திருச்சி, குட் ஷெட், பெல்ஸ் கிரவுண்ட் ரோடு, ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் ஆலய அருள்மிகு பஞ்சபூதேஸ்வரர் சமேத அரூப பஞ்ச பூத நாயகி திருச்சன்னதி, அருள்மிகு அத்தி சிம்ஹாரூட வாராஹி பீடம் மற்றும் அருள்மிகு அரசமர குபேர விநாயகர், அருள்மிகு கல்யாணசுந்தர வலம்புரி விநாயகர், அருள்மிகு சப்பாணி கருப்பண்ணசாமி, அருள்மிகு சப்த கன்னிமார் சுற்று பிரகார திருச்சந்நதிகளுக்கு திருக்குட முழுக்கு சிறப்பாக நடைபெற்றது.
ஞாயிற்றுக்கிழமை காலை 7:30 மணிக்கு மேல் 9 மணிக்குள் சிம்ம லக்னத்தில் சுற்று பிரகாரம் திரு சன்னதிகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
விழா ஏற்பாடுகளை ஆலய அர்ச்சகர் சிவ செந்தில்குமார் மற்றும் திருக்கோயில் நிர்வாகித்தனர் சிறப்பாக செய்திருந்தனர். இவ்விழாவிற்கு பக்த கோடிகளும் ஊர் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டு இறையருள் பெற்றனர்.
கோவில் நிர்வாகம் சார்பில் பக்த கோடிகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றதை முன்னிட்டு மாலை 6 மணிக்கு அருள்மிகு பஞ்சபூதேஸ்வரர் உடனுறை அரூப பஞ்ச பூத நாயகி திருவீதி உலா நடைபெற்றது.