காஞ்சிபுரம், செப்.1:
பெரியகாஞ்சிபுரம் யதுகுல வேணுகோபால சுவாமி கோயிலில் கண்ணன் அவதார உற்வத்தையொட்டி சனிக்கிழமை உற்சவர் வேணுகோபாலன் கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பெரியகாஞ்சிபுரம் பாண்டவ பெருமாள் கோயில் வடக்கு மாட வீதியில் அமைந்துள்ளது யதுகுல வேணு கோபால சுவாமி பஜனை கோயில்.இக்கோயிலில் ஆண்டு தோறும் கண்ணன் அவதார உற்வசம் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
நிகழாண்டு உற்சவத்தையொட்டி 5 வது நாள் நிகழ்வாக உற்சவர் யதுகுல வேணுகோபால சுவாமி கருட வாகனத்தில் அலங்காரமாகி ராஜவீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
வீதியுலாவில் நாட்டுப்புறக் கலைகளை வெளிப்படுத்தும் விதமாக பம்பை,உடுக்கை மற்றும் நாதஸ்வர கலைஞர்களின் நிகழ்ச்சியும் நடைபெற்றது.சுவாமி வரும் வழிநெடுகிலும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஆரத்தி காண்பித்து சுவாமி தரிசனம் செய்தனர்.