![]() |
சிவசக்தி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த பெரியகாஞ்சிபுரம் அன்னை ரேணுகாம்பாள் |
காஞ்சிபுரம், ஆ க.13:
பெரியகாஞ்சிபுரத்தில் உள்ள அன்னை ரேணுகாம்பாள் கோயிலில் ஆடித்திருவிழாவையொட்டி செவ்வாய்க் கிழமை மூலவர் சிவலிங்கத்துக்குள் சக்தி இருப்பது போன்ற சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
பெரியகாஞ்சிபுரம் செங்குந்தர் பூவரசந்தோப்பு தெருவில் அமைந்துள்ளது அன்னை ரேணுகாம்பாள் கோயில். இக்கோயிலின் 49 ஆம் ஆண்டு ஆடித் திருவிழா நிகழ் மாதம் 10 ஆம் தேதி தொடங்கி 20 ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.
விழாவையொட்டி தினசரி காலையில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடைபெறுகின்றன.தினசரி இரவு அம்மன் வெவ்வேறு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார்.
இதன் தொடர்ச்சியாக செவ்வாய்க்கிழமை மூலவர் அன்னை ரேணுகாம்பாள் சிவலிங்கத்துக்குள் இருப்பது போன்ற சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன.நிகழ் மாதம் 18 ஆம் தேதி காஞ்சிபுரம் கச்சபேசுவரர் ஆலயத்திலிருந்து பெண்கள் 108 பால்க்குடம் எடுத்து வந்து பாலாபிஷேகம் மற்றும் சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது.
அன்றைய தினமே கூழ்வார்த்தல், அன்னதானம்,ஊரணிப் பொங்கல் மற்றும் அம்பாள் வீதியுலா ஆகிய அனைத்தும் நடைபெறுகிறது. நிறைவு நாளான 20 ஆம் தேதி ஊஞ்சல் சேவையுடன் விழா நிறைவு பெறுகிறது.
ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.