![]() |
சிறப்பு அலங்காரத்தில் அத்திவரதர் சயனக்கோல காட்சி |
காஞ்சிபுரம், அக்.6:
காஞ்சிபுரம் தாய் படவேட்டம்மன் ஆலயத்தில் நவராத்திரி திருவிழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை மூலவர் முத்துமாரியம்மன் அலங்காரத்திலும், சிறப்பு அலங்காரமாக அத்திவரதர் திருக்கோலக்காட்சியும் நடைபெற்றது.
காஞ்சிபுரம் ஐயப்பா நகரில் தாய் படவேட்டம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இக்கோயிலில் நவராத்திரித் திருவிழா நிகழ் மாதம் 2 ஆம் தேதி தொடங்கி வரும் 13 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தினசரி மூலவர் தாய் படவேட்டம்மன் வெவ்வேறு அலங்காரங்களில் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார்.
நவராத்திரி விழாவின் 6 வது நாள் விழாவாக மூலவர் தாய் பட வேட்டம்மன் முத்து மாரியம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
சிறப்பு அலங்காரமாக அத்திவரதர் சயனக்கோல காட்சியும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மூலவருக்கும், அத்தி வரதருக்கும் சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
வரும் 12 ஆம் தேதி மகிசாசூரன் வதமும், மறுநாள் 13 ஆம் தேதி பால்க்குட ஊர்வலமும் சங்காபிஷேகமும் நடைபெறுகிறது.
காப்புக்கட்டிய பக்தர்கள் நேரடியாக மூலவருக்கு பாலாபிஷேகம் செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.மாலையில் அம்மனுக்கு பூ ஊஞ்சல் சேவையும்,பக்தர்கள் தாலாட்டும் நிகழ்வதுடன் நவராத்திரி விழா நிறைவு பெறுகிறது.ஆலய நிர்வாகத்தின் சார்பில் பக்தர்களுக்கு தினசரி அன்னதானமும் வழங்கப்படுகிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாக அறங்காவலர் எம்.ஜி.வடிவேல்,மேலாளர் மாஸ்டர் கிருஷ்ணா ஆகியோர் தலைமையில் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.
நவராத்திரி விழாவையொட்டி ஆலயம் முழுவதும் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.