காஞ்சிபுரம், அக்.17:
ஐப்பசி மாதப் பிறப்பையொட்டி காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் லட்சுமி,சரஸ்வதி தேவியருடன் உற்சவர் காமாட்சி தங்கத்தேரில் வியாழக்கிழமை பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
மகா சக்தி பீடங்களில் ஒன்றான காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் ஐப்பசி மாதப் பிறப்பு மற்றும் பௌர்ணமியை யொட்டி உற்சவர் காமாட்சி அம்மன் லட்சுமி,சரஸ்வதி தேவியருடன் தங்கத்தேரில் கோயில் சுற்றுப்பிரகாரத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தங்கத்தேர் ஆலயத்தை வலம் வந்த பின்னர் கோயில் நான்கு கால் மண்டபத்திற்கு எழுந்தருளி அங்கு சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன.ஏற்பாடுகளை கோயில் ஸ்ரீ காரியம் ந.சுந்தரேச ஐயர், மணியக் காரர் சூரியநாரயணன் ஆகியோர் தலைமையில் கோயில் பட்டாச்சாரியார்கள், பணியாளர்கள் செய்திருந்தனர்.
வெள்ளிக்கிழமை சுக்ர வாரத்தையொட்டி வழக்கம் போல நடைபெறும் தங்கத்தேர் பவனியும் நடைபெறுகிறது.