காஞ்சிபுரம், செப்.2:
பெரியகாஞ்சிபுரம் ஓ.பி.குளம் புதுத்தெருவில் அமைந்துள்ளது வேணுகோபாலசுவாமி பஜனைக் கோயில். பழமையான இக்கோயிலில் கண்ணன் அவதார உற்சவத்தையொட்டி கோயில் முன்பாக 14 ஆண்டுகளுக்குப் பின்னர் உறியடி உற்சவம் நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாநகர் முழுவதுமிருந்து திரளான இளைஞர்கள் உறியடி உற்சவத்தில் கலந்து கொண்டனர். உற்சவர் வேணுகாபாலன் குழலூதும் கண்ணன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் செய்திருந்தனர்.