாகும். மனதளவில் புதுவிதமான மாற்றம் பிறக்கும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு மேம்படும். உத்தியோகத்தில் உங்கள் கருத்துகளுக்கு ஆதரவு கிடைக்கும். மறதி நிறைந்த நாள்.
- அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
- அதிர்ஷ்ட எண் : 2
- அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
கிருத்திகை : கவனம் வேண்டும்.
ரோகிணி : அலைச்சல் உண்டாகும்.
மிருகசீரிஷம் : ஆதரவு கிடைக்கும்.
மிதுனம்
மனதளவில் ஒருவிதமான குழப்பம் ஏற்பட்டு நீங்கும். உடனிருப்பவர்களிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். உங்கள் மீதான நம்பிக்கையில் சில மாற்றங்கள் ஏற்பட்டு நீங்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவுடன் இருக்கவும். கோபத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் தெளிவு ஏற்படும். தேவையற்ற அலைச்சல் அதிகரிக்கும். ஆசை மேம்படும் நாள்.
- அதிர்ஷ்ட திசை : மேற்கு
- அதிர்ஷ்ட எண் : 9
- அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
மிருகசீரிஷம் : குழப்பங்கள் நீங்கும்.
திருவாதிரை : மாற்றமான நாள்.
புனர்பூசம் : அலைச்சல் அதிகரிக்கும்.
கடகம்
சக ஊழியர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்லவும். மற்றவர்களுக்கு வாக்குறுதி அளிக்கும் போது சிந்தித்துச் செயல்படவும். கல்வி செயல்களில் ஆர்வமின்மை உண்டாகும். கற்றல் திறனில் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். கலைத்துறைகளில் சில மாற்றமான சூழல் ஏற்படும். வெளியூர் பயணங்கள் சாதகமாக அமையும். பூர்வீக சொத்துக்களின் வழியில் சில விரயங்கள் உண்டாகும். நிம்மதி நிறைந்த நாள்.
- அதிர்ஷ்ட திசை : வடக்கு
- அதிர்ஷ்ட எண் : 5
- அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
புனர்பூசம் : விட்டுக்கொடுத்துச் செல்லவும்.
பூசம் : ஆர்வமின்மையான நாள்.
ஆயில்யம் : விரயங்கள் உண்டாகும்.
சிம்மம்
திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். சாதுரியமான செயல்பாடுகளின் மூலம் தடைகளை வெற்றி கொள்வீர்கள். சுப காரியம் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். மாணவர்களுக்கு நினைவாற்றல் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மதிப்பு மேம்படும். பழைய பிரச்சனைகளுக்கு கலந்து ஆலோசித்து சில முடிவுகளை எடுப்பீர்கள். வெற்றி நிறைந்த நாள்.
- அதிர்ஷ்ட திசை : தெற்கு
- அதிர்ஷ்ட எண் : 7
- அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்
மகம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
பூரம் : எண்ணங்கள் ஈடேறும்.
உத்திரம் : மதிப்புகள் மேம்படும்.
கன்னி
புதிய வேலை நிமித்தமான முயற்சிகள் அதிகரிக்கும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். புதுவிதமான பொருட்கள் மீது ஆர்வம் ஏற்படும். கொடுக்கல், வாங்கல் தொடர்பான செயல்பாடுகளில் பொறுமை வேண்டும். வியாபார பணிகளில் வேலை ஆட்கள் ஆதரவாக இருப்பார்கள். உடன்பிறந்தவர்களின் ஆதரவு புதிய நம்பிக்கையை உண்டாக்கும். அனுபவம் நிறைந்த நாள்.
- அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
- அதிர்ஷ்ட எண் : 5
- அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்
உத்திரம் : முயற்சிகள் அதிகரிக்கும்.
அஸ்தம் : ஆர்வம் ஏற்படும்.
சித்திரை : நம்பிக்கை மேம்படும்.
துலாம்
கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை மேம்படும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். புதிய நண்பர்களின் மூலம் உற்சாகமடைவீர்கள். வெளியூர் பயண வாய்ப்புகள் கைகூடும். நீண்ட நாட்களாக மனதை உறுத்திய சில விஷயங்களுக்கு தெளிவான முடிவுகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். அமைதி வேண்டிய நாள்.
- அதிர்ஷ்ட திசை : வடக்கு
- அதிர்ஷ்ட எண் : 2
- அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை நிறம்
சித்திரை : ஒற்றுமை மேம்படும்.
சுவாதி : வாய்ப்புகள் கிடைக்கும்.
விசாகம் : மகிழ்ச்சியான நாள்.
விருச்சிகம்
விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். பொறுமையான பேச்சுக்கள் உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். வாக்குறுதி அளிப்பதில் சிந்தித்துச் செயல்படவும். மனதில் வித்தியாசமான சிந்தனைகள் ஏற்படும். வெளி உணவுகளை தவிர்க்கவும். உத்தியோகப் பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். விவேகம் வேண்டிய நாள்.
- அதிர்ஷ்ட திசை : கிழக்கு
- அதிர்ஷ்ட எண் : 1
- அதிர்ஷ்ட நிறம் : இளநீல நிறம்
விசாகம் : கவனம் வேண்டும்.
அனுஷம் : சிந்தித்துச் செயல்படவும்.
கேட்டை : விவேகத்துடன் செயல்படவும்.
தனுசு
குழந்தைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். கடன் தொடர்பான பிரச்சனைகள் தீரும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு ஒத்துழைப்பு கிடைக்கும். சஞ்சலமான சிந்தனைகளால் மனதளவில் தடுமாற்றம் ஏற்படும். மனதளவில் புதுவிதமான உத்வேகத்துடன் காணப்படுவீர்கள். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு உண்டாகும். பிரயாணம் நிறைந்த நாள்.
- அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
- அதிர்ஷ்ட எண் : 6
- அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்
மூலம் : பிரச்சனைகள் குறையும்.
பூராடம் : தடுமாற்றமான நாள்.
உத்திராடம் : ஈடுபாடு உண்டாகும்.
மகரம்
பெற்றோருடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். மூத்த உடன்பிறப்புகள் ஆதரவாக இருப்பார்கள். தடைபட்ட சில நிகழ்வுகள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் அமையும். உயர் அதிகாரிகளின் மூலம் நன்மை உண்டாகும். வழக்கு சார்ந்த செயல்பாடுகளில் திருப்பம் ஏற்படும். மற்றவரிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நலம் நிறைந்த நாள்.
- அதிர்ஷ்ட திசை : தெற்கு
- அதிர்ஷ்ட எண் : 3
- அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
உத்திராடம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.
திருவோணம் : வாய்ப்புகள் அமையும்.
அவிட்டம் : உதவிகள் கிடைக்கும்.
கும்பம்
குடும்பத்தில் ஒற்றுமை மேம்படும். விடாப்பிடியாக செயல்பட்டு எண்ணியதை நிறைவேற்றிக் கொள்வீர்கள். செயல்பாடுகளில் துரிதம் ஏற்படும். முக்கியமான சிலருடைய மறைமுக ஆதரவுகள் கிடைக்கும். மனதளவில் புதுவிதமான எண்ணங்கள் உண்டாகும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். வாகன வசதிகள் மேம்படும். முயற்சி மேம்படும் நாள்.
- அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
- அதிர்ஷ்ட எண் : 9
- அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
அவிட்டம் : ஒற்றுமை மேம்படும்.
சதயம் : துரிதம் ஏற்படும்.
பூரட்டாதி : வசதிகள் மேம்படும்.
மீனம்
உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். மனை சார்ந்த காரியங்களில் ஆதாயம் உண்டாகும். வியாபார ரீதியான சந்திப்புகள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். அரசு காரியங்களில் ஆதாயகரமான சூழல் ஏற்படும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பயணங்களின் வழியில் புதிய அனுபவம் உண்டாகும். உத்தியோகப் பணிகளில் மேன்மை ஏற்படும். லாபம் நிறைந்த நாள்.
- அதிர்ஷ்ட திசை : மேற்கு
- அதிர்ஷ்ட எண் : 2
- அதிர்ஷ்ட நிறம் : அடர்பச்சை நிறம்
பூரட்டாதி : ஒத்துழைப்பான நாள்.
உத்திரட்டாதி : மாற்றமான நாள்.
ரேவதி : மேன்மையான நாள்.