Type Here to Get Search Results !

ரூ.1.25கோடி மதிப்பில் காஞ்சிபுரத்தில் தயாரிக்கப்பட்டு அமெரிக்காவுக்கு செல்லும் தங்கத்தேர்




 காஞ்சிபுரம் :


காஞ்சிபுரத்தில் 23 அடி உயரத்தில் இரும்பு மற்றும் தாமிர உலோகத்தால் செய்யப்பட்டு தங்க முலாம் பூசப்பட்ட ரூ.1.25 கோடி மதிப்பிலான தங்கத்தேர் விரைவில் அமெரிக்காவிற்கு அனுப்பிவைக்கப்படவுள்ளது.


காஞ்சிபுரம் காந்தி சாலையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்று ஆன்மீகப் பொருட்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனத்தின் சார்பில் ஆடர் பெறப்பட்ட தங்கத்தேரானது காஞ்சிபுரத்தை அடுத்த ஓரிக்கையில் உள்ள ஒரு மண்டபத்தில் கடந்த 75 நாட்களாக தயாரிக்கப்பட்டுள்ளது.


அமெரிக்காவில் வாஷிங்டன் மாகாணத்தில் சியாடலில் உள்ள வேதா கோயிலுக்கு தங்கரதம் ரூ.1.25 கோடியில் ஆடர் பெறப்பட்டு செய்யப்பட்டுள்ளது. 3 அடி உயரமும், 4 டன் எடையும் உடைய இரும்பு மற்றும் காப்பர் தகடுகளால் தேர் உருவாக்கப்பட்டு பின்னர் அதன் மீது தங்க முலாம் பூசப்பட்டு தேர் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.


இத்தேரை சுலபமாக எங்கும் எடுத்துச் செல்ல வசதியாக 6 பிரிவுகளாக பிரித்து எடுத்துச் செல்லலாம். ஆலயங்களில் உள்ள சிறிய சுற்றுப்பிரகாரங்களிலும் எளிதில் திருப்பிக் கொள்ள வசதியாக 35 டிகிரி திரும்பும் வகையில் நவீன தொழில் நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.


இத்தேரானது 6 பாகங்களாக பிரித்து பேக்கிங் செய்து விரைவில் அமெரிக்கா அனுப்பி வைக்கப்படவுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.