Type Here to Get Search Results !

2025 புத்தாண்டில் வெற்றியை ஈட்டும் ராசிகள்


ஒவ்வொரு புத்தாண்டு தொடங்கும் போதெல்லாம் தங்களின் ராசிக்கு எப்படிப்பட்ட பலன்கள் கிடைக்கும் என அறிய நம் மனம் ஆசைப்படும். குரு, சனி, ராகு - கேது ஆகிய நீண்ட நாட்கள் ஒரு ராசியில் தங்கி பலன் தரக்கூடிய ராசிகள் அதிக தாக்கத்தைத் தரக்கூடியதாக அமையும். 




2025 புத்தாண்டில் குரு மிதுன ராசிக்கும், சனி மீன ராசிக்கும், ராகு கும்பத்திற்கும், கேது சிம்ம ராசிக்கு என பெயர்ச்சியாக உள்ளனர். இதன் காரணமாக எந்தெந்த ராசியை சேர்ந்தவர்களுக்கு அதிர்ஷ்ட ஆண்டாக அமையும், வெற்றியை ஈட்டும் ராசிகள் என்ன? என தெரிந்து கொள்வோம்.


2025 புத்தாண்டில் நடக்கும் கிரக பெயர்ச்சிகள்


  • மார்ச் 29ல் சனி பகவான் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு பெயர்ச்சியாக உள்ளார்.
  • மே 14ம் தேதி குரு பகவான் ரிஷப ராசியிலிருந்து மிதுன ராசிக்கும் பெயர்ச்சி ஆகிறார்.
  • மே 18ல் ராகு மீன ராசியிலிருந்து கும்ப ராசிக்கும், கேது கன்னியிலிருந்து சிம்ம ராசிக்கும் மாற உள்ளனர்.
  • 2025ல் நடக்கும் கிரக பெயர்ச்சி, கிரக சேர்க்கை காரணமாக ரிஷபம், சிம்மம் உள்ளிட்ட 5 ராசிகளுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி, ஆரோக்கியம் மேம்படுதல் என பல நன்மைகள் ஏற்படும்.



ரிஷபம்  :


ரிஷப ராசியை சேர்ந்தவர்களுக்கு 2025 புத்தாண்டில் பல வகையில் அதிர்ஷ்டம் நிறைந்ததாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையுடனான உறவில் இனிமை நிறைந்திருக்கும். 


குழந்தைகளின் விஷயத்தில் மகிழ்ச்சி உண்டாகும். திருமண முயற்சியில் உள்ளவர்களுக்கு நல்ல வரன் அமைந்து கல்யாணம் நடக்கும்.


நிதி நிலை சார்ந்த விஷயத்தில் குடும்ப நபர்கள், உற்றார் உறவினர் மூலம் ஆதரவு கிடைக்கும். உங்களின் செல்வ வளம், சொத்து சேர்க்கை உண்டாகும். 


கடின உழைப்புக்கான சிறப்பான வெற்றியைப் பெற்று மகிழ்வீர்கள். தொழில், வியாபாரத்தை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம்..



சிம்மம்  :


சிம்ம ராசிக்கு 2025 புத்தாண்டு பல வகையில் அதிர்ஷ்டம் நிறைந்ததாக இருக்கும். வணிகத்தில் முன்னேற்றமும், புதிய நண்பர்களின் அறிமுகமும் கிடைக்கும். அவர்கள் மூலம் புதிய வாய்ப்புகள் பெறுவீர்கள். 


தொழிலை விரிவுபடுத்த நினைப்பவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் உண்டாகும். அதுதொடர்பாக வெளியூர், வெளிநாடு மூலம் வாய்ப்புகள் கிடைக்கும். 


வேலை, கல்வி, வியாபாரம் தொடர்பாக நீங்கள் செய்யும் பயணங்கள் மூலம் சிறப்பான பலன்கள் பெறுவீர்கள். உங்களின் இறுமாப்பை விடுத்து அனுசரித்து நடப்பதால் வாழ்க்கையில் இனிமை நிறைந்திருக்கும்..



கன்னி  :


கன்னி ராசியை சேர்ந்தவர்களுக்கு 2025 புத்தாண்டில் தெய்வங்கள், கிரகங்களின் ஆசி நிறைந்ததாக இருக்கும். உங்களின் செயல்களில் வெற்றிக்கான அதிர்ஷ்டங்கள் நிறைந்திருக்கும். இந்தாண்டில் நீங்கள் முன்னெடுக்கும் எந்த ஒரு முக்கிய வேலையிலும் வெற்றி கிடைக்கும்.


உத்தியோகத்தில் முன்னேற்றம், பதவி உயர்வு கிடைக்க நல்ல வாய்ப்புகள் அமையும். அரசு வேலைக்குத் தயாராகக்குடிய நபர்களுக்கு வெற்றி கிடைக்கும்.


 சகோதர, சகோதரிகளின் ஆதரவால் வெற்றிகள் குவியும். அவர்களின் ஆலோசனையால் உங்கள் நிதி நிலைமை மேம்படும்..



துலாம் :


துலாம் ராசிக்காரர்களுக்கான2025 புத்தாண்டில் தொழில் ரீதியாக உங்களுக்கு மிகவும் சாதகமான பலன்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் பதவியும், பாராட்டும் கிடைக்கும். கடின உழைப்புக்கான பலனை அனுபவிப்பீர்கள்.


சொந்த தொழில் தொடர்பாக கூட்டாளிகளின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். கூட்டுத் தொழிலில் முன்னேற்றம் உண்டு. உங்களின் வருமானம் உயர்வதற்கான சாதக சூழல் இருக்கும். 


செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். ஆன்மிக யாத்திரை செல்லலாம்..




விருச்சிக :


விருச்சிக ராசிக்கு 2025 புத்தாண்டில் மிக சிறப்பான பலன்கள் கிடைக்கும். ஆக்கப்பூர்வமான செயலில் ஈடுபடுவீர்கள்.உங்களின் இனிமையான பேச்சு, நகைச்சுவை உணர்வால் பிறர் ஈர்க்கப்படுவார்கள்.


குடும்பத்திலும், பணியிடத்திலும் மற்றவர்களுடனான உறவை வலுப்படுத்துவீர்கள். உத்தியோகத்தில் பணிச்சூழல் சிறப்பாக இருக்கும். புதிய பொறுப்புகளைப் பெறுவீர்கள்.


உங்களின் வருமானம், சேமிப்பு உயரும். உங்களின் முந்தைய கடின உழைப்பு, முதலீடுகள் மூலம் லாபம் பெற வாய்ப்புள்ளது. வியாபாரத்தில் நல்ல பலன்களைப் பெறத் தொடங்குவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும்..

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.