காஞ்சிபுரம், நவ.16:
கார்த்திகை மாதப் பிறப்பையொட்டி காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் ஸ்ரீதேவி,பூதேவியருடன் உற்சவர் தேவராஜசுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அத்திவரதர் புகழ் பெற்ற காஞ்சிபுரம் வரதராஜசுவாமி கோயிலில் கார்த்திகை மாதப் பிறப்பையொட்டி அத்திகிரி மலையிலிருந்து உற்சவர் வரதராஜப் பெருமாள் காலையில் அலங்கார மண்டபத்துக்கு எழுந்தருளினார். அங்கு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன.
மாலையில் ஸ்ரீதேவி, பூதேவியருடன் உற்சவர் வரதராஜப் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் கோயில் சந்நிதி தெருவில் உள்ள ஆஞ்சநேயர் சந்நிதிக்கு எழுந்தருளி சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து கோயில் வளாகத்திற்குள் ஆழ்வார் சுற்றுப்பிரகாரம் வழியாக பவனி வந்து மீண்டும் அலங்கார மண்டபத்துக்கு எழுந்தருளி தீபாராதனைகள் நடைபெற்றது.
ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் ச.சீனிவாசன் தலைமையில் பட்டாச்சாரியார்கள்,பணியாளர்கள் செய்திருந்தனர்.