தமிழ் ஆண்டு, தேதி - குரோதி, ஆடி 28 ↓ செவ்வாய்க்கிழமை
நாள் - கீழ் நோக்கு நாள்
பிறை - வளர்பிறை
- திதி
சுக்ல பக்ஷ அஷ்டமி - Aug 12 07:55 AM – Aug 13 09:31 AM
சுக்ல பக்ஷ நவமி - Aug 13 09:31 AM – Aug 14 10:24 AM
- நட்சத்திரம்
விசாகம் - Aug 12 08:33 AM – Aug 13 10:44 AM
அனுஷம் - Aug 13 10:44 AM – Aug 14 12:12 PM
- அமிர்தாதி யோகம் :
காலை 08.29 வரை மரணயோகம் பின்பு சித்தயோகம்.
- சுபமான காலம்
அபிஜித் காலம் - 11:48 AM – 12:38 PM
அமிர்த காலம் - 01:09 AM – 02:51 AM
பிரம்மா முகூர்த்தம் - 04:24 AM – 05:12 AM
- சந்திராஷ்டம நட்சத்திரம்
இன்று காலை 08.29 வரை ரேவதி பின்பு அஷ்வினி
- சூரியன் மற்றும் சந்திரன் நேரம்
சூரியோதயம் - 6:00 AM
சூரியஸ்தமம் - 6:27 PM
சந்திரௌதயம் - Aug 13 12:45 PM
சந்திராஸ்தமனம் - Aug 14 12:19 AM
சூர்யா ராசி - சூரியன் கடகம் ராசியில்
சந்திர ராசி - விருச்சிகம் (முழு தினம்)
- அசுபமான காலம்
இராகு - 3:20 PM – 4:53 PM
எமகண்டம் - 9:06 AM – 10:40 AM
குளிகை - 12:13 PM – 1:47 PM
துரமுஹுர்த்தம் - 08:29 AM – 09:19 AM, 11:04 PM – 11:50 PM
தியாஜ்யம் - 02:59 PM – 04:41 PM
வாரசூலை - சூலம் - North, பரிகாரம் - பால்- கோயில் பூஜைகள்:
🌷 சேலம் செவ்வாய்பேட்டை ஸ்ரீமாரியம்மன் வசந்த உற்சவம்.
🌷 சுவாமிமலை ஸ்ரீமுருகப்பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்க பூமாலை சூடியருளல்.
🌷 குரங்கனி ஸ்ரீமுத்துமாலையம்மன் பவனி வரும் காட்சி.
வழிபாடு : துர்க்கை அம்மனை வழிபட முயற்சிகள் ஈடேறும்.
- உகந்த நாள்:
புதிய ஆடை, ஆபரணம் அணிய நல்ல நாள்.
கல்வி கற்க ஏற்ற நாள்.
விதை விதைக்க உகந்த நாள்.
மனை பணிகளை தொடர சிறந்த நாள்.
ஆகஸ்ட் 13, 2024ம் தேதி மேஷம் முதல் மீனம் வரையிலா ராசிபலன்கள்
பயனற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். இணையம் சார்ந்த துறைகளில் அலைச்சல் ஏற்படும். உடன்பிறந்தவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். உயர் அதிகாரிகளிடம் அனுசரித்துச் செல்லவும். செலவுகள் மூலம் சேமிப்புகள் குறையும். சிக்கலான பிரச்சனைகள் குறையும். கொடுக்கல், வாங்கலில் கவனத்துடன் செயல்படவும். செலவு நிறைந்த நாள்.
அஸ்வினி : வாதங்களை தவிர்க்கவும்.
பரணி : அனுசரித்துச் செல்லவும்.
கிருத்திகை : கவனத்துடன் செயல்படவும்.
முயற்சிகளில் இருந்துவந்த தடைகள் குறையும். ஆடம்பர பொருட்கள் மீது ஆர்வம் உண்டாகும். உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபார அபிவிருத்திக்கான சூழல் ஏற்படும். உயர் கல்வியில் இருந்துவந்த குழப்பம் குறையும். மனதளவில் புதுவிதமான தேடல் பிறக்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். தடங்கல் மறையும் நாள்.
கிருத்திகை : தடைகள் குறையும்.
ரோகிணி : அபிவிருத்தியான நாள்.
மிருகசீரிஷம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.
எதிர்பாராத தனவரவுகள் மூலம் பொருள் சேர்க்கை உண்டாகும். நெருக்கமானவர்களிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் குறையும். உத்தியோகப் பணிகளில் திறமைகள் வெளிப்படும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நட்பு நிறைந்த நாள்.
மிருகசீரிஷம் : வரவுகள் மேம்படும்.
திருவாதிரை : திறமைகள் வெளிப்படும்.
புனர்பூசம் : முன்னேற்றம் ஏற்படும்.
கல்வி பணிகளில் ஆலோசனைகள் மூலம் தெளிவு பிறக்கும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். வேலையாட்கள் பொறுப்பறிந்து நடந்து கொள்வார்கள். பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். கலை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். வாழ்க்கை துணைவர் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வரவு நிறைந்த நாள்.
புனர்பூசம் : தெளிவுகள் பிறக்கும்.
பூசம் : ஆர்வம் அதிகரிக்கும்.
ஆயில்யம் : மகிழ்ச்சியான நாள்.
குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். மனை விற்பனையில் ஆதாயம் உண்டாகும். உறவினர்கள் வருகையால் உற்சாகமடைவீர்கள். உத்தியோகப் பணிகளில் மேன்மையான சூழ்நிலை ஏற்படும். பாதியில் நின்ற பணிகளை செய்து முடிப்பீர்கள். தொழில் தொடர்பான சிந்தனைகளில் புதிய அனுபவம் கிடைக்கும். கவனம் வேண்டிய நாள்.
மகம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.
பூரம் : உற்சாகமான நாள்.
உத்திரம் : அனுபவம் கிடைக்கும்.
மனதில் இருந்துவந்த கவலைகள் குறையும். தொழில் சம்பந்தமான புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். ஆராய்ச்சி திட்டங்களில் புதிய அனுபவம் ஏற்படும். குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். கல்வி தொடர்பான வெளியூர் பயணங்கள் மீது ஆர்வம் ஏற்படும். பாகப்பிரிவினை செயல்பாடுகளில் சாதகமான சூழல் உண்டாகும். அமைதி நிறைந்த நாள்.
உத்திரம் : கவலைகள் குறையும்.
அஸ்தம் : அனுபவம் ஏற்படும்.
சித்திரை : சாதகமான நாள்.
திடீர் செலவுகளால் சேமிப்புகள் குறையும். குடும்ப உறுப்பினர்கள் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். கணிதம் தொடர்பான துறைகளில் விவேகத்துடன் செயல்படவும். குழந்தைகளின் வழியில் சிறு சஞ்சலங்களும், வாக்குவாதங்களும் ஏற்படும். மனதில் இருந்துவந்த கருத்துகளை வெளிப்படுத்துவதன் மூலம் நிம்மதி ஏற்படும். வியாபார பணிகளில் ஏற்பட்ட மந்தத்தன்மை குறையும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.
சித்திரை : சேமிப்புகள் குறையும்.
சுவாதி : விவேகத்துடன் செயல்படவும்.
விசாகம் : மந்தமான நாள்.
உறவுகளின் வழியில் அனுசரித்துச் செல்லவும். ஆரோக்கிய விஷயங்களில் விழிப்புணர்வு வேண்டும். மாணவர்களுக்கு மறதி பிரச்சனைகள் அவ்வப்போது ஏற்படும். பழைய நினைவுகள் மூலம் செயல்பாடுகளில் ஆர்வமின்மை உண்டாகும். மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. எதிர்பாராத சில பயணங்கள் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். நன்மை நிறைந்த நாள்.
விசாகம் : அனுசரித்துச் செல்லவும்.
அனுஷம் : ஆர்வமின்மையான நாள்.
கேட்டை : அனுபவங்கள் கிடைக்கும்.
மனதளவில் சிறு சிறு குழப்பம் தோன்றி மறையும். எதிர்பாராத சில செலவுகள் உண்டாகும். உத்தியோகப் பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். உடன்பிறந்தவர்கள் வழியில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். முயற்சிகளில் மாற்றமான சூழல் ஏற்படும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். போட்டி நிறைந்த நாள்.
மூலம் : குழப்பம் மறையும்.
பூராடம் : கவனம் வேண்டும்.
உத்திராடம் : புரிதல்கள் ஏற்படும்.
இணையம் சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். துறை சார்ந்த சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உயர்நிலைக் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். தடைப்பட்ட சில பணிகளை மாறுபட்ட முறையில் செய்து முடிப்பீர்கள். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி அமைதி ஏற்படும். பரிசு கிடைக்கும் நாள்.
உத்திராடம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
திருவோணம் : முன்னேற்றம் உண்டாகும்.
அவிட்டம் : அமைதி ஏற்படும்.
உடல் ஆரோக்கியம் மேம்படும். விவசாய பணிகளில் மேன்மை உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடத்தில் மனம் விட்டுப் பேசுவதன் மூலம் தெளிவு ஏற்படும். தொழில் நிமித்தமான சிந்தனைகள் மேம்படும். மற்றவர்களிடம் வீண் வாதங்களை தவிர்க்கவும். வெளியூர் பயணங்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். அரசு பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். கவனம் வேண்டிய நாள்.
அவிட்டம் : மேன்மை உண்டாகும்.
சதயம் : சிந்தனைகள் மேம்படும்.
பூரட்டாதி : முன்னேற்றம் ஏற்படும்.
சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தெளிவு ஏற்படும். விலை உயர்த்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிர்பாராத பயணங்களின் மூலம் மனதில் மாற்றம் உண்டாகும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவதற்கான வாய்ப்புகள் அமையும். மற்றவர்களின் செயல்பாடுகள் மூலம் ஆதாயம் மேம்படும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.
பூரட்டாதி : இழுபறிகள் மறையும்.
உத்திரட்டாதி : மாற்றங்கள் ஏற்படும்.
ரேவதி : ஆதாயம் மேம்படும்.