காஞ்சிபுரம், அக்.29:
தீபாவளிப் பண்டிகையையொட்டி காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் நாளை வியாழக்கிழமை ராஜவீதிகளில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க இருப்பதாக கோயில் ஸ்ரீகாரியம் ந.சுந்தரேச ஐயர் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறியது,
மகாசக்தி பீடங்களில் ஒன்றான காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் தீபாவளிப்பண்டிகையொட்டி லட்சுமி,சரஸ்வதி தேவியருடன் உற்சவர் காமாட்சி சிறப்பு அலங்காரத்தில் காலை 8 மணிக்கு புறப்பாடாகி ராஜவீதிகளில் பவனி வருகிறார்.
இதனையடுத்து ராஜவீதியில் உள்ள காக்கவாக்க சத்திர மண்டகப்படிக்கும்,பின்னர் சங்கரமடத்துக்கும் எழுந்தருளி சிறப்பு தீபாராதனைகள் நடைபெறுகிறது.
இதன் தொடர்ச்சியாக ஆலய வளாகத்தில் உள்ள தீபாவளி மண்டபத்துக்கு எழுந்தருளி மந்திரபுஷ்பங்கள் சமர்ப்பிக்கும் நிகழ்வும்,சிறப்பு தீபாராதனைகளும் நடைபெறுகிறது.இத்தகவலை கோயில் ஸ்ரீகாரியம் ந.சுந்தரேச ஐயர் தெரிவித்தார்.