Type Here to Get Search Results !

நாளைய (18-11-2024) ராசி பலன்கள்

 



பஞ்சாங்கம்

கார்த்திகை 3 - திங்கட்கிழமை - கரிநாள்

திதி : அதிகாலை 12.04 வரை துவிதியை பின்பு இரவு 10.49 வரை திரிதியை பின்பு சதுர்த்தி

நட்சத்திரம் : இரவு 07.56 வரை மிருகசீரிஷம் பின்பு திருவாதிரை

அமிர்தாதி யோகம் : காலை 06.14 வரை  சித்தயோகம் பின்பு இரவு 07.56 வரை அமிர்தயோகம் பின்பு சித்தயோகம்

சந்திராஷ்டம நட்சத்திரம்  : இரவு 07.56 வரை விசாகம் பின்பு அனுஷம்

பண்டிகை : ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீகள்ளபிரானுக்கு பால் அபிஷேகம்.

வழிபாடு : கோமாதாவை வழிபட முயற்சிகளில் வெற்றிகள் கிடைக்கும்.

எதற்கெல்லாம் உகந்த நாள் :

 பயணம் மேற்கொள்வதற்கு ஏற்ற நாள்.

விவசாய பணிகளை செய்ய சிறந்த நாள்.

பற்களை சீர் செய்வதற்கு உகந்த நாள்.

அபிஷேகம் செய்வதற்கு நல்ல நாள்.



லக்ன நேரம் (திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது)

லக்னம்நேரம் மேஷ லக்னம் 03.54 PM முதல் 05.38 PM வரை

 ரிஷப லக்னம் 05.39 PM முதல் 07.41 PM வரை 

மிதுன லக்னம் 07.42 PM முதல் 09.52 PM வரை 

கடக லக்னம் 09.53 PM முதல் 12.00 AM வரை 

சிம்ம லக்னம் 12.01 AM முதல் 02.02 AM வரை 

கன்னி லக்னம் 02.03 AM முதல் 04.02 AM வரை 

துலாம் லக்னம் 04.03 AM முதல் 06.08 AM வரை 

விருச்சிக லக்னம் 06.09 AM முதல் 08.23 AM வரை 

தனுசு லக்னம் 08.24 AM முதல் 10.31 AM வரை 

மகர லக்னம் 10.32 AM முதல் 12.25 PM வரை 

கும்ப லக்னம் 12.26 PM முதல் 02.08 PM வரை 

மீன லக்னம் 02.09 PM முதல் 03.49 PM வரை


ராசி பலன்கள் :

மேஷம்

மனதளவில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். வியாபாரம் நிமித்தமான நவீன கருவிகளைக் கொள்முதல் செய்வீர்கள். கொடுக்காமல் இருந்துவந்த இழுபறிகள் மறையும். எதிலும் சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். தந்தை வழியில் ஒத்துழைப்புகள் உண்டாகும். திட்டமிட்ட பணிகள் கைகூடிவரும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். நன்மை நிறைந்த நாள்.

  • அதிர்ஷ்ட திசை : தெற்கு
  • அதிர்ஷ்ட எண் : 2
  • அதிர்ஷ்ட நிறம் : வெளிர்மஞ்சள் நிறம்

அஸ்வினி : தெளிவுகள் பிறக்கும்.

பரணி : இழுபறிகள் மறையும்.

கிருத்திகை : ஆதரவான நாள்.

 

ரிஷபம்

கனிவான பேச்சுக்கள் மூலம் ஆதாயம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சீராகும். கொடுக்கல் வாங்கலில் லாபம் ஏற்படும். கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். புதிய வகை உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. குடும்பத்தாரின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். புதிய நபர்களின் அறிமுகங்கள் உண்டாகும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.

  • அதிர்ஷ்ட திசை : தெற்கு
  • அதிர்ஷ்ட எண் : 3
  • அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

கிருத்திகை : ஆதாயம் உண்டாகும்.

ரோகிணி : ஆர்வமின்மை குறையும்.

மிருகசீரிஷம் : அறிமுகங்கள் உண்டாகும்.

 

மிதுனம்

நண்பர்களைப் பற்றிய புரிதல் ஏற்படும். எதிலும் தாழ்வு மனப்பான்மையின்றி செயல்படவும். மற்றவர்களுடன் ஒப்பிடுவதை தவிர்க்கவும். கலைத் துறைகளில் கவனம் வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். மனதில் புதுவிதமான எண்ணங்கள் மலரும். நெருக்கமானவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். கால்நடை விஷயங்களில் தெளிவுகள் ஏற்படும். வெற்றி நிறைந்த நாள்.

  • அதிர்ஷ்ட திசை : மேற்கு
  • அதிர்ஷ்ட எண் : 2
  • அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை நிறம்

மிருகசீரிஷம் : புரிதல் ஏற்படும்.

திருவாதிரை : கவனம் வேண்டும்.

புனர்பூசம் : தெளிவுகள் ஏற்படும்.

 

 

கடகம்

நினைத்த பணிகள் முடிவதில் தாமதம் உண்டாகும். சமூகப் பணிகளில் உழைப்பு அதிகரிக்கும். ஆடம்பரமான செலவுகளைத் தவிர்க்கவும். கடன் சார்ந்த விஷயங்களில் பொறுமை வேண்டும். மனதளவில் புதுவிதமான கண்ணோட்டங்கள் பிறக்கும். இரவு சார்ந்த பணிகளில் கவனத்துடன் இருக்கவும். நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கவலை விலகும் நாள்.

  • அதிர்ஷ்ட திசை : தெற்கு
  • அதிர்ஷ்ட எண் : 3
  • அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

புனர்பூசம் : தாமதம் உண்டாகும்.

பூசம் : பொறுமை வேண்டும்.

ஆயில்யம் : புரிதல்கள் மேம்படும்.

 

  

சிம்மம்

வரவுகள் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு மேம்படும். சிந்தனைப் போக்கில் மாற்றம் உண்டாகும். கலை சார்ந்த துறைகளில் மேன்மை ஏற்படும். கல்விப் பணிகளில் இருந்துவந்த குழப்பம் விலகும். சமூகப் பணிகளில் மதிப்புகள் மேம்படும். பொருளாதார சிக்கல்கள் குறையும். வரவு நிறைந்த நாள்.

  • அதிர்ஷ்ட திசை : தெற்கு
  • அதிர்ஷ்ட எண் : 7
  • அதிர்ஷ்ட நிறம் :  வெளிர்மஞ்சள் நிறம்

மகம் : சேமிப்புகள் அதிகரிக்கும்.

பூரம் : மாற்றம் உண்டாகும்.

உத்திரம் : சிக்கல்கள் குறையும்.

 

 

கன்னி

எதிர்காலம் தொடர்பான சில முடிவுகளை எடுப்பீர்கள். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். குழந்தைகளின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். வீடு பராமரிப்பு சார்ந்த எண்ணங்கள் மேம்படும். தொழில் நிமித்தமான அலைச்சலால் அனுபவம் மேம்படும். சொந்த ஊர் தொடர்பான பயணம் கைகூடும். அரசு தொடர்பான காரியங்களில் சாதகமான சூழ்நிலை ஏற்படும். இன்னல்கள் மறையும் நாள்.

  • அதிர்ஷ்ட திசை : வடக்கு
  • அதிர்ஷ்ட எண் : 9
  • அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

உத்திரம் : ஆதரவான நாள்.

அஸ்தம் : அனுபவம் மேம்படும்.

சித்திரை : சாதகமான நாள்.

 

 

துலாம்

உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். பொருளாதார ரீதியான நெருக்கடிகள் குறையும். மனதளவில் இருந்த குழப்பங்கள் விலகும். வியாபாரத்தில் பொறுப்புகள் மேம்படும். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். ஆலய வழிபாடுகள் மூலம் மனத் தெளிவுகள் உண்டாகும். தடையாக இருந்தவர்களை வெற்றி கொள்வீர்கள். உறுதி வேண்டிய நாள்.

  • அதிர்ஷ்ட திசை : மேற்கு
  • அதிர்ஷ்ட எண் : 2
  • அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிகப்பு நிறம்

சித்திரை : நெருக்கடிகள் குறையும்.

சுவாதி : பொறுப்புகள் மேம்படும்.

விசாகம் : தெளிவுகள் உண்டாகும்.

 

 

விருச்சிகம்

நெருக்கமானவர்களைப் பற்றிய புரிதல் மேம்படும். மனதில் இனம் புரியாத தேடல்கள் உண்டாகும். உயர் அதிகாரிகள் இடத்தில் அனுசரித்து செல்லவும். சிந்தனை போக்கில் கவனம் வேண்டும். தொழில் நிமித்தமான அலைச்சல்கள் அதிகரிக்கும். வழக்கு விஷயங்களில் தாமதம் ஏற்படும். பயணம் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். கவனம் வேண்டிய நாள்.

  • அதிர்ஷ்ட திசை : தெற்கு
  • அதிர்ஷ்ட எண் : 3
  • அதிர்ஷ்ட நிறம் : அடர்மஞ்சள் நிறம்

விசாகம் : புரிதல் மேம்படும்.

அனுஷம் : அனுசரித்து செல்லவும்.

கேட்டை : அனுபவம் கிடைக்கும்.

 

தனுசு

எதிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். சிந்தனைகளில் தெளிவுகள் பிறக்கும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். கணவன்மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். போட்டிகளில் ஈடுபட்டு திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். பெருமை நிறைந்த நாள்.

  • அதிர்ஷ்ட திசை : கிழக்கு
  • அதிர்ஷ்ட எண் : 6
  • அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்

மூலம் : தெளிவுகள் பிறக்கும். 

பூராடம் : எண்ணங்கள் கைகூடும்.

உத்திராடம் : திறமைகளை வெளிப்படுத்துவீர்கள்.

 

 

மகரம்

கடினமான வேலைகளையும் எளிதாக முடிப்பீர்கள். சகோதர வகையில் ஆதரவு ஏற்படும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். வெளிநாடு தொடர்பான வாய்ப்புகள் சாதகமாகும். பணிகளில் இருந்துவந்த போட்டிகள் குறையும். செலவு நிறைந்த நாள்.

  • அதிர்ஷ்ட திசை : வடக்கு
  • அதிர்ஷ்ட எண் : 4
  • அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

உத்திராடம் : ஆதரவு ஏற்படும்.

திருவோணம் : வார்த்தைகள் கைகூடும்.

அவிட்டம் : போட்டிகள் குறையும்.

 

 

கும்பம்

வித்தியாசமான முயற்சிகளில் ஆர்வம் உண்டாகும். தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். நண்பர்கள் வழியில் விட்டுக்கொடுத்து செல்லவும். எழுத்து சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தள்ளிப்போன சுபகாரியங்கள் கைகூடிவரும். உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். வழக்கு சார்ந்த பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். ஆசைகள் பிறக்கும் நாள்.

  • அதிர்ஷ்ட திசை : தெற்கு
  • அதிர்ஷ்ட எண் : 3
  • அதிர்ஷ்ட நிறம் : அடர்மஞ்சள் நிறம்

 

அவிட்டம் : ஆர்வம் உண்டாகும்.

சதயம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

பூரட்டாதி : முன்னேற்றமான நாள்.

 

 

மீனம்

தனம் சார்ந்த நெருக்கடிகள் குறையும். புத்திரர்கள் பற்றிய சிந்தனைகள் மனதில் மேம்படும். உறவினர்கள் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். எளிமையான பணிகள் கூட தாமதமாக முடியும். கடன் பிரச்சனைகளுக்கு தெளிவு உண்டாகும். கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். உடல் ஆரோக்கியம் பற்றிய ஆலோசனை கிடைக்கும்.  ஆக்கப்பூர்வமான நாள்.

  • அதிர்ஷ்ட திசை : தெற்கு
  • அதிர்ஷ்ட எண் : 7
  • அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

பூரட்டாதி : நெருக்கடிகள் குறையும்.

உத்திரட்டாதி : தெளிவுகள் உண்டாகும்.

ரேவதி : ஆலோசனை கிடைக்கும். 

 

 

 

 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.