காஞ்சிபுரம், அக்.17:
அத்திவரதர் புகழுக்குரியது காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜப் பெருமாள் திருக்கோயில்.பல்லி சாபம் நீக்கும் பெருமைக்கும் உரிய இக்கோயிலில் ஐப்பசி மாத பௌர்ணமியையொட்டி காலையில் பெருமாள் திருமலையிலிருந்து அலங்கார மண்டபத்துக்கு எழுந்தருளி சிறப்புத் திருமஞ்சனம் நடைபெற்றது.
மாலையில் ஸ்ரீதேவி, பூதேவியருடன் உற்சவர் வரதராஜப் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் கோயிலின் சந்நிதி தெருவில் உள்ள ஆஞ்சநேயர் சந்நிதிக்கு எழுந்தருளி சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றது.
பின்னர் மீண்டும் ஆலயத்திற்கு வந்து சேர்ந்ததும் அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன.
ஏற்பாடுகளை ஆலய செயல் அலுவலர் எஸ்.சீனிவாசன்,மணியக்காரர் கிருஷ்ணகுமார் ஆகியோர் தலைமையில் கோயில் பட்டாச்சாரியார்கள்,பணியாளர்கள் செய்திருந்தனர்.