காஞ்சிபுரம், செப்.1:
காஞ்சிபுரம் அருகே கிளார் கிராமத்தில் அறம் வளர் நாயகி சமேத அகத்தீஸ்வரர் கோயிலில் உள்ள அகத்திய முனிவரின் ஆயில்ய நட்சத்திரத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன.
காஞ்சிபுரம் அருகே கிளார் கிராமத்தில் அறம் வளர் நாயகி சமேத அகத்தீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் வளாகத்தில் அகத்தியமுனிவருக்கும் அவரது மனைவி லோபமுத்திரைக்கும் தனி சந்நிதியும் உள்ளது.
அகத்திய முனிவரின் ஆயில்ய நட்சத்திரத்தையொட்டி அகத்தியருக்கும், லோப முத்திரைக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன.
இதனைத் தொடர்ந்து பல்வேறு பள்ளிகளில் பயிலும் மாணவ,மாணவியர்கள் பலரும் கலந்து கொண்டு அகத்தியரின் 108 போற்றியை ஒன்றாக இணைந்து பாராயணம் செய்தார்கள். ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள்,கிராம பொதுமக்கள் இணைந்து செய்திருந்தனர்.