காஞ்சிபுரம், அக்.30:
காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோயிலில் பொய்கையாழ்வார் திரு வதார தின உற்சவம் புதன்கிழமை தொடங்கி வரும் நவம்பர் 8 ஆம் தேதி வெள்ளிக்கிழமை வரை நடைபெறுகிறது.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட சின்னக்காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோயிலில் பொய்கையாழ்வார் திரு அவதார உற்சவம் புதன்கிழமை தொடங்கி வரும் நவம்பர் மாதம் 8 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
ஆழ்வார்களில் முதல் ஆழ்வாரான பொய்கையாழ்வார் திரு அவதார உற்சவத்தின் முதல் நாளையொட்டி காலையில் பொய்கை ஆழ்வாருக்கு சிறப்புத் திருமஞ்சனமும்,அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன.
மாலையில் உற்சவர் பொய்கையாழ்வார் சிறப்பு அலங்காரத்தில் ஆலயத்தின் உள்பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருஅவதார உற்சவம் தொடர்ந்து வரும் நவம்பர் 8 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
நிறைவு நாளான நவம்பர் 8 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலையில் சிறப்புத் திருமஞ்சனமும், மாலையில் பொய்கையாழ்வார் வீதிஉலா வரும் நிகழ்வும் இதனையடுத்து சாற்றுமுறை உற்சவத்தோடும் விழா நிறைவு பெறுகிறது.
ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அறங்காவலர் நல்லப்பா நாராயணன் தலைமையிலான விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.