2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறும் சனி பெயர்ச்சியால் இந்த மூன்று ராசிகளுக்கு இதுவரை இருந்த துரதிருஷ்டம் நீங்கி, அவர்களின் கஜானாவில் பணம் குவியும்.
2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29ஆம் தேதி அன்று சனி பகவான் (Lord Saturn) கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். இதனால், இந்த மூன்று ராசிகளுக்கு பண பலன் மட்டுமின்றி உடல் ஆரோக்கியம் சார்ந்தும், மன நலன் சார்ந்தும் நீடித்த பிரச்னைகள் நீங்கும்.
![]() |
ஏரிக்குப்பம் எந்திர சனீசுவரன் |
2025ஆம் ஆண்டு பல்வேறு கிரகங்கள் பெயர்ச்சி அடைகிறது. அதிலும் நீதி கடவுளாக பெயர்ச்சி சனி கிரகமும் (Lord Saturn) அடுத்தாண்டு மார்ச் மாதம் பெயர்ச்சி அடைகிறது. மார்ச் 29ஆம் தேதி இரவு 11.01 மணியளவில் சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி அடைய உள்ளார்.
சனி பகவான் பெயர்ச்சி அடைவதால் சில ராசிகளுக்கு அசுப பலன்கள் ஏற்படும். அதேநேரத்தில் சில ராசிகளுக்கு அதிர்ஷ்டமும் இருக்கிறது.
அந்த வகையில், 2025ஆம் ஆண்டு நடைபெறும் சனி பெயர்ச்சியால் இந்த மூன்று ராசிகளுக்கு இதுவரை இருந்த துரதிருஷ்டம் நீங்கி, அவர்களின் கஜானாவில் பணம் குவியும் என கணிக்கப்பட்டுள்ளது.
அவை எந்தெந்த ராசிகள் என்பதை இங்கு காணலாம்..
ரிஷபம்
அடுத்தாண்டு சனி பெயர்ச்சியால் ரிஷப ராசிக்காரர்களின் வேலைகள் மற்றும் வியாபாரத்தில் பெரிய மாற்றங்கள். தந்தையுடனான உறவு பலப்படும். குடும்பத்தில் உங்களின் மதிப்பும், மரியாதையும் அதிகமாகும்.
உங்களின் கடின உழைப்பும் அதிகரிக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும் வாய்ப்பும் உண்டு. அனைத்து பாதியில் நின்ற வேலைகளும் நிறைவடையும்.
துலாம்
சனி பகவானின் அடுத்தாண்டு பெயர்ச்சியால் சிறப்பு பலன்கள் கிடைக்கும். மீன ராசிக்கு சனி பகவான் பெயர்ச்சி ஆவதால் துலாம் (Libra) ராசியின் ஆறாம் வீட்டில் சனி இருப்பார். இதனால் எதிரிகள் தொல்லை துலாம் ராசிகளுக்கு நீங்கும்.
மன அழுத்தத்தில் இருந்து நிவாரணம் கிடைக்கும். நீதிமன்ற வழக்குகளில் வெற்றி கிடைக்கும். உடல்நலப் பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைக்கும்.
மகரம்
சனி பகவானின் அசுப தாக்கத்தில் இருந்து மகரம் (Capricon), அடுத்தாண்டு பெயர்ச்சியின்போது விடுபடும். இதனால், இந்த ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை உயரும்.
உடல்நலப் பிரச்னைகள் தீரும். பணப்பிரச்னைகள் ஓடோடிப் போகும். நின்றப்போன வேலைகள் மீண்டும் தொடங்கும். புதிய வேலைகள் கிடைக்கும். காதலிப்பவரின் முழு ஆதரவும் கிடைக்கும். முதலீட்டால் பெரும் நன்மைகளும் விளையும்.