காஞ்சிபுரம் :
காஞ்சிபுரத்திலிருந்து வந்தவாசி செல்லும் சாலையில் கூழமந்தல் கிராமத்தில் அமைந்துள்ள 27 நட்சத்திரத் திருக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை வருண பகவானுக்கு மழை சீராக பெய்ய வேண்டி சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகளும் நடைபெற்றன.
காஞ்சிபுரத்திலிருந்து வந்தவாசி செல்லும் சாலையில் கூழமந்தல் கிராமத்தில் 27 நட்சத்திரத் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் 27 நட்சத்திரங்களுக்கும் உரிய அதிதேவதைகளும், மரக்கன்றுகளும் உள்ளன.
இக்கோயிலில் உள்ள வருண பகவானுக்கு மழை பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் இல்லாமலும், விவசாயத்துக்கு பயன்படக்கூடிய வகையிலும் பெய்ய வேண்டி வருண பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன.